மழைத்துளி -2

Episode – 2

கம்பம் – காலை 6.30

கம்பத்துல காலை வெயிலோட பனிக்காற்று கலந்து, பூந்தோட்டங்களையும் மலைக்களையும் மெல்ல தீண்டிக்கிட்டு போகுது.

தூரத்தில் காக்கையின் குரல், பூங்காற்று கலந்த மஞ்சள் வெயில் வீதிக்குள் வந்திருக்கு.

ஒரு பெரிய பங்களா வாசலில் “சூர்யபவன்” என்று எழுதி ஒரு நேம் போர்ட். 

பக்கத்தில் ஒரு பளபளக்கும் தோட்டா போல… ரெய்டுக்கு நா ரெடினு தயாரா நிற்கும் சூர்யாவின் வண்டி Royal Enfield Hunter 350.

 வீட்டுக்குள்ள… 

சூர்யா, வெள்ளை சட்டையோட, டக்கின் பண்ணி கண்ணாடில பார்த்துக் .

ஒரு லேசான புன்னகை… நம்பிக்கையான தோற்றமும், பொருந்தமான சிகை அலங்காரம், அளவா ட்ரீம் பண்ண தாடியூம் பார்க்கவே கண்ணுக்கு அழகா இருந்தான்.

 ரமேஷ்வரி கிச்சனில் இருந்து வெளியே வந்து என்ன சூர்யா, இன்னும் காபி கூட குடிக்கல, அதுக்குள்ள எழுந்து கிளம்பிட்ட 

சூர்யா (சிரிச்சுக்கிட்டு):

நேற்று இரவு வேலை பார்த்து தூங்க லேட் ஆச்சு மா, காளையான் சத்தம் கேட்டதும் தான் எழுந்தேன் . லேட் ஆச்சு நா ஃபேக்டரில பாத்துக்கிறேன்.

 கிளம்பறேன் மா.

கம்பம் நகரத்தோட மைய சந்து வழியா ஒரு பழைய ஸ்கூட்டர் “புட் புட்”ன்னு ஒலி எழுப்பி வந்துச்சு. ஸ்கூட்டர் ஓட்டுறவன்… சூர்யாவின் அத்தனை நெருக்கமான தோழனும், அவன் கூட ஒண்ணா வளர்ந்தவன் – கார்த்திக்.

 சுத்தமான வெள்ளை ஷர்ட், டெனிம் ப்ளூ ஜீன்ஸ், ஷூ பாக்க சினிமா பட ஹீரோ போல இருப்பான். வெளிச்சத்துல பார்த்தா, சாமான்ய பையன் மாதிரி தெரியும். ஆனா அவனுக்குள்ள ஹார்ட்வொர்க்கும், விசுவாசத்துக்கும் ஈடு கிடையாது.

இப்போ கூட ஃபேக்டரில day-to-day வேலைகள எல்லாம் ஓட்டிக்கிட்டு இருக்குறவன் – இந்த கார்த்திக் தான்.

மூஞ்சில ஒரு அடங்காத புன்னகை, தட்டச்சியில வேகமா பேப்பர் ரெடி பண்ணுற கைச்சலை, வேலைக்காரருக்கு “மச்சான்”ன்னு உரிமையா பேசுற நல்ல மனசு… எல்லாத்தையும் சேர்த்துத்தான் கார்த்திக்.

கம்பத்துல பாதி பேருக்கு அவன தெரியாம இருக்கவே முடியாது. டீ கடைல இருந்தாலும், மெக்கானிக்கல இருந்தாலும், கார்த்திக் , அண்ணா, தம்பி, இப்படி பல பெயர்ல அவன தெரியாதவங்க இருக்க முடியாது .

ரொம்ப இயல்பா ஈசியா பழகுவான்.

தந்தை ஒரு மழைக்காலத்துல வயல்வேலையில இறந்த பின்பு, அம்மாவோடதான் வாழ்க்கை ஆரம்பம். ஊருக்குள்ள சூர்யா வீட்டுக்கு வெளியாயல இருந்தாலும், அந்த வீட்டுல ஒருத்தனா பழகுற ஒரு நெருக்கம் – அப்படி ஒரு அண்ணன்–தம்பி பந்தம்.

