பிரதீஷ் அழைத்ததும் என்ன ஏனென்று எதையும் கேட்காமல் அவளுடன் வந்து விட்டாள் சைதன்யா. ஆனால் மனதில் பயம் இன்னும் இருந்தது. பிரதீஷ் தன்னைக் காதலிக்கிறான் என்று தெரிந்த போது ஏதோ வானத்தில் மிதப்பது போல் இருந்தது. ஆனால் திருமணச் சடங்குகள் அனைத்து ஆரம்பமானதில் இருந்து இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது. திருமணம் என்பது பெரிம விஷயம், அதில் வரும் பொறுப்புகள் அதைவிடப் பெரிது. அப்படி இருக்கும் போது தன்னால் அதைச் சமாளிக்க முடியுமா என்று யோசித்தாள். தன் அம்மா இல்லாமல் அவளிற்கு எந்த வேலையும் ஓடாது. அப்பாவிடம் செல்லம் கொஞ்சுவது, தம்பியுடன் சண்டை போடுவது என்றே பொழுதை ஓட்டியவள் இப்போது அவர்கள் இல்லாமல் வேறு ஒரு ஆடவனுடன் அதுவும் தனக்குக் கணவர் என்னும் உறவுடன் என்பதை நினைக்க நினைக்க அவளால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. அனைத்தும் அவளது முகத்தில் பட்டவர்த்தனமாகத் தெரிய பிரதீஷிற்குத் தான் கவலையாக இருந்தது.
அவளை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை. ஆனால் அவளைத் தெளிய வைக்க வேண்டிய பொறுப்பு அவனது என்பது மட்டும் மனதிலிருந்தது. அதனால் தான் தன் அம்மா வேண்டாம் என்று கூறியும் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டான்.
எங்குச் செல்ல என்று தெரியவில்லை. அவன் பாட்டிற்கு வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க, அப்போது தான் சைதன்யா பார்த்தாள் அவன் ஊரைத் தாண்டி வந்ததே. அவனைப் பார்த்துக் கேட்கத் தலையைத் திருப்ப, அவளால் சகஜமாகப் பேச முடியவில்லை. மீண்டும் வெளியே பார்த்தப்படி தலையைத் திருப்பி விட்டாள்.
அவளது செய்கையைப் பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்த பிரதீஷிற்குப் புரிந்தது. அதனால் அவனே அவளைப் பார்த்து,”ஏதாவது கேட்கனுமா சையு?” என்று கேட்டான்.
அவன் கேட்டதும் அவனைத் திரும்பிப் பார்த்த சைதன்யா,”நீங்க என்னை எப்படிக் கூப்பிட்டீங்க?” என்று கேட்டாள்.
“சையுனு கூப்பிட்டேன். ஏன் நல்லா இல்லையா?”
“இல்லை வீட்டுல எல்லாம் தன்யானு கூப்பிடுவாங்க. ப்ரண்ட்ஸ் என்னை சைத்துனு கூப்பிடுவாங்க. சையுனு யாரும் கூப்பிட்டது இல்லை. அதான் நீங்க கூப்பிடவும் டிஃப்ரென்ட்டா இருக்கு.” என்றாள்.
“ஓ!! அப்போ நான் சையுனே கூப்பிடலாம்ல?”
“ம்.” என்று மட்டும் கூற,
“ஓகே என்னைப் பத்தி எதுவும் தெரியுமா உனக்கு?” என்று கேட்டான்.
“அது நீங்க காஞ்சிபுரத்துல டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் வைச்சுருக்கீங்கனு அம்மா சொன்னாங்க. அப்புறம் நீங்க ரொம்ப நல்லவங்கனு அப்பா சொன்னாங்க. அக்கா லவ்க்கு நீங்க ஹெல்ப் பண்ணதா அக்கா சொன்னா….” என்று அவள் கூற, ஓட்டிக் கொண்டிருந்த காரை ஓரமாக நிறுத்திவிட்டு சைதன்யாவைப் பார்த்தான்.
அவன் அவளைப் பார்ப்பது அவளிற்கு ஒரு மாதிரியாகி இருக்க “ஏன் என்னாச்சு நீங்க கேட்டதுக்கு தான நான் பதில் சொன்னேன்?” என்றாள்.
