தனா, அக்காக்கு 3 வயசு கிட்ட இருக்கும் போது, சித்தி வம்சம் விருத்தி, அது இதுனு ஏதேதோ பேசி, பெரியம்மாவை மூளை சலவை செய்து, பையன் பெத்துக்கணும் என்ற ஆசையை அவங்களுக்குள் விதைச்சுட்டாங்க. அப்பா எவ்வளவோ சொல்லியும், பெரியம்மா கேட்கலை போல.. ஒரு நாள் சித்தியும் பெரியம்மாவும் பேசுறதை கேட்டுட்டு, அப்பா சித்தியை சத்தம் போட்டு இருக்காங்க. அதுக்கு அவங்க அழுது ஆர்பாட்டம் செய்து பெரிய பிரச்சனை செய்துட்டாங்க போல..!
அந்த ‘இன்சிடென்ட்’ நடந்த அப்புறம், அப்பா சித்தியை கவனிச்சு, அவங்களோட பொறாமை குணத்தையும், பெரியம்மா மேல இருக்க வெறுப்பையும் கண்டு பிடிச்சு இருக்காங்க. அந்த நேரத்தில் தான், பெரியம்மா ரெண்டாவது முறை கர்ப்பம் ஆனாங்க. அதனால், அப்பா… சித்தி பத்தி பெரியம்மா கிட்ட சொல்லாம, அவங்களை கவனமா பார்த்துக்கிட்டாங்க போல..! என்ன தான், அப்பா நல்லா பார்த்துக்கிட்டாலும், டெலிவரியில் பெரியம்மா இறந்துட்டாங்க. ஆனா, அவங்க ஆசைப் பட்டது போல் பையன் தான் பிறந்தான், சுந்தர் ராஜன்.” என்று கூறி இரண்டு நொடிகள் மௌன இடைவெளியின் பின் வேதனையான குரலில்,
“அவன் இப்போ இல்லை.. 3 வருசத்துக்கு முன்னாடி, ஒரு அக்சிடென்ட்” என்றவன் கலங்கும் மனதுடன், மேலே கூற முடியாமல் பேச்சை நிறுத்தினான்.
சிரமத்துடன் சற்றே நகர்ந்து, மெத்தை மீது இருந்த அவனது கையை இறுக்கமாகப் பற்ற, அவன் அதை விட இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.
சில வினாடிகளுக்குப் பின், “அவர் உங்களுக்கு க்ளோஸ்ஸா?” என்று கேட்டாள்.
ஒருவாறு தன்னை தேற்றி இயல்பிற்குத் திரும்பியவன், “தேங்க்ஸ்” என்றபடி அவளது கையை விட்டான்.
பின், “அவனுக்கும் எனக்கும் ரெண்டு வயசு தான் வித்யாசம்.. நாங்க ரெண்டு பேரும் பிரதர்ஸ்னு சொல்றதை விட, நல்ல பிரெண்ட்ஸ்.. சின்னதில இருந்தே அந்த வீட்டில் எனக்கு அவனும், அவனுக்கு நானும் தான் ஆறுதல். என்னை விட அவன் பாவம்.. எனக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும். ஆனா, அம்மாவை விட அவன் கூட தான் ரொம்ப க்ளோஸ்..”
அவனை திசைத் திருப்ப, “சரி மத்தவங்களைப் பற்றி சொல்லுங்க.” என்றாள்.
“பெரியம்மா இறந்த கொஞ்ச நாளில், அப்பாவை ரெண்டாவது கல்யாணம் செய்யச் சொல்லி ஆச்சி சொல்லி இருக்காங்க.. அப்பா முடியாதுனு சொல்லி இருக்காங்க.. ராஜாவை காரணம் காட்டி ரொம்ப சொல்லவும், அப்பா சரின்னு சொல்லி இருக்காங்க.
சித்தி, அவங்களோட சித்தி பொண்ணை சொல்லி இருக்காங்க.. அதாவது என்னோட அம்மா.. நல்ல எண்ணத்தில் எல்லாம் சொல்லல.. என்னோட அம்மாச்சி குடும்பம் நல்லா வாழ்ந்து ஒடிந்த குடும்பம். அம்மாக்கு சித்தியை விட ஒரு வயசு அதிகம்னாலும், குடும்ப சூழ்நிலை காரணமா, கல்யாணம் ஆகாம இருந்தது.. ஸோ.. அவங்களை கொண்டு வந்தா, தனக்கு கீழ் இருப்பாங்க, தான் வீட்டை ஆளலாம்னு நினைத்தாங்க, நினைத்ததை இன்னைக்கு வரை சாதிச்சிட்டும் இருக்காங்க.”
