நட்சத்திர விழிகளிலே வானவில் 1 (2)

“நீ தானே அவ அப்பாக்கு ஐடியா குடுத்த இப்போ வந்து நல்லவனாட்டம் குதிக்க? உங்கப்பா பின்னால போகாத என் கூட வான்னு நீ ஏன் கூப்பிடலை? என்று காரி துப்பியது. அதையும் அசராமல் அடக்கி ஆழத்தெரிந்தவனாயிற்றே?

இவ்வளவு களேபரத்திலும் மாப்பிள்ளை வீட்டினர் சத்தமில்லாமல் பொட்டியை கட்டியதை நினைத்து மனதிற்குள் நிம்மதியடைந்தான்.

“அந்த விஷகிருமிகளை பின்னால் கவனித்து கொள்ளலாம். என் கையில் மாட்டாமல் எங்கே தப்பித்து போய்விடுவார்கள்?” என்று தன்னைத்தானே சீராக்கி கொண்டு.

சந்திரா “அம்மாடி கண்ணு , நீ வருத்தபடாதே தாயி எல்லாமே சீக்கிரம் சரியாகிடும். தம்பி கண்டிப்பா உன்னை நல்லா பார்த்துக்குவாங்க. நீ அழுவாத இங்க பிரச்சனைகள் சரியானதும் நான் உங்கப்பாவை கூட்டிட்டு உங்களை பார்க்க வரோம்…….!” என்ற தாயை கட்டிகொண்டு கதறியவள் தாயின் இறுதி வார்த்தையில் ஓரளவு தெளிந்தாள் மித்ரா என்கிற மித்ரா நந்தினி.

 “அம்மா உங்களை  விட்டு நான் எப்படி இருப்பேன்?” இன்னும் கலக்கம் அகலாமல்

“ஏன் இன்னைக்கு உங்கப்பா முடிவு பண்ணிய படி இந்த கல்யாணம் அவனோடு நடந்திருந்தா மட்டும் இவங்களை விட்டுட்டு சந்தோஷமா இருப்பியா என்ன?” என்றவன் சந்திராவை நோக்கி “நாங்க கிளம்பனும், இப்போவே நேரம் ஆச்சு!” என்றபடி மணிக்கட்டை பார்த்தான் உதய் பிரபாகரன். 

“தப்பா எடுத்துக்காதீங்க தம்பி நந்து பொண்ணு கொஞ்சம் பயந்த சுபாவம். ஏதாச்சும் தெரியாம தவறு பண்ணிட்டா கொஞ்சம் எடுத்து சொல்லுங்க, கேட்டுக்கும். புரிஞ்சு நடந்துக்கும் தம்பி!”

தாய்க்கே உரிய தவிப்போடு தயங்கி தயங்கி பேசிய சந்திராவை பார்க்கையில் பிரபாகரனின் மனம் பிசைந்தது. கலக்கத்தை போக்கும் வண்ணம்

“உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம். நான் மித்ராவை  நல்லபடியா  பத்திரமா பார்த்துப்பேன்!”  என்ற உத்திரவாதம் கொடுத்து சந்திராவின் வயிற்றில் பாலை வார்த்தான்.

மகளுக்கு மேலும் சில அறிவுரைகளை வழங்கி அவனை மருமகனோடு அனுப்பும் முனைப்பில் கணவனை மறந்தாள். சீரும் சிறப்புமாக புக்ககம் அனுப்பவேண்டிய பெண்ணை வெறும்கையோடு கட்டின புடவையோடு அனுப்பிவைக்க நேரிட்ட நிலையை நிந்தித்தவாறு சீர்வரிசைகளை பேச பற்றிய நேரம் இதுவல்ல என்று மனதிற்கு கடிவாளமிட்டு அமைதியாக ஆண்டவனை வணங்கியபடி அனுப்பிவைத்தார்.

