
குறிப்பு: தாமதத்திற்கு மன்னிக்கவும் தோழமைகளே!!! அக்சுவலி எனக்கு ஒரு ப்ராப்ளம் இருக்குது.. அதிகாலை 2.45மணியளவில் எனது கரத்திலே, என் கண் முன்னேயே என்னவனின் இறுதி மூச்சு அடங்கிய நிகழ்வை விட்டு இன்னமும் என்னால் வெளி வர முடியலை.. அதனால் இரவு தூக்கமே இல்லை.. அதை சரி செய்ய தான் மருத்துவ ஆலோசனை மற்றும் என் தந்தை தந்த ஊக்கத்தில் கதையை எழுத ஆரம்பித்து, online வரவும் ஆரம்பித்து இருக்கிறேன்.. பெரும் போராட்டத்துடன் தான் “உறவானாய்..! உயிரானாய்..!” கதையை எழுதி முடித்தேன்.. அதை எழுதிய நாட்களில் ஓரளவிற்கு உறங்கினேன், ஆனால் மீண்டும் தூங்க சிரமம் கொள்கிறேன்.. அதிலும் வெகு சில நாட்கள் சிறிதும் தூக்கம் இல்லாமல் தூங்கா இரவாக நகர்கிறது..
உங்களிடம் கமிட் செய்தால் அதற்காகவேனும் காலை 6 மணிக்கு எழுவேன் என்ற நம்பிக்கையில் தான் கமிட் செய்தேன்.. ஆனால் அதிகாலை 3.30, 4 மணினு தூங்க ஆரம்பிக்கிறதால் காலை 7 மணி குறைந்து எழ முடிவது இல்லை.. 7 மணிக்கு எழுந்தால், பையனை ஸ்கூல் அனுப்பிட்டு தான் லப்டாப் ஆன் செய்ய முடியும்.. தொடர்ந்து தாமதமாக போஸ்ட் போட கூடாது என்ற நினைப்பில் இரவு சற்று முன்னதாக உறங்க முயற்சி செய்வேன் என்று நம்புகிறேன், ஆனால் உறுதியாக தெரியவில்லை..
இப்போ எதற்கு இதை சொல்கிறேன் என்றால், உங்களிடம் கமிட் செய்தது அப்படியே இருக்கட்டுமா? இல்லை இனி ‘காபி வித் கோம்ஸ் ஸ்டோரி’-யை ‘பிரேக்பாஸ்ட் வித் கோம்ஸ் ஸ்டோரி’ னு மாற்றி காலை 9.30 மணிக்கு போஸ்ட் போடவா?
உங்களிடம் கமிட் செய்தது அப்படி இருந்தால், என்னை மாற்ற முயற்சி செய்வேன்.. ஆனால் உங்களுக்கு சிரமம் இருக்கும், அதாவது fixed டைம்னு இல்லாம, காலை 6.45-7 அல்லது 9.30-10க்கு எனது போஸ்ட் வரும்.. இப்போ முடிவு உங்கள் கையில், நான் எப்போ போஸ்ட் போடுறதுனு சொல்லுங்க..
கீதம் 5
மருத்துவமனை அறையில், மகிழ் கொற்றவன் அதிர்ச்சியில் அமர்ந்திருக்க, கால்களை நீட்டி தலையணையை முதுகிற்கு அணை கொடுத்து சாய்ந்து அமர்ந்திருந்த லயனிகாஸ்ரீ, புருவத்தை லேசாக உயர்த்தியபடி, “என்ன?” என்றாள்.
அவன் அதிர்ச்சி விலகாமல், “எனக்கு புரியலை…” என்றான்.
“தமிழில் தான கேட்டேன்.. அப்புறம் என்ன புரியலை?”
“இல்ல.. நீங்க..”
“நீங்க இல்ல.. நீ”
“இப்போ, அதுவா முக்கியம்?”
“நிச்சயமா.. அதுவும் நீங்க சொல்லி இருக்கதுக்கு, அதானே பொருத்தமும் கூட”
“ப்ச்.. லயனி.. பி சீரியஸ்!”
