காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 5.3

என் கல்யாணத்தை, என் அம்மாவையும் ஆச்சியையும் தவிர வேற யாரும் விரும்ப மாட்டாங்க.. நான் எப்போ கல்யாணம் செய்வேன்னு தான் அவங்க வெயிட்ங்..! ஆனா எனக்கு……”

அப்போ, நம்ம கல்யாணம் ஃபிக்ஸ்டு”

ப்ச்.. எனக்கு தான் கல்யாணத்தில் நாட்டம் இல்லைனு சொல்றேனே!”

ஆழ் மனசில் இருந்து என்னை மனைவினு சொன்ன அப்புறம், இதெல்லாம் செல்லுபடி ஆகாது. அண்ட் இந்த நாட்டம் பத்தி யூ டோன்ட் வொர்ரி கிங்..! கல்யாணத்துக்கு அப்புறம் காதல் மரம், செடி, கொடினு எல்லாத்தையும் உங்க மனசில் நடுறதை நான் பார்த்துக்கிறேன்.” என்று கூறி கண் சிமிட்டினாள்.

சத்தமாகச் சிரித்தபடி, யூ ஆர் சான்ஸ்லெஸ்! இந்த கொஞ்ச நேரத்தில் எத்தனை முறை கண்ணடிச்சு இருக்க தெரியுமா?”

அதெல்லாம் கணக்கு வச்சுக்கிறது இல்ல.. அரசே!” என்றவள் லேசாக கண்களை சுருக்கி குறும்புப் பார்வையும் சிரிப்புமாக, அது உங்களை டிஸ்டர்ப் செய்யுதோ!”

மென்னகையுடன் ‘இல்லை’ என்பது போல் உதட்டை பிதுக்கி, தோள்களை லேசாகக் குலுக்கினான்.

இந்த அரசை கவுக்க, நிறைய ராஜ தந்திரங்கள் கத்துக்கணும் போலவே!” என்று அவள் கூற,

மே பி… நீ காதலுடன் கண்ணடித்து இருந்தால் டிஸ்டர்ப் ஆகி இருப்பேனோ என்னவோ!” என்று கூறி கண் சிமிட்டினான்.

வாவ், கிங்!”

என்ன… கண் அடிக்கிறதில்., பெண்களை விட பசங்க தான் கிங்!”

எனக்கு இந்த கிங் தான் முக்கியம்.. ஆனா, நான் அதுக்காக வாவ் சொல்லலை…”

பின்ன..!”

நீங்க கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டீங்க”

ஹே! நான் எப்போ சொன்னேன்! அதெல்லாம் இல்ல…”

என்னை மனைவினு சொல்லுவாராம்.. முக்கியமா நான் காதலுடன் கண்ணடித்தா, இவர் டிஸ்டர்ப் ஆவாராம்.. ஆனா கல்யாணத்தில் நாட்டம் இல்லையாம்.. நான் இவரை காதலிக்கணும்னு ஆசை இல்லையாம்.” என்றபடி புருவத்தை ஏற்றி இறக்கினாள்.

மகிழ் கொற்றவன் பெரும் அதிர்வுடன், நான்.. அந்த அர்த்தத்தில் சொல்லல…” என்றான்.

இருக்கலாம்.. ஆனா வேறு எந்த பொண்ணு கிட்டயும் இப்படி சொல்லி இருக்கிறீங்களா? அட்லீஸ்ட் காதல் பத்தியாவது பேசி இருக்கிறீங்களா?”

அவன் விலகாத அதிர்ச்சியுடன், மறுப்பாக தலையை அசைக்க,

அவள் வெற்றிப் புன்னகையுடன், நம்ம கல்யாணத்தைப் பற்றி உங்க வீட்டில் பேசுங்க.”

அவன் இயல்பிற்கு திரும்ப சில நொடிகளை அவகாசமாகக் கொடுத்தவள், என்ன?” என்றாள்.

எனக்கு என்ன சொல்லனு தெரியலை…”

இவ்ளோ நேரம், என் கூட டைம் ஸ்பென்ட் செய்து இருக்கிறீங்க? எப்படி பீல் செய்றீங்க?”

மனசு லேசா பீல் ஆகுது.. உண்மையை சொல்லனும்னா, உன் கூட இருக்கிறதை, என் மனசு விரும்புது.”

