ஸ்தலங்கள்

amirthababu

Moderator
Staff member
‘பஞ்ச நரசிம்ம’ திருத்தலங்கள்! தரிசிக்க விரைவில் புது வீடு கட்டும் யோகம் உண்டாகும். வியாபாரத் தடைகள் நீங்கும்; எடுத்த காரியங்கள் யாவும் எளிதில் கைகூடும் நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில், பஞ்ச நரசிம்மர்களும் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்கள் உள்ளன. அடுத்தடுத்த ஊர்களில் உள்ள இந்த ஆலயங்களை ஒரே நாளில் தரிசிக்கலாம். ஸ்ரீஉக்கிர நரசிம்மர், ஸ்ரீவீர நரசிம்மர், ஸ்ரீஹிரண்ய நரசிம்மர், ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் என திருக்காட்சி தந்தருளும் பஞ்ச நரசிம்மர்களையும் தரிசிக்க படித்ததை பகிர்ந்து கொண்டுள்ளோம்.
ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவடிகள் சரணம்

திருக்குறையலூர் ஸ்ரீஉக்கிரநரசிம்மர்

சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருக்குறையலூர். குறைகளை அகற்றும் ஊர் என்பதே மருவி, திருக்குறையலூர் என்றானது. பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரத்தின் முதல் திருத்தலம் இது. இந்தத் தலத்தின் மூலவர் - ஸ்ரீஉக்கிர நரசிம்மர். ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தரும் இந்தத் தலத்தின் தாயார் - ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார்.

திருமங்கை ஆழ்வாரின் அவதாரத் தலம் எனப் பெருமை கொண்ட இந்தத் திருத்தலத்தில், அவருக்கும் குலசேகராழ்வாருக்கும் சந்நிதிகள் உள்ளன.

இங்கே... அமாவாசை, சுவாதி நட்சத்திரம், பிரதோஷம் ஆகிய நாட்களில் ஸ்ரீஉக்கிர நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன. பித்ரு தோஷம் உள்ளவர்கள், அமாவாசை நாளில் இங்கு வந்து நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து இயன்ற அளவு அன்னதானம் செய்து வழிபட்டால், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெற்று வம்சவிருத்தியுடன் சீரும் சிறப்புமாக வாழ்வர் என்பது ஐதீகம்!

நவக்கிரக தோஷம் கொண்டவர்கள் தங்களின் வயதுக்கு ஏற்றபடி (25 வயது என்றால் 25 திருவிளக்குகள்), நெய்தீபமேற்றி ஏழு அல்லது ஒன்பது வாரங்கள் வழிபட்டு வந்தால் தோஷங்கள் விலகும்!

பஞ்ச பூதங்களில் நெருப்பின் உருவாக ஸ்ரீஉக்கிர நரசிம்மர் காட்சி அருளிய தலம். எனவே, எதிரிகளின் தொல்லை ஒழியும் என்பது ஐதீகம்! நரசிம்ம ஜயந்தி அன்று இங்கு நடைபெறும் ஸ்ரீமகா சுதர்சன யாகத்தில் கலந்து கொண்டு ஸ்வாமியை தரிசித்தால், நீங்காத செல்வம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்!

மங்கைமடம் ஸ்ரீவீர நரசிம்மர்

ஸ்ரீமன்னனாக இருந்து ஆழ்வார் எனப் போற்றும் வகையில் திருமங்கை ஆழ்வார் போற்றப்பட்டதற்கு காரணமான திருத்தலம் மங்கைமடம்! சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது இந்தத் தலம்.

ஹிரண்யாசுரனுக்கு வரம் அளித்த தோஷத்துக்கு ஆளான சிவபெருமான், மயன் மற்றும் யமன் ஆகியோருக்கு ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீநரசிம்மராகத் திருக்காட்சி தந்தருளிய தலம் இது. பஞ்ச நரசிம்ம தலங்களில், இரண்டாவது தலம்!

இந்தக் கோயிலின் மூலவர் - ஸ்ரீவீர நரசிம்மர். சாளக்ராமக் கல்லால் ஆன அழகுத் திருமேனி. உத்ஸவரின் திருநாமம் - ஸ்ரீரங்கநாதர். தாயார் - ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார். திருமங்கை ஆழ்வார் குறுநில மன்னனாக இருந்த போது ஸ்ரீவைர நரசிம்மர் எனப் போற்றப்பட்ட இந்த நரசிம்மர், பிறகு வீர நரசிம்மர் என அழைக்கப்பட்டாராம்! தான் விரும்பிய பெண்ணை மணம் முடிப்பதற்காக, ஸ்ரீவீர நரசிம்மரை வணங்கி, அன்னதானம் செய்தார். பஞ்ச பூத தலத்தில், இதனை காற்றுத் தலம் என்பர்.

இங்கேயுள்ள ஸ்ரீசெங்கமல புஷ்கரணி ரொம்பவே விசேஷம்.

ஆடி மாதத்தில் பிரம்மோத்ஸவம் பத்து நாள் விழாவாக, விமரிசையாக நடந்தேறும். ஸ்ரீநரசிம்ம ஜயந்தி நாளில், 1008 கலச பூஜையும் திருவீதியுலா புறப்பாடும் சிறப்புற நடைபெறும்.

