இரண்டு நொடிகள் ராகேஷ் கண்களை மூடித் திறக்க, அங்கே அந்தப் புதியவனும், லயனிகாஸ்ரீயும் இல்லை. அடுத்த பத்து நிமிடங்களுக்கு, இருவரையும் வெறி கொண்டு தேடியவன்… அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை என்றதும், தனது காவல்துறை நண்பனை கைபேசியில் அழைத்தான்.
அழைப்பை எடுத்த அவனது நண்பனும், துணை ஆய்வாளருமான சுதீப், “என்ன மச்சி! இந்நேரம் புது பிகர் கூட ஜல்சா செய்துட்டு இருப்பனு நினைச்சேன்.. எனக்கு போன் போட்டு இருக்க!” என..
“எங்கடா இருக்க?”
“என்னடா, என்னாச்சு? ஏன் டென்ஷனா கோபமா இருக்க?”
“செம பிகர் மச்சி.. பிளான் செய்து மட்டை ஆக்கி ரூமுக்கு கூட்டிட்டு போற கடைசி நிமிஷத்தில், ஒருத்தன் ஆட்டையை போட்டுட்டான்.. அந்த *** மட்டும் என் கையில் கிடைக்கட்டும்.”
“விடு மச்சி.. நான் வேற பிகர் ஏற்பாடு செய்றேன்.”
“***” என்று கெட்ட வார்த்தையில் திட்டியவன், “அது எனக்கு தெரியாதா?”
“இவ்ளோ சூடா கோபப்படுற…! அவ்ளோ வொர்த்தா அந்த பிகர்?”
“அழகோ அழகுடா.. அழகோட திமிரும் அதிகம்! என்னையே இன்சல்ட் செய்துட்டா. ஆனா இதை எல்லாம் விட அவ கண்டிப்பா எனக்கு வேணும்டா.. அவளோட இடுப்பு.. வெண்ணை மாதிரி, அவ்ளோ சாஃப்ட். அவ இடுப்பை தொட்டு என் தோளில் சாச்சு, ரூமுக்கு கூட்டிட்டு வரதுக்குள்ளேயே…” என்றவன், “புரிஞ்சுக்கோ மச்சான்…” என்றான்.
சத்தமாகச் சிரித்த சுதீப், “இரு.. ரிசெப்ஷனில் தான் இருக்கிறேன்.” என்றான்.
“எப்புடிடா?”
“பக்கத்தில் தான் இருந்தேன்.. அதான் உடனே வந்துட்டேன்.. ஒரு நிமிஷம் இரு.” என்றவன் வரவேற்பாளினியிடம் பேசிவிட்டு, “மச்சி கடந்த இருபது நிமிஷமா யாரும் வெளியே போகலை.. ஸோ, இங்கே தான் எங்கேயோ இருக்கிறாங்க.. ரூமுக்கு தான் கூட்டிட்டு போய் இருக்கணும்.” என்றான்.
“நானும், அதான் யோசிச்சேன்.”
“நீ தேடும் போது லிப்ட் மூவிங்கில் இருந்ததா?”
“முதல்ல அதை கவனிச்சுட்டு, தேர்ட் ப்ளோர் தான் தேடினேன்.. காரிடரில் இல்லை.. அவன் போன லிப்ட் நிற்பதற்கும், நான் வந்ததுக்கும் சில நொடிகள் தான் வித்தியாசம் இருக்கும்.. அப்படியும் அவனை மிஸ் செய்துட்டேன்டா..! சினிமாலலாம் கண்ணை மூடி திறக்கிறதுக்குள் ஓடி இருக்கணும்னு டயலாக் வரப்ப, லாஜிக்கே இல்லைனு சிரிச்சு இருக்கிறேன். ஆனா, இன்னைக்கு லிட்ரலி அதான் நடந்தது.. நான் கண்ணை மூடித் திறந்தா, ஆளைக் காணும்.”
“நீ ஏன்டா கண்ணை மூடின?”
“ரொம்ப முக்கியம்! அவனை கண்டு பிடிக்க வழி சொல்லு” என்று எரிந்து விழுந்தான்.
“அவன் பெயர் தெரியுமா?”
“காப்பாத்துறவன் ஊரு பேரெல்லாம் சொல்லிட்டா செய்வான்?”
“டேய்! கோபப்படாம பதில் சொல்லுடா.. நான் உனக்கு ஹெல்ப் செய்யத்தானே முயற்சி செய்றேன்!”
“ப்ச்.. முடில மச்சி.. செம காண்டாகுது.. அவ்ளோ கோபம் வருது.”
“ஏன்டா! நீ இவ்ளோ ஹைபர் ஆகி, நான் பார்த்தது இல்லயே!”
“சொர்க்கத்தோட வாசல் வரைக்கும் போயிட்டு, திடீர்னு அது மறைந்தா எப்படி இருக்கும்!”
“என்னடா வெறும் டச்சிங்கு இவ்ளோ பீல்…?”
“கடுப்பை கிளப்பாம, ஏதாவது வழி சொல்லு…”
“அவன் கிட்ட பேசினப்ப, ஏதாவது அவனைப் பத்தி சொன்னானா? கொஞ்சம் யோசி மச்சி..”
“எஸ்.. அவன் டாக்டர்னு சொன்னான்டா.. டாக்டர் பெயரில் ரூம் புக் ஆகி இருக்குதானு கேளு.”
