காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 1.3

அடுத்த சில நொடிகளிலேயே, “ஹாய் பியூட்டி” என்றபடி ராகேஷ் அவள் அருகே, மெத்திருக்கையை சற்று நெருக்கமாக இழுத்துப் போட்டு அமர்ந்தான். அவளை உரசவில்லை என்றாலும், சற்று நெருக்கமாகத் தான் அமர்ந்து இருந்தான்.

அதில் சிறிதும் பதற்றம் கொள்ளாமல்.. நிதானமான குரலில், தள்ளி உட்காரலாமே!” என்று தன்மையுடன் தான் கூறினாள்.

எனக்கு இது தான் வசதியா இருக்குது.” என்றவனின் குரல் மற்றும் பார்வையில் இருந்த வேறுபாட்டை கண்டு கொண்டவள், தீர்க்கமான குரலில்,

ஆனா, எனக்கு வசதியா இல்லையே..! ஸோ தள்ளி உட்காருங்க. இல்லை, வேற டேபிளில் போய் உட்காருங்க.” என்றாள்.

என்னங்க இப்படி பேசுறீங்க!”

கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி, அவனை தீர்க்கமாகப் பார்த்தவள், வேற எப்படி பேசணும்?” என்று கேட்டாள்.

நார்மலா பேசலாமே?”

நான் உங்க டைப் இல்லை” என்று அழுத்தத்துடன் கூறியவள், சற்று தள்ளி இருந்த மேசை பணியாளரைப் பார்த்து, எக்ஸ்கியூஸ் மீ” என்றபடி விரலசைத்து அழைத்தாள்.

அது என்ன! என் டைப்?”

பதில் கூற விரும்பாமல், அவனை தீர்க்கமாகவும் அழுத்தமாகவும் பார்த்தாள்.

என்ன இப்படி பார்க்கிறா!’ என்று மனதினுள் நினைத்தாலும், வெளியே அவளது பார்வையைக் கண்டு கொள்ளாதது போல், நான் ராஜீவோட பிரெண்ட்..” என்று பேசியவனின் பேச்சை இடையிட்டு,

இல்லையே! கிருஷ்ணா உங்களை காலேஜ் மேட்னு தானே அறிமுகம் செய்தார்.” என்றவள், அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியில்… உதட்டோர வளைவுடன், நாங்க கிளம்புறப்ப தானே பேசினார்.. கேட்டுது.. பிஸ்னெஸ்ஸில் வெற்றிக் கனியை சுவைக்கணும்னா அலர்ட்னெஸ் மிக அவசியம்.. ஸோ, என் காது கொஞ்சம் ஷார்ப் தான்.. மூளையும் ஷார்ப்..! அதான் உங்க டைப் இல்லைனு சொன்னேன்” என்றாள்.

எஸ் மேம்” என்றபடி பணியாளர் வர,

இவர் உட்கார்ந்து இருக்க சோஃபாவை கொஞ்சம் பின்னாடி தள்ளுங்க.” என்றாள்.

மேம்!” என்று பணியாளரும், வாட்!” என்று ராகேஷும் அதிர்ந்தனர்.

அவளோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், தீர்க்கமான பார்வையும் ஆளுமையான குரலிலும், எஸ்.. தள்ளுங்க.” என்றாள்.

பணியாளர் செய்வதறியாமல் திணறினான். அவனுக்கு ராகேஷ் யாரென்று தெரியும், கூடவே அவனது குணமும் தெரியும்.

என்ன தான் ராஜீவ் கிருஷ்ணா நியாயமானவன் என்றாலும், இந்த நொடி அவனுக்கு சற்று பயமாகத் தான் இருந்தது, கூடவே லயனிகாஸ்ரீ மேல் பிரமிப்பும் தோன்றியது.

ராகேஷ் கோபத்துடன், ஏய்! நான் யாருனு தெரியுமா?” என்று எகிற,

அவளோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், தெரியாது.. அது எனக்கு தேவை இல்லாத ஆணி.” என்றாள்.

நான் ராஜீவோட பிஸ்னெஸ் பார்ட்னர்.”

வாய்ப்பில்லயே! மே பி.. பிஸ்னெஸ் டை-அப் இருக்கலாம். ஒருவேளை, பார்ட்னரோ? இல்ல.. அதை விட பெரிய பிஸ்தா பருப்பாவே இருந்தாலும், இதான் என் பதில்.” என்றாள்.

அவளது தைரியத்திலும் புத்திக்கூர்மையிலும், அவன் கடுப்புடன் அதிக கோபம் கொண்டான். அதுவும் ஒரு பெண்ணிடம் இருந்து இப்படி ஒரு அவமானத்தை, அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அவளோ பணியாளரைப் பார்த்து, உங்க முதலாளி நியாயமானவர் தானே! அப்புறம் என்ன பயம்?” என்று வினவினாள். அந்த இடத்திலும், நான் உன் முதலாளியின் வருங்கால மனைவியின் நெருங்கிய தோழி’ என்று கூற, அவள் விரும்பவில்லை. அவ்வளவு எளிதில் தனது அடையாளத்தையோ, செல்வாக்கையோ பயன்படுத்த மாட்டாள்.

பணியாளர் ராகேஷ் பக்கம் திரும்ப, அவனோ, கடும் கோபத்துடன் முறைத்தான்.