விரும்பியபடி மண வாழ்க்கை அமைய வேண்டுவோர், பிரிந்த தம்பதி மீண்டும் சேர வேண்டும் என விரும்புவோர், அரசியலில் வெற்றி பெறத் துடிப்போர், மரண பயத்துடன் தவிப்போர் இங்கேயுள்ள செங்கமல புஷ்கரணியில் நீராடி, ஸ்ரீநரசிம்மருக்கு துளசி மாலை சார்த்தி வில்வத்தால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி, தயிர் சாதம் படையலிட்டால்... விரைவில் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்!

திருநகரி ஸ்ரீயோக நரசிம்மர் - ஸ்ரீஹிரண்ய நரசிம்மர்!

திருக்குறையலூர் ஸ்ரீஉக்ர நரசிம்மரையும் மங்கைமடம் ஸ்ரீவீர நரசிம்மரையும் வழிபட்டு, அடுத்ததாக, மங்கைமடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருநகரி ஸ்ரீயோக நரசிம்மரையும் ஸ்ரீஹிரண்ய நரசிம்மரையும் வழிபடலாம். இந்த இரண்டு நரசிம்ம மூர்த்தங்களும் ஒரே தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சிறப்பு பெற்ற திருத்தலம் இது!

ஹிரண்யனை வதம் செய்த கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீஹிரண்ய சம்ஹார நரசிம்மரைத் தரிசித்தால் எதிரிகள் தொல்லை முழுவதுமாக அகலும் என்கின்றனர் பக்தர்கள். அடுத்து, யோக நிலையில் உள்ள ஸ்ரீநரசிம்மரை வணங்கித் தொழுதால், மாணவர்கள் கல்வி- கேள்விகள் சிறந்து விளங்குவார்கள்; ஞானத்துடன் திகழ்வார்கள் என்பது ஐதீகம்!

பஞ்ச நரசிம்ம தலத்தில், மூன்றாவது மற்றும் நான்காவது திருத்தலம் எனப் போற்றப்படுகிறது இந்தத் தலம். தவிர, பஞ்ச பூத தலத்தில், இது ஆகாய மற்றும் பூமித் தலம் இது! ஆகாயக் கோலத்தில் ஸ்ரீஹிரண்ய நரசிம்மரும் பூமிக் கோலத்தில் ஸ்ரீயோக நரசிம்மரும் திருமங்கையாழ்வாருக்குத் திருக்காட்சி தந்த அற்புதத் திருவிடமும் கூட! இந்தத் தலத்தின் மூலவர் ஸ்ரீகல்யாண ரங்கநாதர். தாயார் - ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார்.

திருமங்கையாழ்வார் மற்றும் குலசேகர ஆழ்வார் ஸ்ரீநரசிம்ம மூர்த்தங்களை வணங்கி வழிபட்ட இந்தத் திருத்தலத்தில், திருமணத் தடையால் வருந்துவோர்... மூன்று சனிக்கிழமைகள் இங்கு வந்து மாலை சார்த்தி, நெய் தீபமேற்றி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து ஸ்ரீகல்யாண ரங்கநாதரை வழிபட்டால்... விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை!

ஸ்ரீயோக நரசிம்மருக்கு செவ்வரளிப் பூமாலை சார்த்தி, நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் தீபமேற்றி வழிபட்டால், விரைவில் புது வீடு கட்டும் யோகம் உண்டாகும். வியாபாரத் தடைகள் நீங்கும்; எடுத்த காரியங்கள் யாவும் எளிதில் கைகூடும் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்!

ஹிரண்ய நரசிம்மருக்கு நீலநிறப்பூக்கள் சார்த்தி நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால், குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழ்வார்கள்.

பிரதோஷம், சுவாதி நட்சத்திரம் ஆகிய நாட்களில் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீஹிரண்ய நரசிம்மர் மற்றும் ஸ்ரீகல்யாண ரங்கநாத பெருமாளை வணங்கினால், வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்!

திருவாலி ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர்!

திருவாலித் திருத்தலம், ஸ்ரீலக்ஷ்மியை தன் வலது தொடையில் வைத்தபடி காட்சி தரும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் கொள்ளை அழகு. பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரத்தின் ஐந்தாவது திருத்தலம் இது!

இந்தத் தலத்தின் நாயகி ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் மிகுந்த வரப்பிரசாதி. கைகூப்பி வணங்கிய திருக்கோலத்தில் தாயார் காட்சி தருவது விசேஷம். ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மருக்கு தாமரை மற்றும் நறுமணம் கமழும் மலர்களால் மாலையணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் யாவும் ஈடேறும்; இல்லத்தில் சுபிட்சம் நிலவும்!

வியாபாரத்தில் முதலீடு செய்பவர்கள், விவசாயம் செழிக்க வேண்டும் என நினைப் பவர்கள், முதலீடு செய்கிற பணத்தையும் விதையையும் ஸ்வாமியின் திருப்பாதத்தில் வைத்து வணங்கினால், தொழில் சிறக்கும்; விவசாயம் தழைக்கும்!

