காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 4.2

தயாளன், அது ஏன் சார், உங்க விசாரணை ஒருதலை சார்பா இருக்குது?” என்று கேட்டான்.

இல்லை.. அப்படியெல்லாம் இல்லை..” என்று சுதீப் தனது திணறலை மறைத்தபடி பதில் கூறினான்.

என்ன இல்லை? அதான் மிகிழ் சொல்றாரே!”

சுதீப் வரவழைத்த தைரியத்துடன், நான் என் கடமையைத் தான் சார் செய்றேன்.” என்றான் விறைப்பாக.

மகிழ் கொற்றவன், எது! இதான் உங்க கடமையா சார்? உங்க ஹையர் அஃபிஸியல் சொன்னாங்கனு பிளைண்டா விசாரிக்கிறீங்களா? இல்ல.., அவனிடம் எதுவும் வாங்கிட்டீங்களா?” என்றான்.

பார்த்து பேசுங்க மிஸ்டர்!”

பின்ன என்ன சார்! நான் லயனி கணவன்னு ஒன்னுக்கு ரெண்டு ப்ரூப் காட்டி இருக்கிறேன். ஆனா, இன்னும் நீங்க அவனை ஒரு கேள்வி கூட கேட்காம, என்னைத் தான் கேட்டுட்டு இருக்கிறீங்க..! அப்போ, உங்க மேல் சந்தேகம் வரது இயல்பு தானே! போற போக்கைப் பார்த்தால், வந்த இடத்தில் பிரச்சனை வேண்டாம் என்ற என் நினைப்பை கெடப்பில் போட்டுட்டு கம்ப்ளைண்ட் கொடுக்கப் போறேன்.. அண்ட் அதில் உங்க பெயர் இருந்தாலும் இருக்கலாம்.”

என்ன மிஸ்டர், மிரட்டுறீங்களா?”

இல்லை.. நடக்கப் போறதை சொல்றேன்.. கிட்டத்திட்ட அரை மணி நேரமா, என் மனைவியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக விடாம தடுத்திட்டு இருக்கிறீங்க.. அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்…” என்று நிஜமான கோபத்துடன் மிரட்டவே செய்தான்.

தயாளன், என்னாச்சு மகிழ்? மயக்கம்னு தானே சொன்னீங்க!” என்று சந்தேகமாகக் கேட்க,

அவன் வெளிப்படையாக கூற முடியாத தவிப்புடன்… அரை கண் ஜாடையில் சுதீப்பை சுட்டி காட்டி விட்டு,

மயக்கம் தான்… ஆனா, மயக்கத்துக்கு என்ன மருந்து அவன் கொடுத்தான்னு தெரியாதே! அது என்ன மருந்துன்னு கண்டுபிடித்து, சரியான நேரத்தில் ப்ராப்பர் டயாகனைஸ் செய்றது தான் நல்லது.” என்றான்.

மகிழ் கொற்றவனின் முக பாவனை மற்றும் மறைமுக பேச்சில் இருந்து விஷயத்தை சரியாக யூகித்த தயாளன், சிறு அதிர்வுடன் மெல்லிய வாய் அசைவுடன், ட்ரக்!(drug) என்று வினவ, மகிழ் கொற்றவனும் ‘ஆம்’ என்பது போல் கண்களை மூடித் திறந்தான்.

சில நொடிகள் கை முஷ்டியை இறுக்கமாக மூடி, தனது கோபத்தை கட்டுப்படுத்திய தயாளன், நீங்க பாப்பாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க.. யார் என்ன செய்றானு, நான் பார்க்கிறேன்.” என்றான்.

பின், நவீனா நீ போய் ரிதன்யாவையும், மிஸ்டர் ராஜீவ் கிருஷ்ணாவையும் உடனே இங்க கூட்டிட்டு வா.” என்றான்.

இருவரும் நகரும் முன், தனது பதற்றத்தை மறைத்தபடி சுதீப் அவசரமாக, ஹலோ! என்ன நீங்க பாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு செய்யச் சொல்றீங்க! விசாரிச்சிட்டு இருக்கும் போது, அப்படியெல்லாம் கிளம்பிப் போக முடியாது.” என்றான்.

அப்படி என்ன பிரச்சனை வருதுன்னு நானும் பார்க்கிறேன்! நீங்க கிளம்புங்க மகிழ்.” என்று சுதீப்பை கோபம் கலந்த அழுத்தப் பார்வை பார்த்தபடி தயாளன் கூற,

சுதீப் சட்டென்று அடங்கி நின்றான்.

தயாளன் அடுத்து நவீனாவைப் பார்க்க, அவள் உடனே கிளம்பிவிட்டாள்.

மகிழ் கொற்றவனும் அறையின் உள்ளே சென்றான்.

