முதலில் சரண்யா அக்காவிற்கு நன்றி. 🙏🙏 உங்கள் தளத்தில் எழுத வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி அக்கா. 🙏🙏
எழுத்துலகில் நான் புதியவள் இல்லை. ஆனால் பலருக்கு என்னைப் பற்றித் தெரிய வாய்ப்பு இல்லை. இது வரை ஐந்து கதைகள் எழுதியுள்ளேன். இப்போது என்னுடைய ஆறாவது கதையை இங்குப் பதிவுச் செய்ய போகிறேன்.
தித்திக்கும் காதல் தேனாய். இது தான் கதையின் தலைப்பு. பெரியவர்கள் பார்த்துச் செய்து வைக்கும் திருமணத்திற்குப் பிறகு வரும் காதல் கதையே இந்தக் கதை.
கதையின் தலைப்பிற்கு ஏற்ப A feel–good love story ஆ தான் இந்தக் கதை இருக்கும்.
June 2 இல் இருந்து கதை வரும். திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்களும் இந்தக் கதை வரும்.
படித்துப் பார்த்து கதையின் நிறை-குறையை என்னிடம் கூறினால் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
நன்றி,
அபிராமி.