அத்தியாயம் 9

பிரதீஷ் அங்கிருந்து கோபமாகக் கிளம்ப, வேகமாக அவனை வழிமறித்த அனாஹா,”என்னாச்சு பிரதீஷ்? ஏன் இவ்ளோ கோபமா உங்களுக்கு?” என்று கேட்டாள்.

“பின்ன என்னங்க? உங்களுக்காக நான் அவ்ளோ யோசிச்சேன் ஆனால் நீங்க என்னடானா ஆள் இருக்குனு அத்தனை ஈசியா சொல்றீங்க? நான் இவ்ளோ நேரம் எவ்ளோ கஷட்பபட்டேன் தெரியுமா?” என்று அத்தனை ஆதங்கத்துடன் கேட்டான்.

“சாரி, என்னோட சிட்டுவேஷன் அப்படி. அம்மா ஒத்துக்கலை. உங்ககிட்ட சொல்லி இந்த மேரேஜை ஸ்டாப் பண்ண நினைச்சேன். ஆனால் நான் சொல்ல வேண்டியதை நீங்க சொல்லவும் எனக்கு அவ்ளோ ஷாக். அதைவிட நீங்க சைதன்யாவை லவ் பண்றேன்னு சொன்னது அதை விட ஷாக். அதான்!!” என்றாள் அனாஹா.

“ஓ!! சரி விடுங்க. இப்போ என்ன பண்றது? என்னாலயும் நோ சொல்ல முடியாது, உங்களாலயும் நோ சொல்ல முடியாது.”

“ஒரு ஐடியா இருக்கு பிரதீஷ்.”

“என்ன?” என்று ஆர்வமாகக் கேட்டான் பிரதீஷ்.

“நாம இரண்டு பேரும் கீழே போய் ஓகே சொல்லிடுவோம்.”

“வாட்?” என்று கேட்டான்.

“ப்ச் முழுசா கேளுங்க பிரதீஷ்.” என்ற அனாஹா அவனின் அமைதியில் மீண்டும் பேச ஆரம்பித்தாள்,”நீங்க சொன்ன மாதிரி சில சிக்கல்கள் இருக்கு. என்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டு தன்யாவைப் பிடிக்குதுனு சொன்னால் கண்டிப்பா வீட்டுல பிரச்சனை ஆகும். அதுக்கு தான் இப்போ கீழே போய் நமக்கு ஓகேனு சொல்லுவோம். தென் மேரேஜ்கு முன்னாடி நிச்சயதார்த்தம் வைச்சுக்கலாம்னு சொல்லலாம். அப்புறம் டென் டேஸ் பிஃபோர் நானும் கார்த்திக்கும் லவ் பண்ற விஷயத்தை ஓப்பன் பண்ணிடுவேன். அந்த டைம் எப்படியாவது பேசி உங்களுக்கும் தன்யாவுக்கும் மேரேஜ் பண்ணிடலாம்.”

“உங்க வீட்டுல ஐ மீன் உங்க சித்தி ஒகே சொல்லிடுவாங்களா?” என்று சந்தேகத்துடன் கேட்டான் பிரதீஷ்.

“கண்டிப்பா சொல்ல மாட்டாங்க. பிகாஸ் அவங்களுக்கு தன்யா ஆடிட்டர் ஆகனும். அது அவங்களோட ட்ரீம்னே சொல்லலாம். தன்யாவுக்குமே அந்த ஆசை நிறைய இருக்கு. சப்போஸ் மேரேஜ் நடந்தால் அது நடக்காதுனு நினைப்பாங்க. அவங்களை கன்வின்ஸ் பண்ண வேண்டியது உங்களோட பொறுப்பு.”

“ஸ்யூர் அதை நான் பாரத்துக்கிறேன். எனக்குத் தன்யா கூட மேரேஜ் நடந்தால் போதும். அப்புறம் நான் உறுதி தரேன் சையுவோட படிப்புக்குக் கண்டிப்பா எந்த பாதிப்பும் வராது. அவள் ஆடிட்டர் ஆகுறது இனிமேல் என்னோட பொறுப்பும் கூட.” என்று அவன் கூற, அவளை ஒரு மாதிரி பார்த்தாள் அனாஹா.