சுதீப் அமைதியாக நிற்பது போல் தெரிந்தாலும், உள்ளுக்குள் பதற்றம் மற்றும் பயத்தின் காரணமாக, அவனது இதயத்துடிப்பு எகிறிக் கொண்டு இருந்தது.

அப்பொழுது, ராகேஷும் இன்னொரு நபரும் வர,

சுதீப் அவசரமாக ராகேஷைப் பார்த்து, மிஸ்டர் நித்தின், என்னோட ஹையர் அஃபிஸியல் சொன்னாங்கனு தான், உங்க சார்பா நான் விசாரிக்க வந்தேன்.. ஆனா, இங்கே நடக்கிறதை எல்லாம் பார்த்தா, எனக்கு என்னவோ உங்க மேல் தான் சந்தேகம் வருது.. உண்மையை சொல்லுங்க.”

ராகேஷ், இதோ இவர்..” என்று ஆரம்பிக்க,

பொறுமை இழந்த சுதீப் அழுத்தமான குரலில், மிஸ்டர் நித்தின்.. நான் சொல்றது உங்களுக்கு புரியலையா? ரெண்டு சாட்சிகள் உங்களுக்கு எதிரா இருக்குது.. இதுக்கு மேல விசாரிக்க இங்கே எதுவும் இல்லை.. நான் கிளம்புறேன்.” என்றான்.

ராகேஷ் புரியாமல் நண்பனைப் பார்த்தான். அவனோ பார்வையால் ‘இதை இத்துடன் விடு’ என்று எச்சரித்தான். நண்பன் காரணம் இல்லாமல் கூற மாட்டான் என்பது புரிந்தாலும், லயனிகாஸ்ரீயை விட மனமில்லாமல், அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க சார்.” என்றான்.

சுதீப்பால், இவன் என் ஜோலியை முடிக்காம விட மாட்டான்’ என்று மனதினுள் புலம்ப மட்டுமே முடிந்தது.

தயாளன் ராகேஷை அடித்துவிடும் வேகத்தில் இருந்த நொடியில், அவனைக் காப்பாற்றுவது போல் மகிழ் கொற்றவன் லயனிகாஸ்ரீயை கைகளில் ஏந்தியபடி வந்தான். சட்டென்று தயாளனின் பார்வை மொத்தமும், தவிப்புடன் லயனிகாஸ்ரீ மீது திரும்பியது.

மகிழ் கொற்றவன், ஒன்னுமில்லை.. சரி செய்திடலாம்.” என்று தைரியம் கூறினான்.

அந்த சூழ்நிலையிலும், ராகேஷின் பார்வை லயனிகாஸ்ரீ மீது காமத்துடன் படிய, மகிழ் கொற்றவன் பல்லைக் கடித்தான்.

சட்டென்று திரும்பி ராகேஷைப் பார்த்த தயாளன், மீண்டும் அவனை அடிக்கத் துடிக்க,

அதை புரிந்தது போல் மகிழ் கொற்றவன், தயா” என்று அழைத்து மறுப்பாக தலை அசைத்தான்.

ராகேஷுடன் வந்த புதியவன்,உங்க வைஃப்கு என்னாச்சு டாக்டர்?” என்று மகிழ் கொற்றவனிடம் கேட்டு ராகேஷைப் பார்த்து, என் கிட்ட டாக்டருக்கு முடியலைனு தானே சொன்னீங்க!” என்றான்.

ராகேஷ் அதிர்வுடன் புதியவனைப் பார்க்க,

சுதீப், இப்போ என்ன சொல்றீங்க மிஸ்டர் நித்தின்?” என்றான்.

அது” என்று ராகேஷ் திணற,

சுதீப், மிஸ்டர் மகிழ், நீங்க ஏதும் கம்ப்ளைண்ட் தரீங்களா?” என்று கேட்டான்.

ராகேஷ் கோபத்துடன், டேய்!” என்று ஆரம்பிக்க,

அவசரமாக அவனை இடையிட்டு, மிஸ்டர் நித்தின் பார்த்து பேசுங்க.. இல்லை, நானே யாரும் கம்ப்ளைண்ட் தராமல் அர்ரெஸ்ட் செய்றது போல் ஆகிடும்.” என்ற சுதீப், என்னோட ஹையர் அஃபிஸியலுக்காக தான் பார்க்கிறேன்.. என்னை கேட்டால், இப்பவே நீங்களும் கிளம்புறது தான் உங்களுக்கு நல்லது.” என்றான்.

நீங்க கிளம்புங்க சார்.. மிஸ்டர் நித்தின் கொஞ்சம் மெதுவா வருவார்.” என்று மகிழ் கொற்றவன் கூற,

ஹம்ம்” என்றபடி தயாளன் ராகேஷின் தோளில் கை போட்டு, தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.

error: Content is protected !!