“ம்ஹூம் மாட்டேன்…”
“ப்ச் இப்போ வர்றியா இல்லையா?…”
“ம்ஹூம் மாட்டேன், மாட்டவே மாட்டேன்….” என நிச்சயமாக மறுத்தாள்.
“கூப்பிட்டா வரணும், வா….” என்று மிரட்டவும்,
“இல்லை நான் வரமாட்டேன். நீங்க கையை பிடிப்பீங்க….”
“நீ வரலைனாதான் கையை பிடிச்சு இழுப்பேன் எல்லோர் முன்னாலையும்…” எனவும் பதட்டமாகிவிட்டது நந்தினிக்கு.
“எதுக்கு வரணும், அதை முதல்ல சொல்லுங்க?…”
“விஜிக்கு போன் பண்ணனும்…” போனை எடுத்து காண்பித்தபடி,
“அடப்பாவிங்களா?…” என்ற கூக்குரலுக்கு திடுக்கிட்டு திரும்பினர் இருவரும்.
“என்னங்கடா நடக்குது இங்க? ஒரு வயசுப்பையன் வீட்ல இருக்கானேன்னு கொஞ்சமாச்சு அக்கறை இருக்கா?…”
“உங்களுக்கு தான் தனியா லைசன்ஸ் குடுத்து ரூமும் குடுத்திருக்காங்கள்ள? அப்பறமும் ஏண்டா நடு வீட்டில இந்த அலப்பறை பன்றீங்க?…”
“அருமை பெருமையா வளர்ந்த தங்கச்சி இப்படி இவன் கூட சேர்ந்து ஜாடை போட வச்சுட்டானே?….” என ஆரம்பித்தவன்,
“நடு வீட்ல எல்லோருமே பார்க்க இப்படியாடா சத்தமே இல்லாம சைகையில பேசுவீங்க? அவ்வ்வா அவ்வ்வா…” என்றான் விஷ்ணு அவனது வாயிலடித்தபடி.
அப்போதுதான் இருவருக்குமே உறைத்தது. அத்தனை பெரும் நமுட்டு சிரிப்போடு அவர்களை கவனித்து கொண்டிருந்தது.
நந்தினிக்கோ எல்லோர் முன்னிலையிலும் இப்படி ஆகிவிட்டதே என முகம் முழுவதும் செவ்வானத்தை சூடிகொண்டது.
அதேதான். ரெண்டும் சத்தமில்லாம யார் கவனத்தையும் ஈர்க்காம ஜாடையாக வாயசைப்பிலையே பேசிக்கிறாங்களாமாம்!!!…..
விஷ்ணுவின் பேச்சை கேட்டுகொண்டே சிரித்தபடியே நகர்ந்துவிட்டார் கிருஷ்ணமூர்த்தி.
முகத்தில் எதையும் காட்டிகொள்ளாமல் மனதிற்குள் எள்ளும்கொள்ளும் வெடித்தபடி அமர்ந்திருந்தார் வேணி.
அவரை தவிர அனைவருமே அடக்கமாட்டாமல் புன்னகையை வாரி வழங்கிகொண்டிருந்தனர்.
டன் கணக்கில் வழிந்தபடியே நின்றிருந்தவனை நெருங்கிய விஷ்ணு,
“இந்தா ரொம்ப வழியுது துடை…” என பெரிய கோணிப்பையை குடுக்கவும் முறைத்த உதயாவிடம்,
“பின்ன நீ வழியுற வழிசல்ல துடைக்க கர்சீப் மட்டுமில்லை பெட்ஷீட் கூட பத்தாதுடா, இனிமே வழியும் முன்னமே சொல்லிடு. சணல் பேக்டரிக்கு சொல்லி ஆடர் தான் குடுக்கணும். அவ்வளோ கொட்டுது. பார்க்க சகிக்கலை?….” என்று புலம்ப அதை கண்டு புன்னகைத்த உதயாவிடம்,
“நான் தெரியாமத்தான் கேட்கேன், இதுக்கு பேரு ரொமான்ஸா? இல்லை ரொமான்ஸான்னு?….”என பொரும,
“டேய் ஓவரா பேசாத, போன் பேசணும்னு உன் தங்கச்சிதான் சொன்னா. அதுக்குத்தான் இப்போ கூப்பிட்டேன், வரமாட்டேன்னு பிகு பண்ணினா. அதான்….” என்றான் உதயா.