“அது இல்லை சையு, வேற உனக்கு என்னைப் பத்தி என்ன தெரியும்? உன்னைச் சுத்தி இருக்கிறவங்க வேற என்ன சொன்னாங்க?”
“ம் அவ்ளோ தான் சொன்னாங்க. அக்கா தான் நீங்க என்னை நல்லா பார்ததுப்பீங்கனு சொன்னா.”
“ஓ!! சரி உனக்கு ஏதாவது என்கிட்ட கேட்க தோனுதா?” என்று கேட்டான்.
ஆமாம் என்று தலையசைத்தவள் அவனைப் பார்த்து,”உங்களுக்கு என்னை எப்படித் தெரியும்? நீங்க என்னை முன்னாடியே பார்த்துருக்கீங்களா? நான் உங்களைப் பார்த்தது இல்லையே!! அப்புறம் எப்படி நியர்லி த்ரீ யியர்ஸ் நீங்க என்னை லவ் பண்ணீங்க?” என்று கேட்டாள்.
“சையு நான் உன்னை லவ் பண்ணேன்னு பாஸ்ட்ல சொல்லாத. பிகாஸ் ஐ லவ் யூ நவ் டூ. ஓகே வா.” என்று சொல்லிவிட்டு,”உன்னை நான் உங்க வீட்டுல தான் மீட் பண்ணேன்.” என்று அவன் கூற, அவள் வேகமாக அவளது மூளையைச் சலவைச் செய்து யோசித்துப் பார்க்க, அவளிற்கு அவனைப் பார்த்த ஞாபகம் சுத்தமாக இல்லை.
“அப்படியா நான் உங்களைப் பார்த்தது இல்லையே!!” என்றாள்.
“நீ என்னைப் பார்த்தது இல்லை. ஆனால் நான் உன்னைப் பார்த்துருக்கேன்.”என்று சொல்ல அவள் புரியாமல் பார்த்தாள். பின்னர் அவனே தொடர்ந்தான்,”உங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருக்கிற அசோக் தெரியுமா?” என்று கேட்டான்.
“ஓ எஸ் தெரியுமே.” என்று அவள் தலையை ஆட்டிச் சிறுப் பிள்ளை போலக் கூற, அவனிற்குச் சிரிப்பு தான் வந்தது.
அவளது மூக்கின் நுனியைப் பிடித்து மெதுவாக ஆட்டிவிட்டு,”அசோக் என்னோட ப்ரண்ட். நான் ஒரு நாள் அவங்க வீட்டுக்கு வந்தப் போது நீ உங்க வீட்டு மாடில வினய் கூடவும் அனாஹா கூடவும் விளையாடிட்டு இருந்த. அப்போ பார்த்தேன். இந்தப் படத்துல எல்லாம் சொல்லுவாங்கள லவ் அட் ஃப்ர்ஸ்ட் சைட்னு அப்படித் தான் எனக்கும் உன்னைப் பார்த்ததும். ரொம்ப பிடிச்சது. யு வேர் சோ ப்ரிட்டி அண்ட் க்யூட். அதுவும் வினய் கூட சாக்லேட்காக சண்டைப் போட்டுட்டு இருந்த. அப்போல இருந்து அடிக்கடி அசோக் வீட்டுக்கு வருவேன் உன்னைப் பார்க்க. ஆனால் எல்லா டைம்மும் உன்னை நான் பார்த்தது இல்லை. சில டைம் மட்டும் தான் பார்த்துருக்கிறேன். அப்புறம் தான் தெரிஞ்சது உங்க அப்பாவுக்கும் என் அப்பாவுக்கும் சண்டைனு. என்ன டா பண்றதுனு யோசிக்கும் போது தான் அனாஹா வீட்டுல தான் உன்னைப் பார்த்தேன். ஐ வாஸ் ஷாக்ட்(shocked). அதுக்கு அப்புறம் உனக்குத் தான் தெரியுமே என்ன நடந்ததுனு.” என்று அவன் கூற, ஆமாம் என்று தலையசைத்தாள்.
