அறையில் பிரதீஷூம் சைதன்யாவும் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். பிரதீஷ் அவனது கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருக்க சைதன்யாவோ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். கீழே அவன் பேசிய அனைத்தையும் அவள் கேட்கவில்லை. கடைசியில் அவன் அவளை மிகவும் விரும்புவதாகவும் அவளை யாராவது தப்பாகப் பேசினால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன் என்று கூறியதைத் தான் கேட்டாள். அதிலிருந்து அவளது மனம் அவளிடம் இல்லை. அவனையே பார்த்துக் கொண்டிருக்க திடீரென நிமிர்ந்து பிரதீஷ் அவளைப் பார்க்கவும் வேகமாக முகத்தைத் திருப்ப, பிரதீஷ் சிரித்துக் கொண்டே,”சையு.” என்று அழைத்தான்.
அவள் மெதுவாகத் தலையை நிமிர்த்து அவனைப் பார்க்க,”இங்கே வா.” என்று கூறி அவனிற்குப் பக்கத்தில் தட்டிக் காமிக்க, மெதுவாக எழுந்து அவன் அருகில் வந்து உட்கார்ந்தால்.
“நான் பேசுனதை கேட்டுட்டியா” என்று கேட்டான். அவள் ஆமாம் என்று தலையசைக்கவும் மீண்டும் அவனே,”என்ன கேட்ட?” என்று கேட்டான்.
“அது நீங்க என்னை ரொம்ப லவ் பண்றீங்க. அதனால யாராவது என்னைத் தப்பா பேசுனா அவங்களை சும்மா விடமாட்டீங்கனு சொன்னீங்கள, அது எல்லாம் கேட்டேன்.” என்றாள்.
அவள், தாங்கள் இறுதியாகப் பேசியதை மட்டும் தான் கேட்டிருக்கிறாள் என்பது புரிந்தது. அதனால் அவனும் மேலும் எதுவும் கூறவில்லை. அவன் அமைதியாகவே இருக்க, சைதன்யாவே,”நீங்க பேசுனதை நான் கேட்டுட்டேன்னு என் மேல கோபமா?” என்று மெதுவாக அவள் கேட்க,
சட்டென்று அவள் புரம் திரும்பிய பிரதீஷ்,”ச ச அதெல்லாம் இல்லாம் டா சையு!! எனக்கு உன் மேல கோபமே வராது சரியா.” என்று கூறினான்.
“ம், யாராவது என்னை ஏதாவது சொன்னாங்களா?”
“ஏன் அப்படிக் கேட்கிற?”
“இல்லை நீங்க யாரோ என்னைப் பத்திப் பேசுறதுனால தான உங்களுக்குக் கோபம் வந்துச்சு. அதான் கேட்டேன்.”
“டேய் சையு யாரும் உன்னைப் பத்தி எதுவும் பேசலை சரியா. நான் சும்மா அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தேன். தட்ஸ் இட் ஓகே வா. நீ இதைப் பத்தி ரொம்ப யோசிக்காத.”
“ம்.” என்று கூறியவள் மீண்டும் அவனிடம்,”உங்களுக்கு ஏன் என்னை ரொம்ப பிடிச்சுருக்கு? நாம பேசுனது கூடக் கிடையாது. அப்புறம் எப்படி என் மேல இவ்ளோ லவ் உங்களுக்கு?” என்று கேட்டாள்.
அதில் பிரதீஷ் அவளின் புறம் நன்றாகத் திரும்பி அமர்ந்து அவளது கண்ணத்தைத் தன் கைகளில் ஏந்தி,”எனக்கு உன் மேல ரொம்ப லவ் தான். பட் அதுக்கு ரீசன் எல்லாம் கேட்டா என்னால சொல்ல முடியாது. அதைவிட சொல்ல தெரியலை. இப்படித் தான் சொல்லனும். ஆனால் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அவ்ளோ தான்.” என்று கூற, அதைக் கேட்ட சைதன்யாவிற்கு ஆச்சரியமாக இருந்தது அவனது காதலைப் பார்த்து. அவனை எதற்காகவும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
“ஓகே சொல்லு உனக்கு ஆபிஸ் எத்தனை நாள் லீவ்?”