“உங்களோட பார்வைக்கான அர்த்தம் எனக்குப் புரியுது. நான் இதை சையுவை மேரேஜ் பண்றதுக்காக மட்டும் சொல்லலை. என் மனசுல இருந்து தான் சொல்றேன். ஐ பிராமிஸ் என்னால சையு படிப்புக்கு எந்தப் பாதிப்பும் வராது.” என்றான் பிரதீஷ்.

“தாங்க்ஸ் பிரதீஷ். என்னோட சுயநலத்திற்கு நான் தன்யாவோட வாழ்க்கையைப் பாழாக்கிட்டேன்ற பெயர் மட்டும் வாங்கிக் கொடுத்துரதீங்க பிரதீஷ். அது போதும் எனக்கு.”

“உங்களுக்கு அந்தப் பயமே வேண்டாம். நான் அந்த மாதிரி கண்டிப்பா பண்ண மாட்டேன்.”

“சரி ஓகே.” என்று அவள் கூறியபோது அங்கே வந்தாள் சைதன்யா.

அவளை அத்தனை நெருக்கமாகப் பார்க்கவும் சற்று தடுமாறிப் போனான் பிரதீஷ். அவனது உணர்வுகளை அடைக்க அத்தனை சிரமப்பட்டான். ஆனால் சைதன்யாவோ அவனைப் பார்க்கவில்லை. அனாஹாவிடம் வந்து,”அக்கா கீழே கூப்பிடுறாங்க உங்களை.” என்றாள்.

“நீ போ தன்யா நாங்க வரோம்.” என்று அவள் கூறவும் தன்யாவும் அங்கிருந்து செல்ல, அனாஹா பிரதீஷைப் பார்க்க அவன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.

“இப்போ ஓகே வா? கீழே போகலாமா?” என்று கேட்டாள். அவன் ம் என்று கூறியவுடன் இருவரும் கீழே சென்று தாங்கள் முடிவு செய்தபடி இருவரும் திருமணத்திற்குச் சம்மதித்தனர்.

இரு குடும்பத்திற்கும் சந்தோஷம் பொங்க, திருமண வேலைகள் பார்க்க ஆரம்பித்து விட்டனர். திலகாவிற்கு எப்படித் தன் மகள் உடனே சம்மதம் தெரிவித்தாள் என்று தெரிந்து கொள்ள அத்தனை அவஸ்தையுடன் காத்திருந்தார். காரணம் யாருக்கும் தெரியாமல் அவளிடம் கேட்க வேண்டுமென்று. அதே போல் அவரிற்கு நேரம் வந்தது. அனைவரும் கிளம்பிய பின்னர் அனாஹா தன் அறைக்குச் செல்ல, அவளின் பின்னையே சென்றார்.

திலகா வருவதைப் பார்த்த அனாஹா அமைதியாக அவரைப் பார்க்க, வேகமாக அவளின் அருகில் வந்து அவளின் கையைப் பிடித்து,”உனக்கு நிஜமாவே கல்யாணத்துக்கு ஒகே வா?” என்று சந்தேகத்துடன் கேட்டார்.

“ம் ஆமா. எனக்கு ஒகே தான்.” என்று கூறிக் கொண்டே அவரின் கையை எடுத்து விட்டுப் போட்டிருந்த நகையைக் கழட்ட ஆரம்பித்தாள்.

ஆனால் திலகா மீண்டும் அவளின் கையைப் பற்றி,”உண்மையைச் சொல்லு நிஜமாவே உனக்கு இஷ்டமா இந்தக் கல்யாணத்துல?” என்று மீண்டும் அத்தனை அழுத்தத்துடன் கேட்டார்.

“ப்ச் ம்மா எனக்கு ஓகே தான். ஏன் நம்ப மாட்டீங்கிறீங்க?”

“அப்போ நீ லவ் பண்றேன்னு சொன்னது பொய்யா?”