“என்னாது? போனுக்கா??????? அதுசரி. இந்த லட்சணத்தில நீ குடும்பம் நடத்தினா விளங்கிரும்டா… ஏன் அதை சத்தமா வான்னு சொன்னா வராம எங்க போய்டுவா?….”
“எல்லோர் முன்னாலையும் கூப்பிட்டா ஆகாதா? ஆகாதா?….” என எகிறினான் விஷ்ணு.
“ஓ அப்டியா சொல்ற?…”
இப்போ பாரு…” என காலரை தூக்கி விட்டு கையை மடிக்கவும்,
“ராசா, வித்தை எதுவும் காட்ட போறியா? சொல்லிடு நான் வீடியோ எடுத்து யூடியூப் ல போட்டுடறேன்…” என்றவனை கண்டுகொள்ளாமல்,
“இப்போ பாரு மச்சி….” என வலது கையை ஒரு சுற்று சுற்றவும் பக்கத்தில் இருந்த விஷ்ணுவின் மேல் பலமாக பட அலறியபடி,
“பக்கி ஏண்டா என்னை இப்படி படுத்துற? என்னனு சொல்லி தொலையேன்….”
விரல்களை வாயினில் வைத்து சத்தமாக விசிலடித்து
“நந்துக்குட்டி வா போன் பேசலாம்….” என கண்ணடித்து விஷமத்துடன் அழைக்கவும்,
“அடப்பாவி மனுஷா????? கட்டுன பொண்டாட்டியை போன் பேச கூப்பிடற மாதிரியாடா கூப்பிடற?…”
“இதையும் குடும்பம் மொத்தமும் கூட்டமா உட்கார்ந்து பார்க்குதுக பாரு அவங்களை சொல்லணும்?…”
“சொல்லேண்டா, நீயும் சொல்லுன்னுதானே நானும் சொல்றேன்….”
“நீ தனியா வா. நான் உன்னை கொல்றேன்…” என்ற விஷ்ணு,
“ஏன்மா தங்கச்சி அதான் உன் புருஷன் குட்டிக்கரணம் அடிக்காத குறையா கூப்பிடறானே? போய் பேசிட்டு வா, எனக்கு பசிக்குது. வாங்க சாப்பிடலாம்…..”
உதயா கண்ணடித்து அழைத்தலில் அரண்டு போய் அமர்ந்திருந்தவளை போவேன சொல்லவும் அவள் முழிக்க மீண்டும் அழைத்தான் உதயா.
“வா நந்து பேசிட்டு மெதுவா வரலாம்…” என அடக்கப்பட்ட புன்னகையுடன்.
ம்ஹூம் அவன் கூப்பிடுவதே சரியில்லை என நினைத்தபடி, “இல்லைங்க அப்புறமா பேசிக்கலாமே….” என கழண்டு கொள்ள பார்த்தாள்.
“இந்த படுவா ஏதோ விளையாடிருக்கான், அதான் புள்ள மிரளுது….” என யூகித்த நாச்சி,
“சாப்பாட்டு நேரமாச்சுல, சாப்ட்டுட்டு அப்புறமா போய் பேசுங்க…” என சொல்லவும்,
“என்னாது இவன் கூட சாப்பிடனுமா?….” என்று அரண்ட விஷ்ணுவை,
“வா மச்சி நான் உனக்கு பரிமாறுகிறேன்…” என்றான் உதயா அவனது கழுத்தில் கைகோர்த்தபடி.
“இல்லை நான் வரமாட்டேன் அப்பறமா சாப்பிட்டுக்குவேன்….” என கழண்டுகொள்ள பார்க்க,
“உன்னை விட்டாத்தான? என் கூடதான் நீ சாப்பிடனும்….”
“மாட்டேன். எனக்கு பசிக்கலை, நான் அப்பறமா சாப்பிட்டுக்கறேன்….”
“அம்மா அப்போ நானும் விஷ்ணுகூட சாப்பிட்டுக்கறேன்….” என்றான்.
“அடேய் கிராதகா…..உன் கூட பழகினதுக்கு ஒரு வாய் சாப்பாடு கூட என்னைய நிம்மதியாக சாப்பிட விடமாட்டியா?….” என குமைந்தவனை கண்டு கண்களை மூடி திறந்தான் உதயா.
“ம்க்கும் இதுகொண்ணும் குறைச்சலில்லை….”