“எனக்கு த்ரீ டேஸ் லீவ். சேடர்டே அண்ட் சண்டே லீவ் தான். ஸோ ப்ரைடே, அப்புறம் இன்னைக்கு அண்ட் நாளைக்கு லீவ். வெட்நெஸ்டே நான் ஆபிஸ் போகனும்.” என்றாள்.
“ஓ குட். அப்புறம் சொல்லு வீட்டுல இருந்தா நீ என்ன பண்ணுவ?”
“மோஸ்ட்லி படிக்க மட்டும் தான் செய்வேன். சண்டே மட்டும் லீவ். அன்னைக்கு நான் கொரியன் ட்ராமா பார்ப்பேன்.” என்று கூறிவிட்டு அவனைப் பார்த்து ஈ என்று இளித்தாள்.
“பார்ரா, கொரியன் ட்ராமா பார்க்க டைம் இருக்குமா உனக்கு?”
“ம் சண்டே பார்ப்பேன். அப்புறம் மத்ததை டெய்லி ஒரு எபிசோட்னு பார்ப்பேன்.”
“அவ்ளோ பொறுமை இருக்கா உனக்கு? அடுத்து என்ன நடக்குதுனு ஆர்வமா இருக்காதா?”
“அதெல்லாம் இருக்கும். பட் எனக்குப் படிக்க ஸ்டார்ட் பண்ணிட்டா என் மைன்ட் எல்லாம் அதுல தான் இருக்கும். புக் க்ளோஸ் பண்ணா தான் எனக்கு மத்த விஷயம் ஞாபகத்துல வரோம்.”
“ம் குட். அப்போ ரீசன்ட்டா பார்த்த சீரியஸ் முடிச்சுட்டியா? இல்லை நம்ம மேரேஜ்னால எதுவும் பாதில ஸ்டாப் பண்ணிட்டியா?”
“ம்ஹூம் நான் ஃபுல்லா முடிச்ச அன்னைக்கு தான் அம்மா வீட்டுல சொன்னாங்க அனு அக்கா இந்த மாதிரி மேரேஜ் பண்ணிட்டா. ஸோ உங்களுக்கும் எனக்கும் மேரேஜ்னு.”
“ஓ!! சரி எதுல பார்ப்ப?”
“எனக்காக என் ரூம்ல டி.வி. இருக்கு. அதுல நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் கணெக்ஷன் இருக்கு. அதுல பார்ப்பேன். அப்புறம் அதுல வராததை நான் டவுன்லோட் பண்ணி பென்ட்ரைவ்ல போட்டு டி.வி.ல கணெக்ட் பண்ணி பார்ப்பேன்.”
“ஓ ஓகே ஓகே. உனக்கு மட்டும் ரூம்ல டி.வி.யா?”
“ம் ஆமா, அதுல எனக்கும் வினய்க்கும் பயங்கர சண்டை வந்துருச்சு. ஆனால் நான் எப்போவாவது தான் பார்ப்பேன். அவன் ரூம்ல இருந்தா ஃபுல்லா டி.வி.ல தான் உட்கார்ந்திருப்பான். அதனால அம்மாவும் அப்பாவும் அவன் ரூம்க்கு கணெக்ஷன் தர முடியாதுனு சொல்லிட்டாங்க.”
“ஓஹோ!! அப்போ நம்ம வீட்டுல என்ன பண்ணுவ?”
“ஏன் நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் கணெக்ஷன் எல்லாம் இல்லையா?”
