அவள் கண்களை மூடித் திறக்கவும்,
“ஆனா நீ தயாவை சின்ன வயசில் இருந்து நண்பனா, வெல் விஷ்ஷரா தானே பார்க்கிற! அதான் அப்படி தோணலை.. அண்ட் தயாவை நான் பார்த்தவரை எனக்கு என்னவோ உங்களுக்குள் பிரெண்ட்ஷிப்பை மீறி, தந்தை மகள் பாசம் இருப்பது போல் தான் பீல் ஆச்சு.” என்றான்.
அவள், அவனை மெச்சும் பார்வை பார்க்க,
“ஸோ… நான் முதல்ல சொன்னது தான் ரீசன் இல்லையா?”
மறுப்பாக தலையை ஆட்டி, “இப்பவும், எனக்கு உங்க மேல காதல் இல்லை.. ஆனா கண்டிப்பா ஈர்ப்பும், பிடித்தமும் இருக்குது.” என்றவள், “இந்த ஹன்ட்சம் டாக்டரை விட, எனக்கு மனசு இல்லைனு வச்சுக்கோங்களேன்.” என்று கூறி கண் சிமிட்டினாள்.
லேசாகச் சிரித்தவன், “பிஸ்னெஸ் வுமென்.. நல்லா பேசுற.. பட் இந்த கார்ஜியஸ் வுமெனுக்கு ஏற்ற ஆள் நான் இல்லை.” .
“உங்களை ஏன் ப்ளேம்(blame)செய்துக்கிறீங்க? நேரடியாவே காரணத்தை சொல்லுங்க.. என் உயிருக்கு இருக்கும் ஆபத்து, உங்களையும் தொடரும்னு யோசிக்கிறீங்களா?”
“நிஜமாவே, உயிர் பயம் எனக்கு இல்லை.. இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுக்கு, உண்மையாவே நான் தான் காரணம்.. எனக்கு கல்யாணத்தில் பெருசா நாட்டம் இல்ல.. ஸோ ப்ளீஸ்…” என்று கூறி நிறுத்தினான்.
“பெருசா இல்லைனா, சிறுசா நாட்டம் இருக்கோ!”
அவன் முறைக்கவும், “ஜோக் சொன்னா சிரிக்கணும் அரசே! முறைக்கப்பிடாது.” என்றாள்.
“நீ சொன்னது ஜோக்கா! அடுத்த முறை ஜோக் சொல்லப் போறேன்னு சொல்லிட்டு சொல்லு.. சிரிக்க முயற்சி செய்றேன்.”
“இதான் மொக்க ஜோக்.. அதுவும் பழசு வேற…! வாயால் வடை சுடுவதில், இன்னும் உங்களுக்கு பயிற்சிகள் வேண்டும் அரசே!”
“உன் கிட்ட பயிற்சி எடுத்துக்கிறேன்.. ஆமா, இது என்ன அரசே!”
“கொற்றவன்னா அரசன்னு தானே அர்த்தம்.. ஸோ, இனி உங்களை அரசே, கிங்.. இப்படி என் மூடுக்கு ஏற்ற மாதிரி தான் கூப்பிடப் போறேன்.”
சட்டென்று அமைதியானவனின் பார்வையில், ஒரு வித தவிப்பு, வலி, நெகிழ்ச்சி என்ற உணர்ச்சிகள் கலந்து இருக்க,
அவள், “நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா? ஏதும் உங்களை ஹர்ட் செய்துட்டேனா?”
சிறு வலியை மீறிய நெகிழ்ச்சியான மென்னகையுடன், “இல்ல.. அப்படி எதுவும் இல்லை.. நான் தான் வேற யோசிச்சுட்டேன்” என்றான்.
“இப்படி கூப்பிடவா, வேணாமா?”