“ஹாஸ்பிடல் பெட்டில் இருக்கிறேன்.. இதுக்கு மேலயும் சீரியஸ்ஸா!”
அவன், அவளை போலியாக முறைக்க,
அவளோ, “நான் ஒன்னு சொல்லவா? நீங்க.. நீங்க சொன்ன கேரெக்டராவே மாறீட்டீங்க! ஆனா, அதை நீங்க இன்னும் உணரவே இல்லை.” என்றாள்.
“என்ன கேரெக்டர்?”
“அதான் லயனிகாஸ்ரீயோட புருஷ் கேரெக்டர்.” என்று கூறி கண் சிமிட்டினாள்.
அவன் இப்பொழுது நிஜமாகவே முறைக்க,
அவளோ புன்னகையுடன், “அட நிஜமா தான் பாஸ் சொல்றேன்! யாரோ இல்ல, நீங்களே உங்க ஆழ் மனசுக்குள் புகுந்து நீங்க லயனிகாஸ்ரீ கணவன்னு உங்களை நம்ப வச்சு இருக்கிறீங்க. அதான் இன்னமும் என்னை லயனினு கூப்டுட்டு இருக்கிறீங்க. அதுவும் யாருமே கூப்பிடாத வகையில் ஸ்பெஷல்லா!” என்று கூறி மீண்டும் கண் சிமிட்டினாள்.
அப்பொழுது தான், இன்னமும் அவளை ‘லயனி’ என்றே அழைப்பதை அவனே கவனித்தான்.
ஒரு வித தர்மசங்கடமான குரலில், “அது அப்போ கூப்பிட்ட அதே ஃப்ளோல அப்படியே கூப்டுட்டேன்.. சாரி.” என்றான்.
“இதில் சாரி சொல்ல என்ன இருக்குது?”
“இல்ல.. அப்போ எல்லோரும் உங்க பெயரை சுருக்கி லயானு சொல்றப்ப, கணவன்னு சொல்லப் படுற நான் வேற பெயர் சொல்லணும்னு நினைத்து லயனினு சொன்னேன்.. அப்படி பேசி பேசி.. அப்படியே கூப்டுட்டேன்.”
“அதைத் தான் நானும் சொல்றேன்.. அது அப்படியே உங்க ஆழ் மனசில் பதிஞ்சு போச்சு.”
“லயனிகாஸ்ரீ!”
“செல்லாது செல்லாது.. லயனி சொல்லுங்க.”
“ப்ச்”
“ஓகே.. இப்போ என்ன குழப்பம் உங்களுக்கு? நான் டரக்(drug)அப்ட்டர் எஃப்பெக்ட்டில் கேட்கலை.. தெளிவான மனநிலையில் தான் கேட்டேன்.. திரும்ப வேணாலும் கேட்கிறேன்.. என்னை கல்யாணம் செய்துக்கிறீங்களா?”
“இது விளையாட்டு இல்லை…”
அவள் முறைப்புடன், “என்னைப் பார்த்தா விளையாடுற மாதிரி தெரியுதா?” என்றாள்.
“இல்ல.. ஆனா..” என்று இழுத்து நிறுத்தினான்.
“நான் எதையும் ஸ்போர்டிவ்வா, பாசிட்டிவ்வா எடுத்துக்கிற, கொஞ்சம் ஜாலியான பெர்சன் தான்..! ஆனா ஜஸ்ட் லைக் தட் வார்த்தைகளை விடுற ஆள் கிடையாது.”
“ஓகே.. நான் உங்களை..”
“உன்னை”
“நான் உங்களை…” என்றே அவன் ஆரம்பிக்க, அவளோ காதுகளை மூடிக் கொண்டாள்.
“ஹே! ட்ரிப் ஏறிட்டு இருக்கிற கையை போய்…” என்றபடி அவன் வேகமாக எழ,
அவளோ, “நீங்க ஒருமையில் பேசினா தான், கையை கீழே இறக்குவேன்.” என்று மிரட்டிய போதும், கண் சிமிட்டினாள்.