மண்டபத்திற்குள் ஏதோ களேபரம் என்றறிந்த மதிவாணன் (உதய் பிரபாகரனின் கார் ட்ரைவர்) நடப்பவையனைத்தையும் நம்பமுடியா பார்வையுடன் பார்த்துகொண்டிருந்தான். காரின் அருகில் நெருங்கியவனை பார்த்து, “அண்ணே என்ன இது?” என்று கேட்டு அடுத்த வார்த்தைகள் படையெத்து வெளிவரும் முன்னே ஒற்றை பார்வையில் அணைபோட்டு தடுத்து, “ப்ச் முதல்ல காரை எடு மதி!” என்றவனின் வார்த்தைகளில் கட்டளை மட்டுமே.

தனது வாழ்க்கை பயணத்தை உதய் பிரபாகரனுடன் தொடங்கிவைத்த கடவுளுக்கு மானசீகமாக நன்றி செலுத்திவிட்டு நெஞ்சம் முழுவது பயத்தை மட்டுமே சுமந்தபடி காரிலேறி அமர்ந்தவளை “அடுத்து என்ன செய்வது?” என்று குழப்பத்தோடு பார்த்தான்.

நடந்ததனைத்தும் தன்னையும் மீறி நடந்தது, அதற்கு தான் எப்படி பொறுப்பாகமுடியும்? என்று நினைத்தவன்,

தான் வந்த வேலை என்ன? இங்கே நடந்ததென்ன? என்று யோசிக்க யோசிக்க ஒன்றும் பிடிபடாமல் தலை வேதனையை கொடுத்தது. அதற்குமேல் யோசிக்காமல் கண்ணை மூடி அமர்ந்தவன் தனது இருப்பிடம் நோக்கி மனையாளோடு பயணபட்டான்.

இருவரின் மனதினுள்ளும் காதல் இல்லை. அவனுக்கோ அவளை சுற்றி பின்னபட்டிருக்கும் இந்த வலையை விட்டு எப்பாடுபட்டாவது  காப்பாற்றியே ஆகவேண்டுமென்பது மட்டுமே இலக்கு. அப்படியே மனதிற்கு திரும்ப திரும்ப சொல்லிவைத்திருந்தான். அதற்குமேல் ஏன் இப்படி நடந்துகொண்டான் என மனக்கிடங்கை கிளறவோ, பழைய நினைவடுக்கிலிருந்து உருவவோ முற்படவில்லை.

அவளுக்கோ ஏற்கனவே உதயாவின் கையால் தாலி வாங்கிய  தன்னால் இன்னொருவனின் தாலியை ஏற்பது தன் பெண்மைக்கே இழுக்கு, தற்கொலைக்கும் தைரியம் இல்லாமல் போய்விட்டதே தனக்கு, எப்படி  இதிலிருந்து எவ்வாறு தப்பிக்க என்று மறுகியவாறு இருந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாய் வரவும் ஆசுவாசம் அடைந்தாள்.

அவ்வளவே. இருவருமே காதலில்லாமல் ஒரே திசையை நோக்கி பயணம் செய்தனர்.

…………

கண்ணிலிருந்து கார் மறையும் வரை விழியகலாது கண்ணீரோடு பார்த்துகொண்டிருந்த சந்திரா கணவரை தேடி மண்டபத்திற்குள் நுழைந்தார்.

மண்டபத்தின் மாடியில் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்த ஏழுமலையை கவலையுடன் கண்ட சந்திரா,

“என்னங்க!…” என்றழைத்தும் பதில் இல்லாமல் போகவே அருகில் நெருங்கி தோளில் கைவைத்து திருப்பினார்.

“சந்திரா, மானம் மரியாதையெல்லாம் இப்டி வாங்கிட்டு போயிட்டானே?”….