அவ்ளோ தான்.. அந்த விருப்பத்தை கப்புன்னு பிடிச்சுக்கோங்க அரசே! லைஃப் லாங் ஒன்னா ஹாப்பியா ட்ரவல் செய்யலாம்.”

ஆனா, உன்னை மாதிரி அருமையான பொண்ணுக்கு… என் வீடு சரி இல்லையே!” என்றவனின் குரலில், அவனையும் அறியாமல் ஏக்கமும் வலியும் கலந்து இருந்தது.

அதை குறித்துக் கொண்டவள், முதல்ல உங்க வீட்டு ஆட்களைப் பற்றி சொல்லுங்க.” என்றாள்.

கண்டிப்பா சொல்லனுமா? கடைசியா ஒரு முறை யோசிச்சுக்கோ.”

அவள் கண்களால் மிரட்டவும்,

பெரும் மூச்சொன்றை வெளியிட்டவன், எங்களோடது ஜாயின்ட் பாமிலி.. கொஞ்சம் பெருசு தான். அதுவும் ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்.. நீ அட்ஜஸ்ட் ஆவியானு யோசிச்சுக்கோ.” என்றான்.

ஆவியா பேயானு வந்து பார்த்துக்கிறேன்.. இப்போ ஓவர் பில்டப் கொடுக்காம, நம்ம குடும்ப உருப்படிகளைப் பற்றி சொல்லுங்க.”

அவள் கூறிய விதத்தில் அவனுக்கு சிரிப்பு வந்தாலும், தனது வீட்டினரைப் பற்றி நினைத்ததும், அந்த சிரிப்பு மறைந்தது.

நானே அங்கே ஜெல் ஆக மாட்டேன், அதான் சொல்றேன்.. அம்மாக்காக தான், இன்னும் அந்த வீட்டில் இருக்கிறேன்.. அதுவும் ஜஸ்ட் தூங்க மட்டும் தான் போவேன்.”

அவன் மரத்த குரலில் பேசினாலும், அதன் பின் இருக்கும் அன்பிற்கான ஏக்கத்தை, அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. குடும்பம் இருந்தும், அனாதை போல் வாழும் அவன் மீது அன்பு சுரக்க, அவனை நோக்கி கையை நீட்டினாள்.

அவளது கண்களில் வழிந்த அன்பில் கட்டுண்டவன், அவளது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

அவள் மென்னகையுடன், ஐ ப்ராமிஸ் யூ கிங்.. இதுவரை எப்படியோ, இனி நம்ம வீட்டில் உங்களுக்கு நிம்மதியும் அன்புமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். அங்கே இருக்கிறவங்களை மாற்ற முயற்சி செய்றேன்.. முடியலையா! நீங்க நான் நம்ம குழந்தைங்கனு, நமக்கே நமக்கான அன்பான அழகான ஒரு குடும்பத்தை உருவாக்குவோம்.”

தேங்க் யூ லயனெஸ்!”

ஹே! இது என்ன நேம்?”

அவன் மென்னகையுடன், நான் கிங்னா, நீ குயின் தானே! அதுவும் உன் பெயரிலேயே ஒரு பவர்ஃபுல் நேம் இருக்குதே! லயனி சொல்றப்ப இதான் தோணுது.. இனி தனிமையில் நீ எனக்கு லயனெஸ் தான்.” என்று கூறி கண் சிமிட்டினான்.

இன்னும் ரெண்டு முறை இப்படி சிரிச்சி கண்ணடிச்சீங்க! உங்க லயனெஸ் டோட்டல் ப்ளட்…”

அவளது குறுகுறு பார்வையில் அவன் புன்னகையுடன், காலேஜ் டேஸில் கூட, யாரும் என்னை இப்படி சைட் அடிச்சது இல்லை.” என்றான்.

இந்த கிங், இந்த லயனெஸ்கு மட்டும் தான்.”

நீ இப்படி பேசுற அளவுக்கு, என் கிட்ட என்ன இருக்குதுனு தான் எனக்கு தெரியல…”

என் பேக்கிரௌண்ட் தெரியாதுன்னாலும், நான் ரிச்னு உங்களுக்கு தெரியும் தானே!”

ஹும்ம்…”

நான் கொஞ்சம் அழகாவும் இருக்கிறேன்னு நினைக்கிறேன்..”