“இல்லை நான் லவ் பண்ணது உண்மை தான். ஆனால் பிரதீஷை பார்த்ததும் நீங்க சொன்னது தான் ஞாபகம் வந்துச்சு. என்னால பணம், காசு இல்லாம வாழ முடியாது. கார்த்திக்கை கல்யாணம் பண்ணால் கண்டிப்பா என்னால வசதியா வாழ முடியும்னு தோனலை!! அதான் ஒகே சொன்னேன். அப்புறம் பிரதீஷ்கிட்டயும் பேசினேன், அவரோட பேச்சு எனக்குப் பிடிச்சது. அதான் ஓகே சொன்னேன் போதுமா. இப்போ உன் சந்தேகம் தீர்ந்துச்சா?” என்று கேட்டாள் அனாஹா.

அவள் கூறியது ஒருவகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் அவளை நம்பவும் முடியவில்லை. திடீரென அவள் பணம் காசு என்று பேசுவது அவரிற்குச் சந்தேகத்தை வகுத்தது. இருந்தாலும் தன்னை மீறி எதுவும் நடக்காது என்று நம்பி,”இங்கே பார், நீ சொல்றது உண்மையாவே இருந்தாலும் நான் உன்னை நம்ப மாட்டேன். அதே மாதிரி என்னை மீறியும் உன்னால எதுவும் செய்ய முடியாது. அதை மட்டும் மனசுல வைச்சுக்கோ. என்னை ஏமாத்தலாம்னு கனவுல கூட நினைக்காத.” என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அவர் சென்றவுடன் அனாஹாவிற்குச் சற்று பயம் இருக்கத் தான் செய்தது. தங்களது திட்டம் எப்படியாவது நிறைவேற வேண்டுமென்று அத்தனைக் கடவுளையும் அப்போதே வேண்ட ஆரம்பித்து விட்டாள்.

அனாஹாவும் கார்த்திக்கும் உண்மையாகக் காதலித்தார்கள். அவர்களின் காதல் எப்படித் தோல்வியில் முடியும்? அதிலும் பிரதீஷூம் அவர்களுக்குத் துணையாக இருக்க அவர்களின் காதல் வெற்றி பெற்றது.

திலகா பேசிச் சென்றதிலிருந்து அனாஹாவிற்கு யோசனையாக இருந்தது. ஏனோ மனதில் திகென்று இருந்தது. ஏதோ தவறாக நடக்கப் போவதாக மனம் கூறியது. அதற்கு வழி வகுக்கக் கூடாதென்று தீர்மானித்து பிரதீஷைச் சந்திக்க முடிவு செய்தாள். ஆனால் எப்படி என்று புரியாமல் அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது அருணா அவளிற்கு மேக்கப் ட்ரையல் பார்க்க அழைத்தார். அதைச் சாக்காக வைத்து பிரதீஷைச் சந்திக்க முடிவு செய்தாள்.

பிரதீஷ் பார்த்துட்டு வந்த மறுநாளே பரமசிவம் அவளிற்குப் புது கைப்பேசி வாங்கி வந்து அதை அனாஹாவிடம் தந்துவிட்டார். திலகா கூட,”எதுக்குங்க புது மொபைல்? அதான் அவளோடது இருக்கே!” என்று கேட்டார்.

“ப்ச் அதான் உடஞ்சு போயிருக்கே. இப்போ கல்யாணம் வேற முடிவாகிடுச்சு மாப்பிள்ளையோட பேச தோணும். அதுக்கு தான் வாங்கிட்டு வந்தேன்.”எனப் பரமசிவம் கூற, திலகாவால் எதிர்த்து ஒரு வார்த்தைப் பேச முடியவில்லை.

அதே போல் திலகா முன்னாலே கைப்பேசியில் பேசினாள். திலகா அவள் பிரதீஷிடம் பேசுவதாக நினைக்க, அவளோ பிரதீஷ் என்ற பெயரில் கார்த்திக்கின் எண்ணைச் சேமித்து வைத்துப் பேசிக் கொண்டிருந்தாள். பிரதீஷின் குரல் திலகாவிற்குத் தெரியவில்லை. நேரில் பெண் பார்க்க வந்த அன்று பேசியது. சிலருக்குக் குரல் நேரில் ஒரு மாதிரியும் கைப்பேசியில் ஒரு மாதிரியும் இருக்கும். அனாஹாவும் அதையே கூற, திலகாவிற்கும் நம்புவதைத் தவிர வேற வழியில்லை. அதே போல் அனாஹாவின் நடவடிக்கையிலும் தவறாக எதுவும் தெரியவில்லை. அதனால் அவளை அப்படியே நம்பினார் திலகா.