“கெஞ்சினேன்….வேண்டாம் தம்பி எங்க தலையெழுத்து படியே நடக்கட்டும்னு கெஞ்சி பார்த்தேனே,,,,,,,கேட்டானா? ம்ஹூம்!”…

“அவன் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிட்டு கடைசியில அத்தனை பேர் முன்னாலும் இப்படி என்னை தலைகுனிய வச்சிட்டு போயிட்டானே?”…….

“இனி நான் எப்படி தலைநிமிர்ந்து ஊருக்குள்ள நடப்பேன் நாலுபேர் என்னை நாலுவிதமா இல்லை நானூறு  விதமா பேசுவாங்களே!”………

அவர் பேச பேச பதில் சொல்லமுடியாமல் புடவை தலைப்பை வாயில் வைத்தபடி சத்தமில்லாமல் அழுதுகொண்டிருந்தார் சந்திரா.

“அவங்க கல்யாணம் எப்டி நடந்துச்சுன்னு மறந்திட்டு பேசறானா அவன்?”………

“என் பொண்ணுமேல எனக்கில்லாத அக்கறை அவனுக்கு எங்கிருந்து வந்துச்சு?”…..

சந்திராவின் அண்ணனும் அண்ணியும் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தனர்.

சந்திராவை வேகமாக நெருங்கி தோளில் சாய்த்துகொண்ட அண்ணி பூரணி “விடு சந்திரா நடந்ததை மாத்த முடியாது நம்ம புள்ளைக்கு அந்த பையன் தான்னு ஏற்கனவே முடிச்சு போட்ருக்கு போல. அதை மாத்த நாம நினைச்சோம். ஆனா அது கடவுளுக்கே பிடிக்காம பொண்ணை உரியவங்க கிட்ட சேர்த்திருக்கு!”…..

“நாம அப்படி தான் நினச்சு மனசை தேத்திக்கணும். அழுது புலம்பி என்ன ஆகபோகுது? நடந்ததை மத்திடவா முடியும்?”….

பேசாம அவங்களை ஏத்துகிட்டு நம்ம பொண்ணை வரிசையோட அனுப்பி வைக்கிறதை விட்டுட்டு இப்டி வெறும் கையோட அனுப்பிருக்கிறது மனசுக்கு கஷ்டமா இருக்கு!”………..

“ஆமாங்க மாப்ள, பூரணி சொல்றதுதான் எனக்கும் சரின்னு படுது. இங்க மத்த வேலையை பசங்க கிட்ட சொல்லிட்டேன் அவங்க வந்தவங்களை கவனிச்சு அனுப்பிட்டு இருக்காங்க!”…..

“நாம போய் நந்தும்மாவை போய் பார்த்துட்டு வருவோம்.  புள்ள தனியா தவிக்கும் மாப்ள!” என்றார் நேசமணி தனது தாய்மாமனது  ஸ்தானத்தை விட்டுகொடுக்காமல்.

அதுவரைக்கும் அமைதியாக அவர்களின் சம்பாஷணையை கடனே என்று கேட்டுகொண்டிருந்த ஏழுமலை வெகுண்டெழுந்தார்.

“என்ன மச்சான் பேசறீங்க?”…….

“அவன் அன்னைக்கு பெரிய நல்லவனாட்டம் பேசினான்?”….

“வாக்கெல்லாம் குடுத்தானே? எல்லாம் காத்துல பறந்துருச்சோ?”……

“பார்த்துட்டு தானே இருந்தீங்க?”………

“நல்ல மனசு,…… நல்ல பையன்,…… எப்டி நம்ம நிலைமையை புரிஞ்சுகிட்டு நமக்கே நல்ல ஒரு வழியை  சொல்லுது இந்த தம்பின்னு புகழ்ந்து தள்ளுனீங்களே?”……… என்று தன்னிலையில்லாமல் பொறிந்து தள்ளினார்.

“மாப்ள நான் இப்டி சொல்றேனேன்னு கோவப்படாதீங்க!”… என்று நேசமணியின் வார்த்தையை கேட்டு புரியாமல் என்னவென்பது போல நிமிர்ந்து பார்த்தார் ஏழுமலை.