“உங்க அப்பா எதுவும் சொல்ல மாட்டாங்களா?”
“எனக்கு தெரிந்து, பெரியம்மா இருந்தவரை அவங்க தான் முதல் இடத்தில் இருந்து இருக்காங்க. ஆனா, எந்த ஒரு இடத்திலும், என்னோட அம்மாக்காக அப்பா பேசி, நான் பார்த்தது இல்லை.”
“உங்க சித்திக்கு பசங்க இல்லையா?”
“இருக்காங்க.. சுபலட்சுமி, வெற்றி வேந்தன்.. எனக்கு அப்புறம் தான் பிறந்தாங்க.. சுபா தான் பஸ்ட்”
“இப்போ, ஒவ்வொருத்தர் கேரெக்டர் பத்தி சொல்லுங்க…”
“இன்னும் நாலு பேரை பத்தி சொல்லல…”
“சொல்லுங்க…”
“மலர்கொடி, ஆரியன், ராஜாவோட மனைவி அண்ட் மூனு வயசுப் பையன்.” என்றதும்,
ஏதோ சொல்லத் தெரியாத துக்கம், அவளை தாக்கியது போல் உணர்ந்தாள். தந்தையின் வாசனையைக் கூட அந்தப் பிஞ்சு அறிந்து இருக்காதோ என்ற எண்ணம் தோன்றவும், அவளது நெஞ்சைப் பிசைவது போல் உணர்ந்தாள்.
தொண்டையை சரி செய்தவன், “கோமதி நாதன்.. மாமா.. அதாவது தனா அக்காவோட கணவர்.. இன்னொருத்தர் ராகவன், சுபாவோட கணவர்.” என்றான்.
“ஓகே.. இப்போ ஒவ்வொருத்தர் பற்றியும் சொல்லுங்க… அக்சுவலா, நான் யாரைப் பற்றியும் யாரிடமும் கேட்க மாட்டேன். பிகாஸ் ஒபினியன்ஸ் டிஃப்பர்ஸ் அண்ட் உங்களிடம் சரியா நடந்துக்காத ஒருத்தர், என்னிடம் சரியா நடந்துக்க கூட வாய்ப்பு இருக்குது. ஆனா, இங்கே நான் பார்க்கும் கோணம் வேறு. நானும் நீங்களும் வேறு இல்லைனு நினைக்கிறேன். ஸோ, உங்களை மதிக்காதவங்க எனக்கு வேண்டாத ஆள் தான். ஸோ சொல்லுங்க.” என்றாள்.
மென்னகையுடன், “தேங்க்ஸ்” என்றவன், வீட்டு ஆட்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான்.
“அப்பா அம்மா பற்றி சொல்லிட்டேன்.. வடிவழகி ஆச்சி.. மை அழகி!” என்று சிரிப்புடன் சொன்னவன், “உனக்கு அவங்களை கண்டிப்பா பிடிக்கும்.. சின்னதில் இருந்தே எனக்கும் ராஜாக்கும் தைரியம் சொல்ற ஒரே ஆள்..! அம்மா எப்போதும் பிரச்சனை வேணாம்னு அடங்கிப் போக தான் சொல்லுவாங்க. ஆனா என்னோட அழகி அப்படி இல்லை. இப்போ கூட ‘உனக்கு பிடிச்சதை செய்.. இந்த வீட்டை விட்டு போகணும் நினைக்கிறியா? என்னைப் பற்றியோ உன் அம்மாவை பற்றியோ யோசித்து தயங்காம, போய்கிட்டே இரு! வெளிய போய் என்ஜாய் தி சிட்டி’னு சொல்லுவாங்க.” என்றான்.
அவளும் விரிந்த புன்னகையுடன், “இன்ட்ரெஸ்டிங்” என்றாள்.
“அடுத்து.. சித்தப்பா வைத்தியலிங்கம் வாயில்லா பூச்சி.. சித்தி பத்மாவதி கூனியும் சகுனியும் சேர்ந்த கலவை.
தனா அக்கா இயல்பில் நல்லவள். ஆனா கூனியால் மூளைச் சலவை செய்யப்பட்ட, ஒரு இம்மெச்சூர்டு சைல்டு. சின்னதில் இருந்தே நம்ம வீட்டில் அவ நாக்கு தேள் கொடுக்கு தான். சொந்தத் தம்பியையே, அம்மாவைக் கொன்ற எமனா பார்க்கிறது, பேசுறது.. என்னோட அம்மாவையும், என்னையும் தீண்டத் தகாதவர்களா.. எதிரியா நினைத்து செயல் படுறது. இப்படி லிஸ்ட் போகும்.. கோமதிநாதன் மாமா நியாயமானவர்.