“இப்போ உன் டவுட் க்ளியரா?”
“ம்.” என்று கூற, அவன் வண்டியை எடுத்தான்.
இப்போதும் எங்குச் செல்வது என்று அவனிற்குத் தெரியவில்லை. வண்டி ஓட்டிக் கொண்டே அவன் காஞ்சிபுரத்திற்கு வந்துவிட்டான். அங்கு ஒரு பூங்கா இருக்க, அதற்கு முன்பு வண்டியை நிறுத்தினான்.
அவன் இறங்கி வந்து அவள் இருந்த பக்கமிருக்கும் கதவைத் திறந்து அவளிற்கு இறங்கு உதவிச் செய்ய அவளிற்கு அவனது செயல் பிடித்திருந்தது. பூங்காவிற்கு ஏன் வந்துள்ளோம் என்று புரியாமல் அவனைப் பார்க்க, அவனோ அவளது பார்வையைக் கண்டுகொள்ளாமல் அவளின் கையோடு கை கோர்த்து அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
அங்குப் போடப்பட்டிருந்த ஒரு மர பெஞ்சில் அவளை உட்காரக் கூற, அவளும் உட்கார்ந்தாள். அவளிற்கு அருகிலே அவனும் அமர்ந்தான் சற்று ஒட்டினார் போலத் தான் உட்கார்ந்தான். அதில் அவள் சற்று தள்ளி அமர்ந்தாள். அதைப் பார்த்து வாய்க்குள் சிரிப்பை அதக்கிப் பெரிதாக அதனைக் காட்டவில்லை பிரதீஷ். அங்கு இருந்தவர்கள் எல்லாம் சற்று வித்தியாசமாகத் தான் இவர்களைப் பார்த்தார்கள். காரணம் பிரதீஷ் பட்டு வேஷ்டி பட்டுச் சட்டையிலும், சைதன்யா பட்டுப் புடவையில் அதிலும் கழுத்தில் புது மாங்கல்யம். பார்ப்பவர்களுக்கு அவர்கள் ஏதோ வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்ததைப் போல் ஒரு தோற்றத்தைத் தந்தது. அனைவரின் பார்வையின் தங்களை வட்டமடிக்க சைதன்யாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.
“நாம கிளம்பலாமா? எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறாங்க.”
“ம் போகலாம். இங்கேயே இருக்கப் போறது இல்லை நாம. நீ நெர்வஸ்ஸா இருக்கிறதால தான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன். நீ அவங்க பார்க்கிறதை எல்லாம் கண்டுக்காத, நம்மோட ட்ரெஸ் தான் ரீசன் அவங்க பார்க்கிறதுக்கான ரீசன்.” என்று அவன் கூற,
“எங்கே வீடு இங்கே தான் பக்கத்துல இருக்கு. நாம வேணா போய் மாத்திட்டு வரலாமா?” என்று வேகமாகக் கேட்டாள்.
“ஆமா ஆமா நம்ம வீடு இங்கே தான் இருக்கு. நெக்ஸ்ட் ஸ்ட்ரீட்ல தான்.” என்று கூற, முதலில் இல்லை என்று சொல்ல வந்தவள் அவனின் ஆழ்ந்த பார்வையில் தான் புரிந்தது அவன் அவனது வீட்டை நம்ம வீடு என்று சொன்னது. அதில் அப்படியே அமைதியாகி விட்டாள்.
அவளின் அமைதியைப் பார்த்த பிரீதஷ் அவளின் கையை எடுத்து தன் கைகளிற்குள் வைத்துக் கொண்டவன்,”சையு நீ என்னைப் பார்த்தோ இல்ல நம்ம மேரேஜ் லைஃப்பை நினைச்சோ பயப்பட வேண்டாம் சரியா. ஐ வில் டேக் கேர் ஆஃப் யூ. நீ எப்படி உங்க வீட்டுல இருந்தியோ அப்படித் தான் நம்ம வீட்டுல இருக்கப் போற சரியா. நீ ரொம்ப யோசிக்காத ஓகே வா. ப்ரியா இரு.” என்றான்.