அன்று அருணா அவளை மேக்கப் ட்ரையல் பார்க்க அழைக்க, அவரிடம் வரேன் என்று கூறிவிட்டு பிரதீஷிற்கு அழைத்தாள்.

“சொல்லுங்க அனாஹா.”

“ப்ச் பிரதீஷ் சும்மா வா போனே பேசுங்க. உங்களை விட நான் சின்ன பொண்ணு தான்.”என்றாள்.

“ம் ஓகே சொல்லு எதுக்கு கூப்பிட்ட?”

“பிரதீஷ் எனக்குப் பயமா இருக்கு. அம்மா கடைசி நிமிஷத்துல ஏதாவது பண்ணிடுவாங்களோனு.”

“அனு அப்படியே அவங்க எதுவும் பண்ணாலும் நான் இருக்கேன். என்னை மீறி எதுவும் நடக்காது. டோன்ட் வொர்ரி.”

“இல்லை பிரதீஷ். உங்களுக்கு என் அம்மா பத்தித் தெரியாது. அவங்க முடிவுப் பண்ணிட்டா கண்டிப்பா அதைச் செஞ்சு முடிச்சுடுவாங்க. அதே போல அவங்களை மீறியும் எதுவும் செய்ய முடியாது.”

“அனு நீ ரொம்ப பயப்படுற அதான் இப்படிப் பேசுற. ஃபீல் ஃப்ரீ அனு. ஒன்னும் நடக்காது.”

“இல்லை, நான் ஒன்னும் முடிவுப் பண்ணிருக்கேன். இன்னைக்கு சித்தியோட பார்லருக்கு வரேன். உங்களை நேர்ல மீட் பண்ண முடியுமா?” என்று கேட்டாள்.

அவனிற்கு அவளது பதட்டம் அதிகமாகத் தோன்றினாலும் அவளின் பதட்டத்தைப் போக்குவது அவனிற்கு முதன்மையாகப் பட்டது. அதனால் சரியென்று அவளைச் சந்திக்க ஒத்துக் கொண்டான். அவனிற்குக் கூறியதைப் போலவே கார்த்திக்கிற்கும் அழைத்து அவள் கூறினாள். மூவரும் சேர்ந்து தான் சந்திப்பதாக இருந்தது. ஆனால் அவளிற்கு பார்லரின் நேரமாக முதலில் கார்த்திக்கும் பிரதீஷூம் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி அவனை ஒரு உணவகத்தில் சந்தித்தான் பிரதீஷ். அங்கு தான் வினய் அவர்களைப் பார்க்க, கார்த்திக்கை அவனது நண்பர் என்று அறிமுகம் செய்து வைத்தான் பிரதீஷ்.

வினய் சென்றதும்,”ஏன் கார்த்திக் சும்மா இருக்க மாட்டீங்களா? வினய் அவன் அக்கா மாதிரி இல்லை. செம ஷார்ப். அவன்கிட்ட எந்த லூஸ் டாக்கும் வேணாம். அப்புறம் நாம நினைச்ச எதுவும் நடக்காது.” என்று சற்று அழுத்தமாகக் கூறினான்.

“சாரி ப்ரோ சின்ன பையன்னு நினைச்சேன். இனிமேல் கேர்ஃபுல்லா இருக்கேன். அண்ட் ரொம்ப தாங்க்ஸ் எங்களுக்கு நீங்க ஹெல்ப் பண்ண நினைச்சதுக்கு.”

“ப்ச் கார்த்திக் தாங்க்ஸ்லாம் எதுக்கு? இதுல என்னோட சுயநலமும் இருக்கு. எனக்கும் சையு வேணும் அதான் அனுவோட ப்ளான்க்கு ஓகே சொன்னேன்.”

“ப்ரோ நீங்க நினைச்சுருந்தா பெரியவங்க எல்லார்கிட்டேயும் அனுவும் நானும் லவ் பண்றதை சொல்லிட்டு ரைட் ராயலா சைதன்யாவை பொண்ணு கேட்டுருக்கலாம். யாரும் எதுவும் சொல்லிருக்க முடியாது. ஆனால் நீங்க அதைப் பண்ணலை.”