“ம்ஹூம் இல்லையே!!” என்று உதட்டைப் பிதுக்கி அவன் கூற,
“நோ ப்ராப்ளம் எங்கே வீட்டுல கொடுத்த கணெக்ஷன் மூணு யூஸர் யூஸ் பண்ணிக்கலாம். ஏற்கனவே அனு அக்காவும் அதை யூஸ் பண்றாங்க. இப்போ நம்ம வீட்டுல நாம யூஸ் பண்ணிக்கலாம். நோ இஸ்யூஸ்.” என்று கூற,
“வேண்டாம் வேண்டாம். சும்மா சொன்னேன். நானும் நிறைய மூவிஸ் பார்ப்பேன் அதனால கணெக்ஷன் கொடுத்துருக்கேன். ஸோ நீ அதையே யூஸ் பண்ணிக்கலாம்.”
“அப்போ எதுக்கு பொய் சொன்னீங்க?” என்று சற்றுக் கோபமாகக் கேட்டாள்.
“சும்மா நீ என்ன சொல்றனு பார்க்கத் தான் அப்படிச் சொன்னேன். ஆனால் பாரு அப்படிச் சொன்னதால தான் உன்னோட கோபத்தைப் பார்க்க முடிஞ்சது.” என்று கூற,
“ப்ச்…” என்று ஏதோ சொல்ல வந்தவள் கதவுச் சத்தத்தைக் கேட்டு இருவரின் பார்வையும் திரும்பியது.
மீண்டும் கதவுச் சத்தம் கேட்க, பிரதீஷ் எழுந்து சென்று கதவைத் திறந்தான். பிருந்தா தான் நின்றிருந்தாள். அவளைப் பார்த்து,”என்ன பிருந்தா?” என்று கேட்டான்.
“அனுவோட அப்பா,அம்மா வந்திருக்காங்க உன்னையும் சைதன்யாவையும் மறுவீட்டுக்குக் கூட்டிட்டு போக.”
“ஓகே நாங்க வரோம்.” என்று அவன் கூறவும் சரியென்று கூறி பிருந்தா அங்கிருந்து சென்றுவிட, கதவை அடைத்து விட்டு சைதன்யாவிடம் வந்தான்.
“அனுவோட அப்பாவும் அம்மாவும் நம்மளைக் கூட்டிட்டு போக வந்திருக்காங்க போலாமா?” என்று கேட்க, உடனே அவளது முகம் பளிச்சிட்டது.
“பார்ரா உங்க வீட்டுல இருந்து வந்திருக்காங்கனு சொன்னதும் உன்னோட முகம் பிரகாசிக்குது.”
“அது அது….” என்று அவள் இழுக்க,
“ஹா ஹா சும்மா தான் சொன்னேன் வா கிளம்பலாம்.” என்று கூறி அவன் முன்னே போக, அவளும் அவன் பின்னேயே சென்றாள்.
இருவரும் ஜோடியாகக் கீழே இறங்கி வர, அதைப் பார்த்த திலகாவிற்கு இது தன் மகள் இருந்திருக்க வேண்டிய இடம் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. அது தப்பு என்று அடுத்த நிமிடமே தோன்றத் தலையை உலுக்கி அந்த நினைப்பை விட்டுவிட்டு சைதன்யாவைப் பார்த்துச் சிரித்தார்.
திலகாவையும் பரமசிவத்தையும் பார்த்ததும் வேகமாக அவர்களிடம் வந்தாள் சைதன்யா. பரமசிவம் அவளின் கையைப் பற்றிப் பக்கத்தில் அமர வைத்தவர் அவளது தலையைத் தடவி,”ஹாப்பியா?” என்று கேட்டார். அவள் எதுவும் பேசாமல் அவரது தோளில் சாய்ந்து கொள்ள, பிரதீஷ் வந்து அவளிடம்,”சையு எழுந்துச்சுக்கோ நாம அவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கனும்.” என்று கூற, வேகமாக எழுந்து கொண்டாள் சைதன்யா. இருவரும் சேர்ந்து திலகா மற்றும் பரமசிவம் காலில் விழுகப் போக, அவர்களைத் தடுத்த பரமசிவம்,”முதல பாட்டிக் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க.” என்று கூற, அவர் கூறியதைப் போல் இருவரும் காசியம்மாள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். பின்னர் கதிரைவேல் மற்றும் சுமித்ரா தம்பதியனர், பரமசிவம் மற்றும் திலகாவிடமும் ஆசீர்வாதம் வாங்கினர்.