ராஜா.. நல்ல மனிதன்.. சொந்த அக்காவாலும் அப்பாவாலும் ஒதுக்கப்பட்ட பாவப்பட்ட ஜீவன். மலர்கொடி அருமையான பெண்.. ராஜா ரொம்ப சந்தோஷமா இருந்ததே, மலர் கூட வாழ்ந்த அந்த ஒரு வருஷம் தான். ஆனா… அதும் நிலைக்கலயே!” என்றபடி நிறுத்தினான்.
சற்றே பதறிய மனதை இறுக்கிப் பிடித்தபடி, “ஆரிக் குட்டியை அவர் பார்த்தாரா?” என்று கேட்டாள்.
“ஆரியை முதலில் கையில் வாங்கியது அவன் தான்..” என்றதும், அவள் நிம்மதி மூச்சை வெளியிட,
அதை கெடுக்கும் விதத்தில், “ஆனா மூனே நாள் தான் ஆரி குட்டி கூட இருந்தான்.. மூனாவது நாள், மலரோட டிஸ்சார்ஜ் அன்னைக்கு, ஹாஸ்பிடல் போற வழியில் தான், அந்த அக்சிடென்ட்..! அதையும் சித்தியும் தனா அக்காவும் பேசினாங்க.. இப்போ கூட பேசுறாங்க. ராஜா இறப்புக்கு, ஆரி குட்டி தான் காரணம். அவன் பிறந்த நேரம், ராசி இல்லாதவன். அது இதுனு சொல்லுவாங்க.” என்றான்.
அவள் கோபத்துடன், “யாரும் எதுவும் சொல்லலையா?” என்று கேட்டாள்.
“அவங்களை யாரும் எதிர்த்துப் பேச மாட்டங்க.. எங்க வீட்டில் சித்தி ராஜ்ஜியம் தான்.. அடுத்து தனா அக்கா..”
“நீங்க பேசி இருப்பீங்களே!”
அவன் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் பார்க்க, அவள், “என்ன?” என்றாள்.
“நான் சண்டை போட்டேன்.. அதுக்கு என்னையும் மலரையும் சேர்த்து வைத்து பேசிட்டாங்க. அதுக்கு அப்புறம், நான் மலர் கிட்ட பேசுறதை கூட நிறுத்திட்டேன்.”
“நீங்க ஒன்னும் தப்பு செய்யலையே… ஏன் இப்படி பேசாம இருக்கிறீங்க?”
மறுப்பாக தலையை ஆட்டியவன், “அவங்க என்னை எது சொன்னாலும், நான் கண்டுக்காம கடந்து போய்டுவேன். ஆனா, என்னால் மலர் பாதிக்கப்படும் போது, ஏற்கனவே ராஜாவை இழந்து மனசொடிந்து இருக்கும் பெண்ணை, இவங்க மேலும் வதைக்க.. நான் காரணமா இருப்பதை விரும்பல…
அதுவும், நான் சண்டை போட்டு, அக்காவும் சித்தியும் தப்பா பேசிய அன்னைக்கு, மலர் என்னைப் பார்த்து கண்ணீருடன் கையெடுத்து கூம்பிட்டு நின்னது, இன்னும் என் கண்ணுக்கு உள்ளேயே இருக்குது.” என்றான்.
பின் பெருமூச்சை வெளியிட்டு தொடர்ந்தான்.
“அடுத்து சுபா.. இவ கிட்டதிட்ட சித்தி மாதிரி தான். ஆனா சைலென்ட் கில்லர்..! அவ கணவர் பற்றி சொல்ற அளவுக்கு பெருசா பழக்கம் இல்லை.
வெற்றி, இப்போ தான் இன்ஜினியரிங் பைனல் இயர்.. நல்ல பையன். இதான் நம்ம வீட்டு டிஸ்கவரி சேனல்.. எப்படி இருக்குது?” என்று கேட்டான்.
“நம்ம வீட்டில் எனக்கு நல்லா டைம் பாஸ் ஆகும்னு தோணுது.” என்று கூறி கண் சிமிட்டினாள்.
“இருந்தாலும், உன்னோட மன தைரியத்தை பார்த்து, என்னால் வியக்காம இருக்க முடியல…”
“கிங் இருக்க, லயனெஸ்கு பயமேன்!” என்று கூறி, மீண்டும் கண் சிமிட்டினாள்.
குறிப்பு: தயா, சந்தோஷ் பற்றிய விளக்கம் பின்னாடி வரும்..
கீதம் இசைக்க காத்திருப்போம்…