“இது லயனி ஸ்டைல் இல்லையே!” என்று அவன் இயல்பான புன்னகையுடன் கூறவும்…
நிம்மதியடைந்தவள்.. தானும் புன்னகையுடன், “இதான் அரசே, விதி வலியதுனு சொல்றது. இனி எதுக்கும் லயனி உங்க கிட்ட பெர்மிஷன் கேட்க மாட்டா!” என்று கூறி, கண் சிமிட்டினாள்.
மாறா புன்னகையுடன், தலையை இருபுறமும் லேசாக இருமுறை ஆட்டியவன், “அக்சுவலி.. நான் அதிகம் பேசுற ஆளே இல்லை. ஆனா… இன்னைக்கு ஹோட்டலில் உன்னைப் பார்த்த நொடியில் இருந்து பேசிட்டே இருக்கிறேன்.”
“நீங்க கொஞ்சம் அழுத்தமான கேரெக்டரோ…!”
“அப்படினு இல்ல.. சின்ன வயசில் உன்னை மாதிரி தான் இருந்தேன்.. ஆனா, போக போக சூழ்நிலைகள் என்னை அழுத்தமா மாத்திடுச்சு.”
“பார்த்தீங்களா! உங்களால், உங்க ஆழ் மனசினுள் பதிய வைக்கப்பட்ட நான், உங்க நிஜ கேரெக்டரை வெளியே கொண்டு வரேன்.”
அவன் சிரிப்புடன், “நீ தான் இப்படி சொல்லி சொல்லி உன்னை என் ஆழ் மனசில் பதிய வைக்க முயற்சி செய்றது போல் இருக்குது.”
“அதெல்லாம் ஆல்ரெடி பதிஞ்சாச்சு! என்ன லுக்கு? பதிஞ்சதால் தானே, ஹாஸ்பிடல்லையும் என்னை மனைவினு சொன்னீங்க!”
“நான் தான் சொன்னேனே!”
“என்ன சொன்னீங்க? எனக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர் உங்களுக்கு நல்ல பழக்கம் தான். ஆனா, ரொம்ப க்ளோஸ் இல்ல.. நீங்க சொன்னீங்க என்ற ஒரே காரணத்துக்காக, எனக்கே தெரியாம ட்ரக்(drug)கொடுத்ததை அவர் நம்பினாலும், ட்ரீட்மென்ட்கு கொஞ்சம் யோசித்தார். இங்கே அவர் தான் சீஃப் டாக்டர்னாலும், போலீஸ்கும், வெளியே யாருக்கும் தெரியாம டரக்(drug) ட்ரீட்மென்ட் கொடுக்க தயங்கினார். நான் உங்களுக்கு யாரு, ரொம்ப நெருக்கமானு கேட்டார். அதனால மனைவினு சொல்லிட்டீங்கனு சொன்னீங்க!”
“ஹும்ம்…”
“சரி.. நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.. உங்க தங்கைனு சொல்லி இருந்தாலும், அவர் இதே ட்ரீட்மென்ட் கொடுத்து இருப்பார் தானே!”
‘அதானே! இவ சொல்றதும் சரி தானே! நாம ஏன் மனைவினு சொன்னோம்!’ என்று தனக்குத் தானே, அதிர்வுடன் கேள்வி கேட்டுக் கொண்டான்.
“இன்னொரு கேள்வி கேட்கிறேன்.. டாக்டர் என்னை யாருனு கேட்ட நேரத்தில், உங்க மைண்டில் அந்த சுதீப் வந்தானா?”
அவன் மறுப்பாக தலையை அசைக்க,
அவள், “ஒருவேளை அந்த சுதீப் நேர்மையான போலீஸாவே இருந்தாலும், நீங்க என்னை இங்கே கூட்டிட்டு வந்தது தெரியாது. ஸோ… அவன் வந்து விசாரிக்கப் போறது இல்லை.. ஆனா, அவன் நினைப்பு கூட அந்த நேரத்தில் உங்களுக்கு இல்ல.. அப்போ ஏன் தங்கைனு சொல்லாம, மனைவினு சொன்னீங்க?” என்று கேட்டாள்.