“சரி சாப்பாடு ரெடியா இருக்கு. வாங்க எல்லாரும்.” என்று சுமித்ரா அழைக்கவும் அனைவரும் வந்தனர். தரையில் இலைப் போட்டுத் தான் பந்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிருந்தா, சுமித்ரா மற்றும் சிலர் பரிமாற இவர்கள் எல்லாம் சாப்பிட உட்கார்ந்தனர்.
காலைச் சாப்பாட்டை வெளியில் தான் கூறியிருந்தார்கள் விருந்தாளிகள் இருப்பதால் அனைவருக்கும் சமைக்க முடியாது என்று. இட்லி, ஊத்தாப்பம், பூரி, மசால், பொங்கல், வடை, கேசரி, சாம்பார், தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னி தான் மெனு. இலையில் வைத்த எதையும் சைதன்யா வேண்டாம் என்று மறுக்கவில்லை. ஆனால் அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக வைக்கச் சொல்லி சாப்பிட்டாள். பிரதீஷூம் அதே போல் அனைத்தையும் சாப்பிட்டான் ஆனால் எல்லாம் கம்மியாக சாப்பிட்டான்.
சாப்பிட்டு முடித்தவுடன் சைதன்யா மற்றும் பிரதீஷை அழைத்துக் கொண்டு பரமசிவம் மற்றும் திலகா அனைவரிடமும் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். வெளியே வந்தவுடன் பரமசிவம் சென்று காரை எடுக்க அவரிடம் வந்த பிரதீஷ்,”மாமா சாவி கொடுங்க நான் ஓட்டுறேன்.”என்றான்.
“இல்லை மாப்பிள்ளை அது சரி இருக்காது. நானே ஓட்டுறேன். எனக்குப் பிரச்சனை இல்லை.” என்று கூறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தார். அவரிற்குப் பக்கத்தில் திலகா அமர, பின் இருக்கையில் பிரதீஷூம் சைதன்யாவும் அமர்ந்தார்கள்.
“பெரிப்பா அக்கா வரலையா?” என்று காரில் ஏறி அமர்ந்தவுடன் கேட்டாள் சைதன்யா.
“அனு வீட்டுல இருக்கா. நாம போகும் போது வழில கூப்பிட்டுப் போயிக்கலாம்.” என்றார் பரமசிவம்.
“சரி பெரிப்பா.” என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டாள். அவர் கூறியதைப் போலவே வழியில் அனுவை ஏற்றிக் கொண்டு வண்டி காஞ்சிபுரம் நோக்கிச் சென்றது.
“தன்யா.” என்று அவளைக் கட்டியணைத்தாள் அனு வண்டி ஏறியவுடன்.
“அக்கா.” என்று அவளும் கட்டியணித்தாள்.
“பெரிம்மா இன்னும் கோபமா இருக்காங்களா உங்க மேல?” என்று மெதுவாக அவளின் காதில் கேட்டாள்.
“ம் ஆமா.” என்று அவளும் மெதுவாகக் கூறினாள்.
என்று அனாஹா அவளது காதலைப் பற்றி வீட்டில் கூறினாளோ அன்றே அவர்கள் வீடு எதையோ பறி கொடுத்தது போல் தான் காட்சியளித்தது. பரமசிவம் திலகாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். அதே போல் திலகா அனாஹாவிடம் பேசுவது இல்லை. இப்படி ஆளுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார்கள். பின்னர் திருமணம் வேலையில் அனைவரும் கவனம் செலுத்த அந்தப் பிரச்சனையைப் பற்றி அவர்களால் பேச முடியவில்லை.