“அப்படிப் பார்த்தால் அனு கூட இதையே பண்ணிருக்கலாம். அக்காவைப் பொண்ணு பார்க்க வந்துட்டு தங்கச்சியை லவ் பண்றேன்னு அக்காக்கிட்டயே சொல்றான். இவன் எனக்கு வேண்டாம்னு தாரளமா சொல்லிருக்கலாம். ஆனால் எனக்காக அனு பழியை ஏத்துக்கு ரெடியா இருக்காங்க. ஸோ இதுல யாரும் பெரிய ஆள் இல்லை ப்ரோ.” என்று கூற, கார்த்திக்கிற்கு பிரதீஷை அத்தனைப் பிடித்தது.

பின்னர் அனு அழைக்க இருவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்ற இடம் பிரதீஷின் அலுவலகத்திற்குத் தான். அது மதியச் சாப்பாட்டு நேரம் என்பதால் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் தான் தைரியமாக அழைத்து வந்தான் பிரதீஷ்.

அனாஹாவும் வந்து சேர, பிரதீஷூம் கார்த்திக்கும் அவள் பேசட்டும் என்று காத்திருந்தார்கள். சில நேர மௌனத்திற்குப் பின்,”கார்க்கி நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்.” என்றாள். இதைக் கேட்டவுடன் இருவருக்கும் அத்தனை அதிர்ச்சி.

“என்ன சொல்ற அனு? இது எப்படிச் சாத்தியமாகும்? நாம தான் முன்னாடியே முடிவுப் பண்ண மாதிரியே பண்ணுவோம். இந்த மேரேஜ் இன்விட்டேஷன் எல்லாருக்கும் ஓரளவுக்குக் கொடுத்ததுக்கு அப்புறம் வீட்டுல எல்லாரும் இருக்கும் போது அதுவும் முக்கியமா உங்க அப்பா இருக்கும் போது நீ சொல்லவும் நான் உங்க வீட்டுக்கு வரது தான ப்ளான்? இப்போ என்ன திடீர்னு இப்படிச் சொல்ற?”

“இல்லை கார்க்கி எனக்குப் பயமா இருக்கு. காரணமே இல்லாம இப்போ எல்லாம் மனசு படப்படனு அடிச்சுக்குது. அதான் ப்ளீஸ் நோ மட்டும் சொல்லாத. I can’t imagine a life without you. And also i can’t marry anyone other than you.” என்று கூறி அழ, கார்த்திக்கிற்கு அத்தனை வருத்தமாக இருந்தது. வேகமாக அவளிடம் சென்றவன் அவளை அணைத்துக் கொள்ள அவர்களுக்குத் தனிமை தந்து அவனது அறையை விட்டு வெளியே வந்தான் பிரதீஷ்.

சில நிமிடங்களுக்குப் பிறகு தான் பார்த்தார்கள் அவன் அங்கு இல்லாததை. உடனே வெளியே வந்து கார்த்திக் அவனை உள்ளே அழைத்தான். வந்தவனிடம் கார்த்திக்,”இப்போ என்ன பண்றது ப்ரோ?” என்று கேட்டான்.

“அனுவோட பயம் தேவையில்லாதது. அதுக்காக அதை அப்படியே விடக் கூடாது. நான் யோசிச்சுட்டு சொல்றேன் கார்த்திக். அனு ப்ளீஸ் எதுக்கும் பயப்படாத. உன்னையும் கார்த்திக்கையும் சேர்த்து வைக்கிறது என்னோட பொறுப்பு.” என்று அவன் கூற, அனுவின் முகம் தெளிவுப் பெறவில்லை. அதை பிரதீஷ் பார்த்தாலும் எதுவும் கூறவில்லை. சிறிது நேரத்தில் அனாஹா கிளம்பிச் செல்ல கார்த்திக் கவலையுடன் பிரதீஷைப் பார்த்தான்.

