தயாளனின் லேசான அழுத்தமே, ராகேஷிற்கு வலியைக் கொடுக்க, திமிறியபடி, “நீ யாருடா? கையை எடு.” என்றான்.
“நீ கடத்த நினைச்சது, என்னோட பாப்பாவை…”
“பாப்பாவா!” என்று விஷமமாக சிரித்தபடி லயனிகாஸ்ரீயை பார்த்தவன், “விட்டா பத்து மாசத்தில் அவளே பாப்பாவை கொடுப்பா.” என்றான்.
சட்டென்று தயாளன் அவனது கையை, அவனின் முதுகின் பக்கம் கொண்டு சென்று முறுக்க, அவன் வலியில் கத்தினான்.
சுதீப் தயாளன் அருகே வந்து, “சார் விடுங்க.. நான் பார்த்துக்கிறேன்.” என்றபடி தயாளனின் கையை எடுத்து விடப் பார்க்க, அவனால் தயாளனின் கையை சிறிதும் அசைக்க முடியவில்லை.
ராகேஷ், “விடு..டா.” என்று வலியில் கத்தினான்.
மகிழ் கொற்றவன், “தயா” என்று அழைக்க,
அவனைப் பார்த்தான். கண்களால் அவனை அருகே அழைத்தவன், சற்றே வழுக்கிய லயனிகாஸ்ரீயை… வலித்த கைகளை பொருட் படுத்தாமல் தம்கட்டி தூக்கிப் பிடித்தான்.
ராகேஷை விட்டு விட்டு, “நான் தூக்குறேன்.” என்றபடி அருகே வந்த தயாளனிடம்,
“நான் பார்த்துக்கிறேன்” என்ற மகிழ் கொற்றவன் ,அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “அவனை விட்டுடாதீங்க.. அவன் என்ன கொடுத்தான்னு தெரிந்தால் தான், சரியான ட்ரீட்மென்ட் கொடுக்க முடியும்.” என்றான்.
“சரி நீங்க கிளம்புங்க.. எந்த ஹாஸ்பிடல் போகப் போறீங்க? டாக்டர் யாரும் தெரியுமா?”
பார்வையால் புதியவனை சுட்டிக் காட்டிய மகிழ் கொற்றவன், “நானும், டாக்டர் சந்தோஷும் பார்த்துக்கிறோம். இனி தான் டாக்டர் கிட்ட பேசணும்.. நான் உங்களுக்கு போன் செய்றேன்.. லயனி போன் என் கிட்ட தான் இருக்கு.” என்றான்.
குரலை தாழ்த்திய தயாளன், “பாப்பா போனை லாக் செய்து இருப்பா.. நீங்க உங்க நம்பரை சொல்லுங்க.. நான் மெமரைஸ் செய்துப்பேன்.”
மகிழ் கொற்றவனும், மெல்லிய குரலில் தனது கைபேசி எண்னை கூறினான். பின் சிறு தலை அசைப்புடன் கிளம்ப, அவன் கிளம்பும் முன் தயாளன், லயனிகாஸ்ரீயின் தலையை பரிவுடன் வருடினான்.
ஆனால், இவர்களை கவனிக்கும் நிலையில் சுதீப்பும் ராகேஷும் இல்லை. சுதீப் மெல்லிய குரலில் நடந்ததை சுருக்கமாகக் கூறி, நண்பனை எச்சரித்துக் கொண்டு இருந்தான்.
அவர்கள் கிளம்பியதும் தயாளன், “என்ன எஸ்.ஐ சார் பிரச்சனையில் மாட்டிக்காம கிளம்புனு சொல்லிட்டு இருக்கிறீங்களா? ஆனா, அது அவ்வளவு சுலபம் இல்லையே!” என்றான்.
சுதீப் அமைதியாக இருக்க,
ராகேஷ், “நீ என்ன என்னை தடுக்கிறது! நான் கிளம்புவேன்டா” என்று எகிறினான்.
ராகேஷின் கையை பற்றிக் கொண்ட தயாளன், “எங்க என் பிடியில் இருந்து முதல்ல தப்பி பார்க்கலாம்?” என்று சவாலிட்டான்.