பின்னர் திருமணத்தில் மூவரும் மூன்று திசைகளாக இருப்பதைப் பார்த்த சதாசிவமும் அருணாவும் தான் இவர்கள் பழையபடி மாற வேண்டுமென்று பால் பழம் சாப்பிடும் சடங்கைப் பரமசிவத்தின் வீட்டில் வைத்தனர். அதே போல் மணமக்களை மறுவீட்டுக்கு அழைத்து வரும் பொறுப்பையும் அவர்களிடம் தந்தனர். அதிலாவது அவர்கள் பேசிக் கொள்வார்கள் என்று ஆனால் அவர்களோ இதுவரை பேசிக் கொள்ளவில்லை.
“மாமாகிட்ட பேசுனீங்களா? பெரிப்பா பார்த்தாரா அவரை?”
“ம்ஹூம் இல்லை தன்யா. உன்னோட மேரேஜ் முடியட்டும் வெயிட் பண்றோம். மோஸ்ட்லி நெக்ஸ்ட் வீக் மீட் பண்ண வைச்சுருவேன்.”
“ஆல் த பெஸ்ட் அக்கா.”
“தாங்க் யூ டா.” என்று அவர்கள் மெதுவாகவே பேசிக் கொண்டு வர, சைதன்யா வீடும் வந்துவிட்டது.
அருணா, சதாசிவம் மற்றும் வினய் மூவரும் இவர்களுக்காக வெளியே காத்துக் கொண்டிருந்தார்கள். பரமசிவம் வண்டியை நிறுத்தவும் வேகமாக இறங்கிய சைதன்யா அருணாவைச் சென்று கட்டியணைத்தாள். அவரும் அவளை அணைத்துக் கொண்டு கண்ணீர் சிந்த திலகா தான்,”அருணா என்ன இது இப்போ போய் அழுதுட்டு. பாரு மாப்பிள்ளை பக்கத்துல நிக்கிறார். எவ்வளவு நேரம் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை வெளியே நிப்பாட்டுவ? ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டிட்டு போ.” என்று அவர் கூறவும் தான் அருணா சைதன்யாவை விடுத்து அவளை பிரதீஷூடன் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.
உள்ளே வரவும் வினய் சைதன்யாவை அணைத்துக் கொண்டு,”உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணேன்.” என்று கூற,
“ஏய் ஒரு நாள் தான் டா உங்க கூட அவள் இல்லை. அதுக்குள்ள ரொம்ப தான்.” என்று அருணாவின் சின்ன அக்கா கூற,
“போங்க பெரிம்மா உங்களுக்கு இதெல்லாம் புரியாது.” என்று கூறிவிட்டு அக்காவும் தம்பியும் பாச பயரை வளர்க்க, அனுவிற்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது. அவள் தனியாக நிற்பதைப் பார்த்த வினய் அவளையும் தங்களுடன் இனைத்து,”அக்கா நோ வொர்ரீஸ்.” என்று வினய் கூறவும் தான் அவளிற்கு மனம் அமைதியானது. இதையெல்லாம் சிரித்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் பிரதீஷ்.
அன்றைய நாளை அங்கேயே குடும்பத்துடன் கழித்துவிட்டு அடுத்த நாள் காலைச் சாப்பாட்டை முடித்து விட்டு பிரீதஷூம் சைதன்யாவும் தங்களது அன்றாட வாழ்க்கையைத் தொடங்க பிரதீஷின் வீட்டிற்குச் சென்றனர். அவர்களுடன் பரமசிவம், திலகா, அருணா, சதாசிவம், வினய், அனாஹா, கதிரைவேல், சுமித்ரா மற்றும் சுதீஷூம் சென்றனர். காசியம்மாளிற்கு உடம்பு வலியாக இருக்க, அவரிற்குத் துணையாக பிருந்தாவும் வீட்டில் இருந்துவிட்டாள்.