“கவலைப்படாத கார்த்திக் நான் பார்த்துக்கிறேன். அனு ப்ரேவ் கேர்ள்னு நினைச்சேன். ஆனால் உன்னை எங்கே பிரிஞ்சுடுவோமோனு நினைச்சு அவளோட ப்ரேவ்னெஸ் எல்லாம் போயிடுச்சு. அதைச் சரி பண்ணிட்டா போதும். அதனால கொஞ்சம் பார்த்துக்கோ.”

“தாங்க்ஸ் ப்ரோ. நான் பார்த்துக்கிறேன்” என்று கூறிவிட்டு கார்த்திக்கும் அங்கிருந்து கிளம்பினான்.

அவர்கள் கிளம்பிய அடுத்த நிமிடம் பிரதீஷ் அழைத்தது அவனது அண்ணன் சுதீஷிற்குத் தான். சுதீஷிற்கு ஆச்சரியமாக இருந்தது இந்நேரத்தில் அழைக்கிறானே என்று. அதனால் அதே ஆச்சரியத்தோடு கைப்பேசியை எடுத்து,”என்ன பிரதி? இப்போ கூப்பிட்டுருக்க?” என்று கேட்டான்.

அவன் கேட்டதற்குப் பதில் கூறாமல்,”நீ எங்கே இருக்க?” என்று கேட்டான்.

“இந்நேரம் எங்கே இருப்பேன்?வீட்டுல தான். இப்போ தான் சாப்பிட்டு முடிச்சேன். ரூம்ல இவான் கூட இருக்கேன்.”

“சரி பிருந்தா கூட இருக்கா?” என்று கேட்டான்.

பிருந்தா அவனது தாய்மாமா பெண் என்றாலும் அவனை விட வயதில் சிறியவள். அதே போல் சிறு வயதிலிருந்து வா போ என்று அழைத்ததால் தன் அண்ணனுடன் திருமணம் முடிந்த பிறகு மரியாதையாக அழைக்க வரவில்லை. அதே போல் பிருந்தாவும் அவனைச் சிறு வயதிலிருந்தே வா போ என்று தான் அழைப்பாள். இரு வயது தான் பெரியவன். சுதீஷை சிறு வயதிலிருந்தே அவளிற்குப் பிடிக்கும். அதனால் அவனை மட்டும் அத்தான் என்று அழைப்பாள். பிரதீஷை வா போ என்று தான் அழைப்பாள்.

பிரதீஷ் அப்படிக் கேட்கவும் ஏதோ முக்கியமான விஷயம் என்று புரிந்தது சுதீஷிற்கு. அதனால்,”இல்லை டா அவள் வெளில இருக்கா.” என்றான்.

“சரி அப்போ சாயந்தரம் இங்கே வா. நான் கூப்பிட்டேன்னு சொல்லாம நீயா உனக்கு இங்கே வேலை இருக்குன்னு சொல்லி வா.”

“ஏன் டா ஏதாவது முக்கியமான விஷயமா?”

“எஸ் அனு பத்தி தான்.”

“ஏன் டா அந்தக் கார்த்திக் எதுவும் பிரச்சனைப் பண்றானா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் இல்லை. பிரச்சனை அனு தான். எல்லாம் ஃபோன்ல சொல்றதுனா நான் சொல்ல மாட்டேன்னா? சாயந்தரம் வா நேர்ல பேசலாம்.”

“சரி டா வரேன்.”

“ம் அப்புறம் அம்மா இன்னைக்கு மீன் குளம்பு வைச்சேன்னு சொன்னாங்க. அதையும் எடுத்துட்டு வா சரியா.” என்று கூறி பிரதீஷ் வைக்கவும் சுதீஷிற்குச் சிரிப்பு தான் வந்தது.

“இவனை!!” என்று கூறிவிட்டு வெளியே சென்று அவனது அம்மாவிடம் கொஞ்சம் பிரதீஷிற்கு எடுத்து வைக்குமாறும் அதை மாலை அவனே சென்று கொடுத்து வருவதாகவும் கூறிவிட்டு அவனது அறைக்குச் சென்று விட்டான். ஆனால் மனம் முழுவதும் என்ன பிரச்சனையோ என்று தான் ஓடிக் கொண்டிருந்தது.

error: Content is protected !!