ஐந்து நிமிடங்கள் போராடியும், ராகேஷால் தயாளனின் ஒற்றை விரலைக் கூட அசைக்க முடியவில்லை.
தயாளன், “நீங்க என்ன செய்யப் போறீங்க எஸ்.ஐ சார்?” என்று கேட்டான்.
தயாளனின் உடும்பு பிடியையும், போராடிக் கொண்டு இருந்த நண்பனையும் பார்த்த சுதீப், “நான்.. கிளம்புறேன்.” என்றிருந்தான்.
இருவரில் ஒருத்தராவது வெளியே இருந்தால் தான் சமாளிக்க முடியும் என்று நினைத்த ராகேஷ், அமைதியாகத் தான் இருந்தான்.
தயாளன் தலை அசைக்கவும், சுதீப் கிளம்பி நான்கு அடிகள் தான் எடுத்து வைத்து இருப்பான், “சுதீப்” என்ற அழைப்புடன், ராஜீவ் கிருஷ்ணா அவ்விடம் வந்தான். அவனுடன் ரிதன்யாவும் நவீனாவும் இருந்தனர்.
சுதீப் மனதினுள், ‘அவ்ளோ தான்.. எல்லாம் முடிஞ்சுது’ என்று நினைக்க,
ராகேஷ் அப்பொழுதும் திமிராகத் தான் நின்றிருந்தான்.
சுதீப் வேறு வழி இல்லாமல் திரும்பி வந்து நிற்க, தயாளன், “உங்களுக்கு இவரை தெரியுமா?” என்று கேட்டான்.
ராஜீவ் கிருஷ்ணா கோப விழிகளுடன், சுதீப் மற்றும் ராகேஷை முறைத்தபடி, “ஏன் தெரியாம! இவன்க கூட்டுக் களவானிங்க.. அண்ட் இவன் நேம் நித்தின் இல்லை, ராகேஷ்.” என்றான்.
தயாளன், “நவீனா, ரிதன்யா, பாப்பா ரூமில் இருங்க.” என்றான்.
ரிதன்யா ஏதோ பேச வர, தயாளன் அழுத்தமான குரலில், “உங்களை அங்க இருக்கச் சொன்னேன்.” என்று கூறிவிட்டு,
ராஜீவ் கிருஷ்ணாவிடம் பார்வையால் சுதீப்பை சுட்டிக் காட்டி, “அவனை கூட்டிட்டு வாங்க.” என்றவன் ராகேஷை இழுத்துக் கொண்டு தனது அறையினுள் சென்றான்.
அவன் அறையினுள் சென்ற அடுத்த நொடி, ராகேஷ் வலியில் சத்தமாகக் கத்தினான்.
ரிதன்யாவும் நவீனாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி, லயனிகாஸ்ரீ அறையினுள் சென்று கதவை மூடிக் கொண்டனர்.
தயாளனைத் தொடர்ந்து உள்ளே வந்த ராஜீவ் கிருஷ்ணா, “என்னாச்சு?” என்று வினவ, சுதீப் பீதியுடன் நின்றிருந்தான்.
“கதவை லாக் செய்துட்டீங்களா?”
“ஹும்ம்.. இவன் ஏன் அலறுறான்?”
“சின்னதா ரிஸ்ட் போனை(bone) உடைச்சு இருக்கிறேன்.”
ராஜீவ் கிருஷ்ணா அதிர்வுடன் பார்க்க,
தயாளனோ, “இது வெறும் ஆரம்பம் தான்.. என் பாப்பா மேலயே கை வைத்து இருக்கிறான்.. சும்மா விடுறதா!” என்றான்.
பின், “நீங்க இங்கே இருக்கிறதால், உங்களுக்கு ஏதும் பிரச்சனை..” என்ற தயாளனின் பேச்சை இடையிட்ட ராஜீவ் கிருஷ்ணா,
“சமாளிச்சுக்கலாம்.. சொல்லிட்டு தான வந்து இருக்கிறேன்.. அதை விட எனக்கு லயனிகா நலனும், என் ரிதுவோட நிம்மதியும் ரொம்ப முக்கியம்.. லயனிகா எப்படி இருக்கிறாங்க?”