“ம் ஓகே.” என்று மட்டும் கூற,
அவளது நாடியைப் பிடித்துத் தன்னைப் பார்க்குமாறு அவளது முகத்தை நிமிர்த்தி, அவளது நெற்றியில் தட்டுத் தட்டி,”இந்தக் குட்டி மூளையில என்ன ஓடுது? எதுவா இருந்தாலும் சொல்லு உன் மனசுக்குள்ள வைச்சுக்காத.” என்று அவன் கூறவும்,
“அது வந்து…” என்று அவள் தயங்க,
“ம் சொல்லு.”
“இல்லை எனக்குச் சமைக்க எல்லாம் தெரியாதே. எல்லாரும் சொல்லுவாங்களே நூடுல்ஸ் மட்டும் தான் செய்ய தெரியும்னு. ஆனால் அது கூட எனக்குத் தெரியாது.” என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டு கூற, அப்படியே அவளை அள்ளிக் கொள்ளத் துடித்த மனதைக் கட்டுப்பட்டுத்திக் கொண்டு,”டோண்ட் வொர்ரி, யார் சொன்னா மேரேஜ் பண்ணால் சமைக்கத் தெரியனும்னு? அப்படிலாம் கிடையாது. அண்ட் ஒன் மோர் திங், எனக்கு நல்லா சமைக்கத் தெரியும்.” என்று அவன் கூற, அவளது கண்கள் பெரிதாய் விரிந்து ஆச்சரியப் பாவனைக் காட்டியது.
“நிஜமா உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா? என்று அதே ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“ம் எஸ் எனக்கு நல்லா தெரியும். அதனால நீ வொர்ரி பண்ணிக்க வேண்டாம். இப்போ ஓகே வா?” என்று கேட்டான்.
“ம் அப்போ நான் சமைக்க வேண்டாமா?”
“வேண்டாம். ஆனால் உனக்கு ஒகேனா நீ எனக்கு ஹெல்ப் பண்ணலாம்.”
“ம் ஒகே.”
“ஆல் க்ளியர்? வேற எதுவும் கேட்கனுமா இல்லை சொல்லனுமா?” என்று கேட்டான்.
“ம்ஹூம் இல்லை.” என்று அவள் கூறினாலும் அவளது முகம் இன்னும் தெளியவில்லை. போகப் போகப் புரிந்து கொள்வாள் என்று அவனும் அமைதியாகி விட்டான்.
சிறிது நேரம் அப்படியே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சைதன்யாவிற்கு நன்றாக வேர்த்து விட்டது. அதைப் பார்த்த பிரதீஷ்,”அச்சோ பார் இப்படி வேர்க்குது நீ எதுவும் சொல்லாம அமைதியா இருக்க. சரி வா நாம கிளம்பலாம்.” என்று அவன் கூறிவிட்டு எழுந்து அவளுக்குக் கை கொடுக்க, தயங்கியவள் அப்படியே அவன் கையைப் பார்த்துக் கொண்டிருக்க அவனும் எடுக்காமல் அவளையே பார்க்க இறுதியில் அவளே அவனின் கைப் பிடித்து எழ, சிரித்துக் கொண்டு அவளுடன் நடந்தான் பிரதீஷ்.
காரில் ஏறி அமர்ந்தவுடன் சைதன்யா பிரதீஷைப் பார்த்து,”எங்க வீட்டுக்குப் போயிட்டு போகலாமா?” என்று ஆசையுடன் கேட்டாள்.
“சாரி டா சையு, மத்த டைம்னா நானே உன்னைக் கூட்டிட்டு போயிடுவேன். பட் இன்னைக்கு எங்கேயும் போக முடியாது. நான் தான் உன் ஃபேஸ் டல்லா இருக்கிறதைப் பார்த்து வெளில கூட்டிட்டு வந்தேன். ஜஸ்ட் இன்னைக்கு மட்டும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ. நாளைக்குக் காலைல நம்ம உன் அம்மா வீட்டுக்குப் போகலாம் ஒகே வா?” என்று அவன் கேட்க, சரியென்று தலையசைத்தாள்.
அதன் பிறகு அவள் அமைதியாக விட, பிரதீஷ் தான்,”உனக்கு என்ன பிடிக்கும்?” என்று கேட்டான்.