முறைத்தபடி அவளது வலது கையை கீழே இறக்கி மெத்தையில் வைத்தவன், “நான் உன்னை காப்பாற்றியதால் இந்த முடிவா?” என்று கேட்டான்.
அவனது ஒருமை அழைப்பில் மென்மையாய் நகைத்தவள், பின் அவனை தீர்க்கமாகப் பார்த்த படி, “தயா, எனக்கு யாருன்னு தெரியுமா?” என்று கேட்டாள்.
“வெல் விஷ்ஷர்.”
“அதுவும் தான்.. என்னோட நல்ல பிரெண்டும் கூட.. ஆனா இதெல்லாம் மீறி, தயா என்னோட பாடிகார்ட்”
அவன் யோசனையுடன் பார்க்க,
அவள், “இந்த நேரத்தில் ஒரு விசயத்தை சொல்லிக்கிறேன்.. ரிது அண்ட் நவீக்கு கூட தெரியாத உண்மை இது. என்னோட உயிருக்கு ஆபத்து இருக்குது. அதான் என்னோட பன்னிரெண்டாவது வயதில் இருந்தே தயா என்னோட இருக்கிறான். நீங்க கல்யாணத்துக்கு ஓகே சொன்ன பிறகு, இன்னொரு ரகசியத்தைப் பற்றி சொல்றேன். ஆனா, அதை முழுசா சொல்ல மாட்டேன்.” என்று கூறி கண் சிமிட்டினாள்.
அவன் அவளையே பார்த்தபடி இருக்க, அவள் புன்னகையுடன், “என்ன பயமா இருக்குதா?”
‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்டியவன், “இதை எல்லாம் மீறி, எப்படி எப்போதும் ஒரு ஸ்மைலோட, பாசிட்டிவ் எனர்ஜியோட இருக்க முடியுதுனு பார்க்கிறேன்.” என்றான்.
அப்பொழுதும் மென்னகையுடன், “நான் அப்படி தான்.. பாசிட்டிவிட்டியை நான் கத்துக்கிட்டது, என்னோட பாட்டி கிட்ட இருந்து தான்.. இழப்புகள் எல்லாத்தையும் மீறி, தனி மனிஷியா ஒரு ஸ்கூலை வெற்றிகரமா நடத்தி, என்னையும் வளர்த்தாங்க.. அப்புறம் எப்போதும் என்னோடவே இருக்கிற தயாவும், ஒரு காரணம்.” என்றாள்.
“உன்னோட பாட்டியப் பார்த்து வளர்ந்தது காரணமா இருக்கலாம்.. ஆனா அதையும் மீறி, கண்டிப்பா உன்னோட இயல்பான குணமும் ஒரு காரணமா இருக்கும்.”
அவள் தோள்களை குலுக்க,
“ஹே! நிஜமா தான் சொல்றேன்.”
“டாக்டர் சொன்னா கேட்டுக்க வேண்டியது தான்” என்று பவ்வியத்துடன் கூற,
அவன் போலியான மிரட்டும் குரலில், “ஓய்! என்ன நக்கலா?” என்றான்.
“அச்சோ, ஆமா அரசே!”
“அடப்பாவி! எல்லோரும் அச்சோ இல்லனு தானே சொல்லுவாங்க.”
“அதான் லயனி” என்று கூறி மென்னகையுடன் கண் சிமிட்டினாள்.
“ஓகே.. இப்போ ஏன் தயா பற்றி சொன்ன?”
“உங்க கேள்விக்கான பதில், அதில் தான் இருக்குது.”
சில நொடிகள் யோசித்தவன், “அதாவது.. உன்னை காப்பாற்றியதற்காக கல்யாணம் செய்யணும்னா, நீ தயாவை கேட்டு இருப்பனு சொல்ல வர.. ரைட்!” என்றான்.