சூர்யா பிஸியாவே இருந்தாலும், கார்த்திக் இருந்தா ஃபேக்டரி சும்மா பறக்குது. சாம்பிள் பழம் பாக்குறதுல இருந்து எக்ஸ்போர்ட் டாக்குமெண்ட் வரை எல்லாமே அவனோட கையில. வேலைக்காரருக்கு நேரத்துக்கு lunch, லேட்டா வந்த டிரைவர்க்கு “சீக்கிரமா போடா”ன்னு சொல்லற அதிகாரம் வர அவனுக்கு இருக்கு. அந்தளவுக்கு நெருக்கம் சூர்யா கூட.

அந்த காலையில, சூர்யா கொஞ்சம் லேட்டா ஃபேக்டரிக்கு வந்தான்.

“அட சூர்யா! இப்ப தான் வர்றியா? என்ன பாஸ்-கு நீங்க , ஒரு punctuality வேணாமா . ஆஃபிஸ் வர நேரமா இது”.

சூர்யா புன்னகையோடு, “நீ ஃபேக்டரில இருந்தா, நான் வராம இருந்தாலுமே எல்லா வேலையும் நடக்கும்னு தெரியும்டா நைட் லேட் ஆச்சுடா, அதா. 

கார்த்திக் ,” ஒரு ஸ்ட்ராங் டீ குடிக்கலாமா சூர்யா?”

சூர்யா “கண்டிப்பா இப்பவே வேணும். நேத்துவேற எக்ஸ்போர்ட் லிஸ்ட் முழுசா பார்த்து முடிச்சேன் … நெஞ்சுல டீ இழிச்சா தான் நிம்மதி.”

சத்தியா டீ கடை –

டீ கடைப்பையன் 2 கண்ணாடி டம்ளர்ல டீ கொடுக்குறான். சூர்யா ஒரு மிடறு சூடான டீயை உள்ளிறக்கி பிறகு சூர்யா, ” இப்போ தான்டா கண்ணுல வெளிச்சம் வருது . ஹாப்பா, வாடா வேல இருக்கு தலைக்கு மேல, 

அடுத்த நாளுக்கான வேலைகள் பற்றி சூர்யா & கார்த்திக் பேசிக்கொண்டிருக்கும் நேரம்.

கார்த்திக் ” டேய், அந்த லோட் ஆறு மணிக்கு வண்டிபெரியர்ல இறக்கியாகனும்… நீன்னு டீ கடைலவே நேரத்த தள்ளிட்டு இருக்க!”

சூர்யா: “வந்திருச்சே! அம்மா பக்கம் வம்சம்… காரமா தான் spice கடத்துறேன்!”

அங்க இருந்த ஒருத்தர் , 

“சூர்யா! நீயும் உன் மாமனும் சேர்ந்து அனுப்புற காரம் தான் இப்போன்னு கம்பத்துக்கே வீசுது டா!”

அனைவரும் சிரிக்குறாங்க.

கார்த்திக்:”ஏலக்காய் மிளகு ஆர்டர் நீ ஃபைனல் பண்ணீட்டியா 

சூர்யா:“ஆர்டர் இல்லடா,வெளிநாட்டு காண்ட்ராக்ட் ஒண்ணு ஃபைனல் பண்ணிட்டு இருக்கேன். ஓகே ஆச்சுனா செம்மயா இருக்கும்!”

அவன் சந்தோஷத்துடன் டீ கடைல இருக்க, தூரத்தில் ஒரு வெள்ளை இன்னோவா கார் கம்பம் சோதனை சாவடில மெல்ல தாண்டி போகுது …

காருக்குள்ளிருந்து ஒரு அழகான முகம் வெளியே பார்வை பதித்து கார் கதவில் சாய்ந்து இருந்தது.

முகத்தில் மழைக்கால ஒளி,

பார்வையில் பசுமை தேன்.

தலையில் சுற்றி இருந்த மென்மையான வெள்ளை துப்பட்டா,காற்றோட பறக்க 

அவளுடைய கண்களோ –

தெருவை கடக்குறதா?

வாழ்க்கையை யோசிக்குறதா?

ஒரே பார்வையிலே கேள்விகளை தூண்டும் அழகு.

கம்பத்தில் புதிதா?

பழைய தொடர்பா?

இன்னும் தெரியாத ஒரு புது பக்கம் கம்பத்துக்குள் தொடர்கிறது…

Song 

“எங்கோ ஊர் சாலை வளைவில்

என் பிம்பம் தொலைந்ததடி

அங்கேயே நின்று கொண்டு

என்னுயிர் திரும்புதடி

error: Content is protected !!