“அதை இவன் தான் சொல்லணும்” என்ற தயாளன் நன்றாக இருந்த ராகேஷின் இடது கையை பற்றி முறுக்கியபடி, “சொல்லுடா.. என்ன ட்ரக்(drug)கொடுத்த? எவ்வளவு கொடுத்த?” என்று கேட்டான்.
“என்னது ட்ரக்..ஆ!” என்று ராஜீவ் கிருஷ்ணா பெரிதும் அதிர,
ராகேஷோ வலியிலும், “என்னை விட்டா தான் சொல்லுவேன்.. நான் சொன்னா தான் உன்னோட பாப்பாக்கு சரியான ட்ரீட்மென்ட் கொடுக்க முடியும்.” என்று திமிராகப் பேசினான்.
சட்டென்று, சுதீப்பின் துப்பாக்கியை எடுத்து ராகேஷின் நெற்றியில் வைத்த தயாளன், “என்னை பத்தி உனக்கு தெரியாது.. வீணா செத்துப் போகாத…”
“நீ என்னை சுட மாட்ட”
“சுட மாட்டேன்னு தப்பு கணக்கு போடாத.. எப்படியும் உன்னை விட்டதும், என்ன ட்ரக்னு(drug)சொல்லாம தப்பிச்சுப் போக தான் பார்ப்ப.. உண்மையை சொல்லாத நீ எதுக்கு உயிரோட இருக்கணும்! உன்னை சுட்டுட்டு, உனக்கும் இந்த எஸ்.ஐக்கும் நடுவில் நடந்த பிரச்சனையில், அவன் உன்னை சுட்டுட்டான்னு சொல்லுவேன்.. கிருஷ்ணாவும் அப்படி தான் சொல்வார்.. என்ன கிருஷ்ணா?”
“கண்டிப்பா” என்று ராஜீவ் கிருஷ்ணாவும் உறுதியான குரலில் கூற, முதல் முறையாக ராகேஷ் கண்ணில் பயம் தெரிந்தது.
சுதீப் தயாளன் மீது பாய, அதை கணித்த தயாளனோ, ராகேஷை இழுத்தபடி நகர்ந்து இருந்தான். சுதீப் அருகே இருந்த மெத்திருக்கையில் விழ,
தயாளன், “அசைஞ்ச முதல் குண்டு உனக்கு தான்” என்று மிரட்டினான்.
பின், “கிருஷ்ணா, பெட்ஷீட் எடுத்துட்டு வந்து இவனை கட்டிப் போடுங்க” என்றான்.
ராஜீவ் கிருஷ்ணா அவ்வாறே செய்தான்.
ராகேஷ், “நான் சொல்லிடுறேன்.. முதல்ல என் கைக்கு ட்ரீட்மென்ட் கொடு.. வலி உயிர் போகுது.” என்று கத்தினான்.
“இதுக்கே வலி உயிர் போகுதா! ஜஸ்ட் ஹெர்-லைன்(air-line)ஃப்ராக்சர் மாதிரி சின்னதா தான் உடைத்து இருக்கிறேன்.. அதுக்கே இவ்ளோ ஆர்பாட்டம் செய்ற!”
“வலி எனக்கு தானே! அதான் நீ கேட்ட டீட்டேல்ஸ் சொல்றேன்னு சொன்னேனே! அப்புறம் என்ன?”
“முதல்ல நீ சொல்லுடா.. இல்லை நிஜமாவே உயிர் போற வலினா, என்னனு காட்டுவேன்.”
சுதீப், “என்ன கொடுத்தனு சொல்லித் தொலையேன்டா” என்றான்.
ராகேஷ் வேறு வழி இல்லாமல், லயனிகாஸ்ரீக்கு தான் கொடுத்த போதை மருந்தின் பெயரையும், அதை எவ்வளவு கொடுத்தான் என்றும் கூறினான்.
சனி மற்றும் ஞாயிறு விடுமுறை….. திங்கள் காலை 6.45மணிக்கு சிந்திப்போம்..
கீதம் இசைக்க காத்திருப்போம்…