“எனக்கு நிறைய பிடிக்கும். நீங்க எதுல கேட்கிறீங்க?”
“ம் சரி சினிமா ஹீரோ யாரைப் பிடிக்கும்?”
“ம் எனக்கு விஜய்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த வினயும் அனு அக்காவும் சேர்ந்து பயங்கரமா கிண்டல் பண்ணுவாங்க என்னை. அவங்க இரண்டு பேரும் அஜித் ஃபேன். அதனால அவங்க கூட்டுச் சேர்ந்து என்னை ஓட்டி எடுப்பாங்க. நானும் சும்மா விட மாட்டேன்னே.” என்று அவர்கள் செய்த ரகளைகளைச் சொல்ல, அவளது மனம் அதில் சற்று மாறியது.
“டோன்ட் வொர்ரி இனிமேல் அவங்க உன்னைக் கிண்டல் பண்ணா நான் உனக்கு சப்போர்ட்டா இருக்கேன். ஒகே வா.”
“அப்போ உங்களுக்கும் விஜய் பிடிக்குமா?”
“அப்படிக் கிடையாது. எனக்கு இவங்களை தான் பிடிக்கும் இவங்களை பிடிக்காதுனு எதுவும் இல்லை. பட் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்குமே சோ உனக்குப் பிடிச்சதுனால எனக்கும் பிடிக்கும்.” என்று அவன் கூற, அவளிற்குத் தான் என்ன எதிர்வினையாற்ற என்ற புரியவில்லை. ஆனால் அவனைப் பிடிக்க ஆரம்பித்து விட்டது.
அப்படியே அவர்கள் பேசிக் கொண்டே வர வீடும் வந்துவிட்டது. உறவினர்கள் இவர்கள் வெளியே சென்றதை ஒரு மாதிரி பேசினாலும் அதைக் கண்டுகொள்ளாமல் பிரதீஷ் சைதன்யாவை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.
அவன் வந்ததும் தான் சுமித்ராவிற்கும் நிம்மதியாக இருந்தது. கேட்பவர்களின் கேள்விக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. இருவரும் உள்ளே வரவும் மாலை சிற்றுண்டி மற்றும் டீயை தர, அதை வாங்கிக் குடித்தார்கள். பின்னர் சைதன்யா முதலில் இருந்த அறைக்கு பிருந்தாவை அழைத்துச் செல்ல சொல்லிவிட்டு பிரதீஷை அவனது அறைக்கு அனுப்பினார் சுமித்ரா.
இரவு உணவும் முடிந்து அனைவரையும் படுக்கக் கூறிவிட்டு, பிருந்தாவிடம் சைதன்யாவை பிரதீஷ் அறையில் விட்டுவிட்டு வரச் சொன்னார் சுமித்ரா. அதுவரைச் சற்றுத் தெளிந்து இருந்த சைதன்யா இப்போது மீண்டும் பயம் பிடித்துக் கொண்டது அவளை. முகத்தில் அப்பட்டமாக அது தெரிய பிருந்தா தான் அவள் கையைப் பிடித்து,”இங்கே பார் தன்யா, என்னை உன் அனு அக்கா மாதிரி நினைச்சுக்கோ சரியா.” என்று கூற, அவளும் சரியென்று தலையசைத்தாள்.
“பிரதீஷ் ரொம்ப ரொம்ப நல்லவன். நான் என்னோட மாமா பையன், என் ஹஸ்பெண்டோட தம்பி அப்படின்றதால சொல்லலை. நீ யாரைக் கேட்டாலும் இதைத் தான் சொல்லுவாங்க. பிரதீஷ் உன்னை ரொம்ப லவ் பண்றான். அதனால நீ எதுக்கும் பயப்படாத. அவன் பார்த்துப்பான் சரியா.” என்று கூற, அதற்கும் அமைதியாகத் தலையசைத்தாள். பிருந்தாவிற்குத் தான் பயமாக இருந்தது இந்தப் பெண் இப்படி எதுவும் பேசாமல் இருக்கிறாளே என்று. இருந்தாலும் பிரதீஷ் பார்த்துப்பான் என்று நம்பி அவளை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றாள்.