கொஞ்சம் இல்லை.. ரொம்ப..”

இருந்துட்டு போறேன்.. அப்போ தானே, உங்களுக்கு மேட்ச் ஆக முடியும்!”

அவன் புன்னகையுடன், இருபுறமும் தலையை ஆட்டினான்.

என்ன சொல்ல வந்தேன்னா.. அப்படிப் பட்ட நான் உங்களை கல்யாணம் செய்துக்கிறேன்னு இவ்வளவு சொல்லியும், எனக்காக யோசித்து மறுத்திட்டு இருக்கிறீங்க. அண்ட் இன்னொரு முக்கியமான விசயம், யாருனே தெரியாத எனக்காக… எவ்ளோ போராடினீங்க! அந்த கட்ஸ் யாருக்கு வரும்? உங்க அருமை உங்களுக்கு தெரியல… வேணும்னா, இப்படி சொல்லலாம்.. என்னைப் பொறுத்தவரை நீங்க ஒரு வைரம்.. உங்களுக்கு அண்ட் உங்க வீட்டு ஆட்களுக்கு, நீங்க ஒரு பட்டை தீட்டப்படாத வைரம்.”

இவ்ளோ பெருசா சொல்ற அளவுக்கு, நான் எதுவும் செய்யலை.. சரி, நம்ம வீட்டு ஆட்களைப் பற்றி சொல்றேன்..

சென்னையில் இருக்கும் ‘லிங்கம் குரூப் ஆஃப் கம்பெனிஸ்’ எங்களோடது தான்.. அப்பா தர்மலிங்கம்.. பெயரில் இருக்கும் தர்மம், நீதி எல்லாம் வீட்டுக்கு வெளியில் தான்.. என்னோட அம்மா கனிமொழி.. பெயருக்கு ஏற்றார் போல் கனிவே உருவானவங்க.. இந்த வீட்டில் வந்து மாட்டிக்கிட்டாங்க.. அதுவும் ஒருத்தர்  செய்த சதியால்..” என்றவன் வேதனையான குரலில், புரியலை இல்ல” என்றான்.

அவள் ‘ஆம்’ என்பது போல் பார்க்க,

அவன் மரத்த குரலில் தொடர்ந்தான்…

என்னோட அம்மா, அப்பாக்கு இரண்டாவது மனைவி” என்றவன், இரு, முதல்ல இருந்து சொல்றேன்.. அருணாசலம் வடிவழகி, என்னோட தாத்தா, ஆச்சி..! தாத்தா, இப்போ இல்லை.. அவங்களுக்கு தர்மலிங்கம் வைத்தியலிங்கம்னு ரெண்டு பசங்க.. தன்னோட பசங்க கடைசி வரை ஒற்றுமையா இருக்கணும்னு, பார்வதி, பத்மாவதினு அக்கா தங்கையை கட்டி வச்சாங்க. என்னோட பெரியம்மா தங்கமானவங்கனு அம்மா சொல்லுவாங்க. உன்னை மாதிரி அன்பும், அழகும், ஆளுமையும் நிறைந்தவங்க. எங்க வீட்டுக்கு ஏற்ற மூத்த மருமகளா இருந்து இருக்காங்க. ஆனா, புகுந்த வீட்டில் அக்கா மட்டுமே கொண்டாடப் படுறதை சித்தியால தாங்கிக்க முடியல..! சித்திக்கு எப்போதுமே பெரியம்மா மேல பொறாமையும் துவேஷமும் இருந்து இருக்கும் போல.. அது யாருக்கும் தெரியல..!

பெரியம்மாக்கு முதல்ல, அக்கா தனலட்சுமி பிறந்தாங்க.. அவங்க பிறந்தப்ப, பெரியம்மாக்கு சில காம்ப்ளிகேஷன்ஸ் இருந்ததால், இரண்டாவது குழந்தை கொஞ்சம் ரிஸ்க்னு டாக்டர் சொல்லி இருக்காங்க.

ஒன்னா கல்யாணம் ஆகி, அக்கா மட்டும் குழந்தை பெத்ததில், சொந்தகாரங்க அஸ் யூஷுவல் தங்கையை குறை சொல்ல, சித்திக்கு பெரியம்மா மேல வன்மமே வளர்ந்து இருக்கும்னு நினைக்கிறேன்.

error: Content is protected !!