இதுங்க அடங்காதுங்க என எண்ணியபடி, “இப்போ சாப்பிட வரமுடியுமா? முடியாதா? நான் சாப்பிட்டு முடிக்கவும் எல்லாத்தையும் ஒழிச்சு போட்டுடுவேன். அப்றமா யாருக்கும் சாப்பாடு கிடையாது…” என பாக்கியம் அதட்டவும்,
“ஆமாமாமா எனக்கும் ரொம்ப பசிக்குது, அதுக்குத்தான் வேகமா வந்தேன். இந்த ராஸ்கல் பண்ணிட்டு இருந்த கூத்து கண்ணுல விழுந்துச்சு…” என உதயாவை உதறி விட்டு வேகமாக ஒரு நாற்காலியை இழுத்து அமர்ந்தான்.
“சிக்குனடி மாப்ள…” என்று அவனருகே அமரவும், “பிரபா அங்க என் தங்கச்சி தனியா உட்கார்ந்திருக்கா, கல்யாணமான மறுநாளே தனியாவா சாப்பிட வைக்கிறது, தப்பு தப்பு, போ போய் அங்க உட்காரு…” என்று அவனை துரத்தப்பார்க்க,
நந்தினியோ, “அதெல்லாம் இருக்கட்டும் அண்ணா பரவாயில்லை….” என கூறவும் அவளை பார்த்து முறைத்தான்.
கௌரிக்கோ இன்னைக்கு விஷ்ணுவின் சாப்பாடு ஓகையா தான் என அவனுக்கு பழிப்பு காட்டினாள்.
கடுப்போடு அமர்ந்திருந்தவனின் கையை சுரண்டிய நாச்சி, “அந்தா பாரு என் கண்ணு வருது, உன் சாமர்த்தியம் ராசா தப்பிச்சுக்கோ…”
“டார்லிங்னா டார்லிங் தான்…” என தாடையை பிடித்து கொஞ்சியவன்,
“நான் பார்த்துக்கறேன்….” என்று சொல்லிவிட்டு கிருஷ்ணமூர்த்தி அமரவும் எழுந்தவன்,
“அம்மா நான் கை கழுவாம வந்திட்டேன், இதோ வரேன்…” என நழுவி கழுவிவிட்டேன் என பேர் பண்ணிவிட்டு உதயாவின் எதிர் இருக்கையில் அமர்ந்துவிட்டான்.
“என்னடா பாதி சாப்பாட்டுல என்னால எழுந்து வரமுடியாதுன்னா நினச்சுட்ட? மவனே உனக்கு இருக்கு நாளைக்கு?….” என சூளுரைத்தவனை கண்டு,
“போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினேனோ, தெரியலை. இந்த ஜென்மத்துல உனக்கு ப்ரெண்ட்டா வாக்கப்பட்டு நான் படற அவஸ்த்தை இருக்கு பாரு?…” என வராத கண்ணீரை துடைத்தபடி சாப்பிடவும் சிரிப்பு சத்தத்தில் அந்த அறையே அதிர்ந்தது.
முகம் முழுக்க விகசிக்க சிரித்த நந்தினியை பார்க்க பார்க்க வேணியின் மனம் நேரம் ஆக ஆக உலைகளமாக கொதித்தது. இங்கே இருந்தால் ஏதும் தன்னை மீறி செய்துவிடுவோம் என அஞ்சி எழுந்தவளை கண்ட நந்தினி,
“அம்மா…” என அழைத்ததும் கோபத்தில் கண்கள் சிவக்க பற்களை நறநறவென கடித்தபடி,
“நான் உனக்கு அம்மாவா?…. என்னை அம்மான்னு கூப்பிடாத…” என்றார் முகத்திலடித்தது போல் கடுமையாக.
அவரது பேச்சில் மிரண்ட நந்தினி அவமானத்தில் எங்கே கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அனைவரின் முன் அழுதுவிடுவோமோ என அஞ்சி தலையை கவிழ்ந்துகொண்டாள்.
வேணிக்கோ அவளது முகத்தை இப்போது காண பரம திருப்தியாக இருந்தது. நந்தினியின் சந்தோஷத்தை பார்த்து காலையிலிருந்து மனதிற்குள்ளேயே வெந்து கொண்டிருந்தவருக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது.
மறுநாளே அவரது நிம்மதி ஒரேடியாக அவரை விட்டு தொலைய போவதை அறியாமல் அற்ப சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருந்தார்.