“அண்ணா என்னை இந்த பேர் சொல்லி கூப்பிட வேண்டாம்னு சொல்லுங்க!..” என சிணுங்க அதை ஆமோதித்து தங்கைக்கு ஏந்துகொண்டு,
“அடிங் என் முன்னாலையே என் தங்கச்சியை சவுரின்னு சொல்லுவியா நீ?…”
“மச்சான் பேச்சு மாறக்கூடாது!…”
“எதுக்குடா?…” என உதயா புரியாமல் கேட்க,
அவனது இருக்கையை விட்டு எழுந்த விஷ்ணு உதயாவிடம், “நீ கொஞ்சம் திரும்பி நில்லு!…” என அவனை கெளரியின் முன்னால் நிற்கவைத்துவிட்டு உதயாவின் பின்னால் வந்தவன்,
“சவுரி, சவுரி, சவுரி!…” என கௌரியை பார்த்து மூன்று முறை அழைக்கவும்,
விஷ்ணுவின் ஆட்டத்தை பொறுக்கமாட்டாமல் “அண்ணா!…” என கத்திய கெளரியை
“அண்ணா பார்த்துக்கறேன், நீ கவலைபடாதே செல்லம்!..” என ஆறுதலாக கண்ணை மூடி திறந்தவன் அந்த புறம் திரும்பி பார்க்க அவ்விடம் விட்டு அகன்று உதயாவின் இருக்கையில் நந்தினியின் அருகில் அமர்ந்திருந்துவிட்டான்.
“நீ சொல்லும்மா நந்தினி. நானா வம்பு பண்ணினேன்? அவன் என்னை திட்டுனான் பதிலுக்கு கலாயிச்சேன். அவ்வளோதான், அவ்வளவே தான். அவன் முன்னாலதான சவுரின்னு சொல்லகூடாதுன்னு சொன்னான். நான் அவன் பின்னால நின்னுதான் சொன்னேன். நீயே பார்த்த தானே?…” நந்தினியும் தலையாட்டி வைக்க,
“அதுக்கு போய் என்னை போல ஒரு அப்பாவியை அதுவும் உன் புருஷனோட நண்பனை இப்படி படுத்தலாமா?…”
“இந்த கௌ பேச்சை கேட்டு இவன் என்னை உருட்டிவிடனும்னு வரானே?…. இந்த அநியாயத்தை நீ தட்டி கேட்கமாட்டியா?…” என இஷ்டத்துக்கு புலம்பியவனை கண்டு வேனில் இருந்த அனைவருமே வயிறு புண்ணாகி போகும் அளவிற்கு சிரித்தனர்.
வரும் வழியெல்லாம் இப்படி கலகலப்பான கலாட்டாவோடு வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு வந்திறங்கியவுடன்,
“ரெண்டு பெரும் சேர்ந்து நில்லுங்க!..”என நாச்சி சொல்லிவிட்டு,
“கெளரி புள்ள போய் ஆரத்தி தட்டை எடுத்தாந்து உன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஆரத்தி எடு!..” என்று பணித்துவிட்டு ஒதுங்கவும் கெளரி செய்து முடித்து அனைவரையும் உள்ளே அழைத்தாள்.
உறவினர்கள் அனைவரும் சொல்லிகொண்டு கிளம்பவும் அதுவரைக்கும் இருந்த கலகலப்பு குறைந்தது வீடே போல அமைதியாக இருந்தது.
“கெளரி!..” என அழைத்தவாறு மாடியிலிருந்து இறங்கியவன்,
“நாச்சி கெளரி எங்க காணும்?…”
“அவ அவளோட ரூம்ல தான் இருக்கா, உன் பொண்டாட்டியோட என சொல்லிவிட்டு தன் வேலையை கவனிக்க,
கெளரி அறைக்கு சென்றவன் அவளது பேச்சுக்குரல் கேட்டு வாயிலேயே நின்றான்.
தனது பள்ளி கல்லூரி பராக்ரமங்களை விவரித்து கொண்டிருந்த கௌரியை சுவாரஸ்யத்துடன் பார்த்தபடி அவளுக்கு ம்ம் கொட்டிகொண்டிருந்தாள் நந்தினி.
“செட்டு சேர்ந்திருக்குதுக பாரு?…” என முணங்கியவாறு உள்ளே சென்றவன்,
“கெளரி!…”
“என்னங்கண்ணா, இவ்வளோ தூரம் தேடி வந்திருக்கீங்க, அண்ணியை பார்க்கவா?…” என்றாள் குறும்போடு.
“ப்ச் சும்மா இரு கெளரி!..” என சொல்லியை நந்தினி உதயாவிடம்,
“என்னங்க பாட்டி கூப்பிட்டாங்களா?…” என்றாள்.
“ஏன் நான் தேடமாட்டேனா?…” என வெடுக்கென கேட்கவும் என்ன பதில் சொல்வதென தெரியாமல் திருதிருத்தவளை விடுத்து,
“கண்ணை மூடு கெளரி!…”
“ஓ சப்ரைஸ்ஸா?..” என்றவாறே கண்களை இறுக மூடவும்,
அவளது கைகளில் அழகிய கிப்ட் பார்சல் ஒன்றை திணித்து, “ஓபன் பண்ணி பாரு பிடிச்சிருக்கான்னு!…” என்றான்.