“அந்த தம்பி பேச வந்தது என்ன? நமக்குதானே நல்லது பண்ண வந்துச்சு!”….

“அதை புரிஞ்சுக்காம நீங்க உங்க பிடிவாதத்தால அவரை இந்த அளவுக்கு நடந்துக்க வச்சுடீங்க, இன்னைக்கு நடந்ததுக்கு காரணமே நாமதான்.!”….

கோவமாக ஏறிட்டு பார்த்தவரை “சும்மா முறைக்காதீங்க மாப்ள, உங்களோட பேச்சுதான் இந்த நிலைமைக்கு கொண்டு வந்துச்சு. இப்போவும் சொல்றேன் அந்த புள்ளைக்கு என்ன கொறச்சல்?”…… என்றார்  நேசமணி அதே கோவத்துடன்.

“அப்போ அவன் சொன்னதுபோல நடந்திருந்தா மட்டும் என்ன ஆகிருக்கும்?”…..என்று பிடிகொடுக்காமல் பேசுபவருக்கு என்ன சொல்லி புரிய வைப்பதென்று தெரியாமல் பேச்சை திசைதிருப்பும் பொருட்டு சட்டென,

“மாப்ள, கொஞ்சமாவது மரியாதை குடுத்து பேசுங்க. இப்போ அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை. உங்களுக்கு மருமகப்பிள்ளை, ஞாபகத்துல வச்சுக்கோங்க!”……

“என்னது மாப்பிள்ளையா?….. அவனா?….. எனக்கா?……இந்த நிலைக்கு ஆளாக்கிய அவனை நான் சும்மா விடமாட்டேன்!”….என்று மார்தட்டியவரை அமைதியாக பார்த்தபடி அருகில் வந்த நேசமணி ,

“சரி வாங்க, போய் உங்க ஆத்திரம் தீருமட்டும் என்ன செய்யணுமோ செய்துட்டு நாமும் புள்ளைய கையோட கூட்டிட்டு வந்துடலாம். வாழ்நாள் முச்சூடும் இனிமே அது நம்ம வீட்லயே தான் இருக்க போகுது!”…… என்றவரை பார்த்து பேந்த பேந்த விழித்தார் ஏழுமலை.

சந்திராவும் பூரணியும் நேசமணியின் பேச்சை ஆமோதிக்கும் விதமாக அமைதி காத்தனர்.

பாவமாக நின்றவரை ஆறுதலாக அணைத்து, ”மாப்ள இப்போதைக்கு ஒன்னும் நீங்க யோசிக்க வேண்டாம். அமைதியா இருங்க. ஒரு ரெண்டு நாள் போகட்டும்.!” என்றார் நேசமணி.

“ஆமாங்க இது நம்ம பொண்ணோட எதிர்காலம், நாமே நம்ம பொண்ணோட வாழ்க்கையை அழிச்சுடக் கூடாது, அவ நல்லா இருக்கணும் கொஞ்சம் பொறுமையா யோசிங்க!”…..என்று நிதர்சனத்தை கூறி “அவரே தெளியட்டும்”.. என்று தனிமையில் விட்டு விட்டு அடுத்து ஆகவேண்டிய வேலையை பார்க்க சென்றனர். நடந்த நிகழ்வுகளினால் ஏழுமலையின் மனமோ அமைதியிழந்து மகளின் எதிர்காலத்தை எண்ணி நிலைகொள்ளாமல் தவித்துகொண்டிருந்தது.

அவரது மனமோ உதய் பிரபாகரனை மன்னிக்காதே மன்னிக்காதே என உள்ளுக்குள் கூக்குரல் கொடுத்துக்கொண்டே இருந்தது.

அன்றைய நாள் ஆழிப்பேரலையாக அனைவரின் நிம்மதியையும் வாரிசுருட்டிக்கொண்டு வசதியாக தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது.

error: Content is protected !!