மீண்டும் வரவேற்பாளினியிடம் பேசிவிட்டு தள்ளி வந்தவன், “டேய் செகண்ட் ப்ளோரில் பாதி ரூம்ஸ் டாக்டர்ஸ் பெயரில் தான் இருக்குதுடா.. ஏதோ டாக்டர்ஸ் காண்ஃபிரென்ஸ் நடக்குது போல…”
“செகண்ட் ப்ளோரா? அவன் தேர்ட் ப்ளோர் தானே போனான்! நானும் இப்போ தேர்ட் ப்ளோரில் தான் நிக்கேன்.”
“அவன் ஸ்மார்ட் மச்சி.. உன்னை டைவர்ட் செய்ய லிப்ட்டை எம்ப்டியா மேல அனுப்பிட்டு, அவன் படியில் ஒளிந்து இருந்து நீ மேல போனதும், அவனோட ரூமுக்கு போய் இருக்கணும்.”
“எஸ்.. அதான் என் கண்ணில் அவன் படலை…” என்றவன் பொறுமையின்றி படிகளில் வேகமாக இரண்டாவது தளத்திற்கு வந்து ஒருமுறை தேடியபடி, “ரூமில் தான் இருக்கணும் மச்சி.. இங்கே செகண்ட் ப்ளோர் காரிடரில் இல்லை.” என்றான்.
அதே நேரத்தில், அந்த மருத்துவனும் லயனிகாஸ்ரீயும், இரண்டாவது தளத்தில் இருக்கும் அவளது அறையில் இருந்தார்கள்.
சுதீப் யூகித்தது போல் தான், மருத்துவன் செய்து இருந்தான். ராகேஷை குழப்புவதற்காக வெற்று மின்தூக்கியை மூன்றாவது தளத்திற்கு அனுப்பி இருந்தவன், முதல் தளத்திற்கு செல்லும் படியில் இறங்கினான். ராகேஷ் மற்றும் பிறர் கண்களில் படாதவாறு பாதி படியில் நின்றபடி, லயனிகாஸ்ரீயின் கைபையை ஆராய்ந்தவன், அதனுள் அறை எண் 204ன் சாவியைக் கண்டதும், அந்த அறைக்கு செல்லும் முடிவைத் தான் எடுத்தான். ஏனெனில் அவனது அறையின் சாவி, அவனது நண்பனிடம் இருந்தது.
முதல் வேலையாக இருவரது கைபேசியையும் ‘அமைதி நிலையில்’(silent mode) வைத்தவன், அவளை மென்மையாக படியில் படுக்க வைத்து விட்டு, ராகேஷின் செயலை கவனிக்க மேலே சென்றான். ராகேஷ் அங்கே இல்லை என்றதும், அது தான் சந்தர்ப்பம் என்று வேகமாக வந்து லயனிகாஸ்ரீயை கைகளில் குழந்தை போல் தூக்கிச் சென்றவன், வேகமாக இவளது அறையைத் தேடினான். நல்ல வேளையாக அறை படியின் அருகிலேயே இருக்கவும், விரைந்து செயல்பட்டு அறையினுள் சென்று கதவை மூடினான்.
அவளை மெத்தையில் மென்மையாகப் படுக்க வைத்தவன், அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை தெளிய வைக்க முயற்சித்தான். அவளது எதிர்வினையில் இருந்து.. மருத்துவனான அவன், அவள் ஏதோ ஒரு போதை பொருளின் தாக்கத்தில் இருக்கிறாள் என்பதை கண்டு கொண்டான்.
அவளது கைகளை ஆராய்ந்தவன், ஊசி போட்டதிற்கான அடையாளம் இல்லை என்றதோடு ராகேஷின் நடவடிக்கை, அவளது உடை அலங்காரம் மற்றும் இந்த நிலையிலும், அவள் அவனிடம் இருந்து தப்பிக்கப் போராடியது என்று அனைத்தையும் சேர்த்து யோசித்தான். அவளுக்கே தெரியாமல் அவள் பருகிய பழச்சாறு, அல்லது உண்ட உணவில் தான் போதை மருந்தை ராகேஷ் கலந்து இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தான்.
அவளது கைபையை மேலும் குடைந்தவன், எடுப்பு அட்டையில் இருந்து அவளது பெயர் லயனிகாஸ்ரீ என்பதை அறிந்து கொண்டான். சட்டென்று, அவளை அன்று மாலை சென்னை விமான நிலையத்தில் பார்த்தது நினைவிற்கு வந்தது. இருவரும் ஒரே விமானத்தில் தான் வந்தனர். இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றதோடு, விமானம் ஏறுவதற்கான வரிசையில் தனக்கு முன் நின்றிருந்தவளை, இவன் தான் பார்த்து இருந்தான். அதுவும் நேருக்கு நேர் பார்க்காமல், ஒரு பக்கமாக தான் அவளைப் பார்த்து இருந்தான்.
கைபேசியில் நவீனாவிடம் அவள் பேசியதில் சிலதை அரைகுறையாக கவனித்து இருந்தவன், அவள் கையில் இருந்த பயணச்சீட்டில், அவளது பெயரைப் பார்த்து இருந்தான். எதையுமே அவன் கவனிக்க வேண்டும் என்று செய்யவில்லை, அனைத்துமே தானாக சில நிமிடங்களில் நிகழ்ந்தவையே…!