“நீங்க வாங்கினது பிடிக்காம போகாதுண்ணா!…”
“முதல்ல பிரிச்சு பாரேன்!…” விடாமல் ஊக்கியவனை கண்டு சிரித்துவிட்டு கெளரி பார்சலை பிரிக்க,
“இதோ வரேன்!…” என சொல்லிவிட்டு நகர முயன்ற நந்தினியின் கைபிடித்து நிறுத்தியவன்,
“நான் இங்க இருக்கும் போது நீ எங்கே போற?…”
“இல்லை சும்மா பாட்டிகிட்ட!…” இன்னமும் அவனது கைப்பிடிக்குள் தன் கை இருப்பதை உணர்ந்து அவஸ்தையோடு நெளிந்தவாறே,
இதற்கு முன்னும் கையை பிடித்தான் தான். ஆனால் சூழ்நிலையோ வேறு. அதை உணரக்கூடிய நிலையில் அவளும் இல்லை. அவனும் இல்லை.
ஆனால் இப்போது அவளால் உணர முடிந்தது. ஏற்றுகொள்ள முடியாமல் தவித்தவாறே கைகளை பார்த்தபடியே விடுவித்துக்கொள்ள நினைத்தவளால் முடியவில்லை.
கௌரியோ பார்சலை பிரித்துகொண்டிருந்ததால் உள்ளே இருக்கும் பொருள் என்னவாக இருக்குமென கவனமெல்லாம் அதிலேயே இருந்தது.
உதயாவை நிமிர்ந்துபார்த்தவளோ அவனது பார்வையின் வீரியத்தை தாங்க இயலாமல் பார்வையை வேறு திக்கிற்கு திருப்ப,
அவனோ தான் கையை பிடித்ததிலிருந்து அவளது முகத்தில் வந்துபோன பாவனைகளை கண்டுகொண்டே இருந்தவனது இதழோரத்தில் பூத்த புன்னகையோடு நோக்கியவாறே இருந்தான்.
மீண்டும் அவனை பார்த்து, “ப்ளீஸ்!…” கெஞ்சியவளை பார்த்து இரு புருவங்களை உயர்த்தி, “என்ன? எதுக்கு ப்ளீஸ்?…” என கேட்டவாறே அருகே நெருங்கவும்,
பலங்கொண்ட மட்டும் கையை ஒரே உதறு உதறிக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடியே விட்டாள்.
அவளது ஓட்டத்தை கண்டு சத்தமாக சிரிக்கவும் கெளரி,
“அண்ணா என்ன சிரிப்பு உங்களுக்கு? எதுக்கு இவ்வளோ செல்லோடேப்? வந்து ஹெல்ப் பண்ணுங்க!…”
“கிப்ட் வாங்கித்தான் தரமுடியும், அதை பிரிச்சுமா குடுப்பாங்க?…” என தலையில் செல்லமாக ஒரு குட்டு குட்டினான்.
“ஒன்னும் வேணாம் போங்க,!…” என்று தலையை தடவியவாறே வேகமாக பிரித்து பெட்டியை திறந்தவளது கண்கள் பெரிதாக விரிந்தது.
“ஹைய்யா!!!!! சூப்பர். சூப்பர். அண்ணா நிஜமாவே எனக்கே எனக்கா?…”
“நிஜமாவே உனக்கே உனக்குத்தான்!…” என கன்னத்தை பிடித்து கிள்ளியவன், “பிடிச்சுருக்காடா?…”
“ம்ம் ரொம்ப ரொம்ப!…” என்றவாறே மகிழ்ச்சியோடு அந்த ஹேண்டி கேமராவை அப்படியும் இப்படியும் திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டே.
கௌரியின் தலையை வருடிவிட்டு வெளியேற முயன்றவனை தடுத்த கெளரி,
“அண்ணா நீ எப்போ இதை பர்ச்சேஸ் பண்ணினீங்க? சொல்லவே இல்லையே?…”
“நான் எங்கடா பண்ணினேன்?அந்த வாலில்லாத வானரத்துகிட்ட சொன்னேன், அவன் தான் வாங்கிட்டு வந்தான்!…”
“ஓ, இப்போ ப்ரீயா கொரியர் சர்வீஸ் வேற ஆரம்பிச்சு இருக்காங்களா? சொல்லவே இல்லை?…” என சிரித்தவள் உதயாவின் பார்வை வாயிலை தொட்டு மீண்டு வருவதை கண்டு குறும்பாக,
“என்னண்ணா அண்ணியை தேடுறீங்களா?….” அவளது கேள்வியில் கவனமில்லாமல் ஆமாம் என தலையசைத்து மீண்டும் இல்லை என்றான் அவசரமாக. அவனை கெளரி கேலியாக பார்க்கவும்,
“ம்ஹூம் இது சரிப்படாது நான் கிளம்பறேன் நீ உன் கேமராவோட விளையாடு!…”என சொல்லிவிட்டு அறைக்கு வெளியே வந்து பார்வையில் துழாவினான்.
பாட்டியோடு திவானில் அமர்ந்திருந்தவள் அவர் கூறும் பழங்கதைகளை கேட்டுகொண்டிருந்தாள்.
மாடியின் கைபிடி சுவரில் சாய்ந்தவாறு நின்றவன் குறுகுறுவென அவளையே பார்வையிட ஆரம்பித்துவிட, ஏதோ ஒரு உள்ளுணர்வில் திரும்பி பார்த்தவளின் பார்வையினை கண்டதும், “வா…” என அழைத்தான்.