பணியாளர், சார் ப்ளீஸ்.. பிரச்சனை வேணாம்.” என்று கெஞ்சும் குரலில் கூற,

முட்டியின் மீது இருந்த கை முஷ்டியை இறுக்கமாக மூடியவன், பற்களைக் கடித்தபடி, அவளை பின்னாடி தள்ளச் சொல்லு.” என்றான்.

நான் ஏன் தள்ளனும்? நீ தான் இங்கே வந்து சோஃபாவை இழுத்துப் போட்டு உட்கார்ந்த…!” என்றவள் பணியாளரைப் பார்த்து, உங்களுக்கு ஹெல்ப வேணும்னா, இன்னொருத்தரை கூப்பிடவா…” என்றபடி அவள் பார்வையைச் சுழற்ற,

ராகேஷ் அதிகரித்த கோபத்துடன், மேசை மீது ஓங்கிக் குத்தி விட்டு எழுந்து சென்றான்.

பணியாளர், எதுக்கும், கொஞ்சம்.. ஜாக்கிரதையா இருங்க மேம்.. அவர் கொஞ்சம் ஆபத்தான ஆள் தான்.” என்றான்.

மென்னகையுடன், தேங்க் யூ!” என்றதும், அவன் சிறு தலையசைப்புடன் அகன்றான்.

லயனிகாஸ்ரீ, தனது அலுவலக வேலைகளை கைபேசியில் ஆராயத் தொடங்கினாள்.

சில நிமிடங்கள் சென்ற நிலையில், ஒரு பணியாளர் லயனிகாஸ்ரீ அழைத்த பணியாளரிடம் சென்று, இந்த ஜூசை அந்த ஸ்கை ப்ளூ சரீ மேடம் கிட்ட கொடுக்கிறியா?” என்று கேட்டான்.

நீயே, கொடுக்க வேண்டியது தானே?”

அந்த ராகேஷ் சார், என் உயிரை வாங்குறார் டா.. என்ன கடுப்பில் இருக்காருன்னு தெரியலை, நகர விடாம படுத்துறார்.. நம்ம மேடமோட பிரெண்ட், இவங்களுக்கு ஜூஸ் கொடுக்க சொன்னாங்க.. நான் எடுத்துட்டு..” என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே, ராகேஷ் அவனை அழைக்க,

சரி கொடு. நான் போய் கொடுக்கிறேன்.. நீ இவரைப் பாரு.” என்று கூறி வாங்கிச் சென்றிருந்தான்.

நிம்மதி மூச்சை வெளியிட்ட அந்தப் பணியாளர், ராகேஷிடம் சென்று ஒரு மதுக் குவளையை கொடுத்த படி, சார் எனக்கு எதுவும் பிரச்சனை வராதே?” என்று கேட்டான்.

அவன் தானே ஜூஸ் கொடுக்கிறான்… மாட்டினாலும், அவன் தான் மாட்டுவான்.”

அவன் என்னைத் தானே சொல்வான்…”

இல்லவே இல்லைனு அடிச்சு சொல்லு.. என் மேல் பொறாமை. அதனால் என்னை இழுத்து விடுறான்னு அடிச்சு விடு.”

ஹும்ம்.. ஜூஸில் என்ன கலந்தீங்க சார்?”

ஒரு வித வெறியுடனும், உதட்டோர வன்மப் புன்னகையுடனும் லயனிகாஸ்ரீயையே பார்த்த படி, அது உனக்கு தேவை இல்லாதது.” என்றவன், இனி பார்ட்டி முடியிறவரை, என் கிட்ட வராத…” என்றான்.

அவனும், ஓகே சார்” என்று கூறி அகன்றான்.  

அதே நேரத்தில், மேம்” என்று அழைத்த அந்தப் பணியாளர் லயனிகாஸ்ரீ நிமிர்ந்ததும், மேடமோட பிரெண்ட், இதை உங்களுக்கு கொடுக்கச் சொன்னாங்க.” என்றான்.

பார்வையைச் சுழற்றி நவீனாவைத் தேடியவள், தள்ளி இருந்த தோழியை கண்டு கொண்டாள். பணியாளரிடம், அந்த பர்ப்பிள் கௌன் போட்டு இருக்கிறவங்களா கொடுக்கச் சொன்னாங்க?” என…

அவனும் பார்த்துவிட்டு, எஸ் மேம்” என்றான்.

அப்பொழுதும், அதை எடுக்காமல், தோழியை பார்த்தாள். இவளது கெட்ட நேரமோ என்னவோ, சரியாக அந்த நேரம் இவளை மென்னகையுடன் பார்த்த நவீனா ‘என்ன?’ என்பது போல் கையால் செய்கை செய்தது இங்கிருந்து பார்க்க, ‘குடி’ என்பது போல் தெரியவும், பழச்சாறை எடுத்துக் கொண்டாள்.

பணியாளர் தலை அசைத்து விலகியதும், அதை அருந்தத் தொடங்கியவள், கைபேசியை பார்த்தபடி அருந்தி முடித்து இருந்தாள்.

இதை, பார்த்துக் கொண்டு இருந்த ராகேஷ், வன்மமும், வெறியும் கலந்த வெற்றிப்  புன்னகை உடன், “உன் திமிரை மொத்தமா இன்னைக்கு அடக்குறேன்டி” என்று முணு முணுத்தான்.  

குறிப்பு: இன்று மாலை 4.30 மணிக்கு குட் நியூஸ் சொல்ல காத்திருக்கிறேன் தோழமைகளே.. any guess?

கீதம் இசைக்க காத்திருப்போம்…

error: Content is protected !!