அவன் அதிர்வு கலந்த சுய பகுப்பாய்வில் அமர்ந்து இருக்க,
“என்ன அரசே! மண்டை மேல இருக்க கொண்டையை கண்டு பிடிச்சிட்டீங்களா?” என்று உதட்டோரப் புன்னகையுடன், வலது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்கியபடி கேட்டாள்.
“ஹோட்டலில் திரும்ப திரும்ப சொன்னதில், நீ சொல்றபடி என்னோட ஆழ் மனசில், நான் சொன்ன பொய் பதிஞ்சு போச்சு போல!” என்று உண்மையை ஒத்துக் கொண்டான்.
“இந்த நேர்மையும் எனக்கு பிடிச்சு இருக்குது. அந்தப் பொய்யை உண்மை ஆக்கிடலாம்னு தான் சொல்றேன்.”
“நான் உனக்கு செட் ஆக மாட்டேன்.. முக்கியமா என்னோட வீடு, உனக்கு செட்டே ஆகாது.. சொல்லப் போனால், அது யாருக்குமே செட் ஆகாது.. ஸோ, இந்த பேச்சே வேணாம்.”
“ஸோ… பிரச்சனை உங்க வீடு தான்.. உங்க வீட்டில் ஓகே சொல்ல மாட்டாங்கனு யோசிக்கிறீங்களா?”
“உன்னோட வீட்டில் மட்டும் ஓகே சொல்லி விடுவாங்களா? அதுவும், யாரு என்னனு முன்ன பின்ன தெரியாத ஒருத்தனை, பார்த்த ஒரே நாளில், ஒரு மணி நேரத்திலேயே கல்யாணம் செய்ற முடிவை நீ எடுத்தா, ஓகே சொல்லிடுவாங்களா?”
“நான் உங்களை பார்த்து, ஒரு மணி நேரம் தான் ஆச்சா?”
“நீ தெளிவா இருக்கிற நேரத்தை கணக்கு செய்தா, இன்னும் ஒரு மணி நேரம் கூட முடியல…”
“ஹோட்டலில் உங்களை பார்க்கிற நிலையில் நான் இல்லை என்றாலும், முதல்ல அந்த பொறுக்கி கிட்ட இருந்து காப்பாற்றினப்ப… நீங்க பேசினதெல்லாம் என் காதில் விழுந்தது தான். அப்புறமும் கூட ரூம் வாசலில் நீங்க பேசினது அரைகுறையா கேட்டுது தான். ஸோ, உங்களை எனக்கு ஒன்னரை மணி நேரத்துக்கு மேலேயே தெரியும்!”
“சரி அப்படியே இருக்கட்டும்.. இந்த டைம் போதுமா, லைஃப் டைம் பார்ட்னரை தேர்ந்தெடுக்க?”
“எனக்கு போதும்.”
“இது வாதம் இல்லை, விதண்டாவாதம்!”
“நான் முதல்லேயே சொன்னேன்.. நான் எதையும் சும்மா சொல்ல மாட்டேன். அண்ட்.. எங்க வீட்டில் கண்டிப்பா நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுவாங்க. என் பக்கம் என்னோட பாட்டியும், தயாவும் தான் ஓகே சொல்லணும்.. தயா இந்நேரம் உங்களை பற்றிய முழு விவரத்தையும் எடுத்து இருப்பான். தயா ஓகே சொல்லிட்டா, பாட்டி மறுபரிசீலனை செய்யவே மாட்டாங்க. அதுவும், எனக்குப் பிடித்து, நான் தான் கல்யாணப் பேச்சை எடுத்தேன்னு தெரித்தால், நோ அப்பீல்..! ஸோ உங்க வீட்டில் நீங்க தான் பேசணும்.”