பிரதோஷ நாளில் இங்கு வந்து ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை வணங்கி, அவருக்கு அபிஷேகம் செய்த எண்ணெய்ப் பிரசாதத்தை தலையில் தேய்த்து நீராடினால், மனோவியாதிகள் அகலும்; மனோபலம் கூடும்!🙏
 
மிக அற்புதமான விளக்கங்களுடன் விரிவான தகவல்கள். நிச்சயம் சீர்காழி / திருவெண்காடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால், இந்த பஞ்ச நரசிம்ம திருத்தலங்களுக்கு செல்ல வேண்டும். நன்றி மா.👍
 
வாங்க ஜி திருவெண்காடு புதன் ஸ்தலம் நவக்கிரக சன்னதி , திருக்குரவலுர் ஸீரி உக்கிரநரசிம்மர்🙏🙏🙏
 
Last edited:
ஸ்ரீரங்கத்தில் ‘விஸ்வரூபம்’ என்றழைக்கப்படும் காலை முதல் நேர பூஜை மகத்தானது. இது ஸ்ரீரங்கத்திற்கே
உரித்தான ஒரு தனி வழிப்பாட்டு முறையாகும்.

‘விஸ்வம்’ என்றால் ‘பெரிய’ என்றும் ஒரு பொருள் உண்டு.
‘ரூபம்’ என்றால் உருவம்.

இங்கு உறையும் பெருமாளுக்கே பெரிய பெருமாள் என்றுதான் திருநாமம். பெரியபெருமாள் காலை உறங்கியெழும் இந்த வேளைக்கு விஸ்வரூபம் என்று பெயர் வைத்தது சரியே!

வேறு ஏதாவது காரணம் உண்டோ? உண்டு..!

108 திவ்யதேசங்களில் உள்ள அனைத்து பெருமாளும் முதல் நாள் இரவு இங்கு வந்து அரங்கனிடத்து ஒடுங்கி,
ஒன்றாகி அடுத்த நாள் காலை அவரவர் தம் யதாஸ்தானத்திற்கு எழுந்தருளிவிடுவார்கள்.

அனைத்து திவ்யதேச எம்பெருமான்களும் ஒன்றாகி சேவை சாதிக்கும் இந்த நேரம் மிகப்பெரிய மகத்துவம் பொருந்திய சேவைதானே?

அதனால்தான் இந்த தரிசனம் ‘விஸ்வரூப தரிசனம்’!

தேசிகர் தமது பாதுகாஸஹஸ்ரம் வைதாளிகப் பத்ததியில் (242 சுலோகம்) இந்த திருப்பள்ளியெழுச்சியின் போது
சிவன், நான்முகன், ஸநகர் ஆகியோர் அரங்கனது வாயிலில் இந்த விஸ்வரூப ரங்கனைக் காண்பதற்காக, தரிசிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டு,

உன் திருவடிகளினால் சுகம் பெற்று கொண்டிருக்கும், சக்ரவர்த்தினியாய் விளங்கும் பாதுகையை நீ சாற்றிக் கொண்டு எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றார்.

இதனால்தானே என்னவோ? ஆகம ரீதியாகவும், காவேரியினின்று யானையின் மேல் புனித நீர் கொண்டு வந்தவுடன்,

அந்த நீர் கொண்டு அர்ச்சகர்களால் முதலில் பாதுகைக்குத் திருமஞ்சனம் செய்விக்கப் படுகின்றது. இதற்கு ‘திருவடி விளக்குதல்” என்று பெயர்.

ஸ்வாமி தேசிகர் சொன்னது போல் அரங்கன் அதனைச் சாற்றிக் கொள்ளும் முன் முதலில் தன்னை கங்கையிற் புனிதமான காவிரி நன்னீரால் ஸ்நானம் பண்ணிக் கொள்கின்றது.

அரங்கன் கண் விழித்தலுக்கு முன் வீணை இசைக்கப்படுகின்றது. காவிரி நன்னீர் வந்தவுடன் பசுமாடு பின்பக்கமாய் திரும்பி நிற்க வைக்கபபடுகின்றது.

யானை அந்த பரந்தாமனை நோக்கிய வண்ணம் தயாராய் நிற்கின்றது. பசுமாட்டின் வால்பக்கம் மஹாலக்ஷ்மி வாஸம் செய்கின்றாள்.

யானையின் முகத்தில் வாஸம் செய்கின்றாள். பகவான் மஹாலக்ஷ்மியினை
கடாக்ஷித்தவாறு திருக்கண்ணை மெதுவே திறக்கின்றான்.

இந்த அழகினை ரசிக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.

பத்மா ஜுஷ்டம் பஜது சரணம் பாதுகா லப்தவாரா
ப்ரத்யாஸந்தா தவ பரிஜநா ப்ராதரஸ்தாந யோக்ய
அர்த்த உந்மேஷாத் அதிக சுபகாம் அர்த்த நித்ராநுஷங்காம்
நாபீ பத்மே தவ நயநயோ நாத பஸ்யந்து ஸோபாம் ||

பொருள்:

ஸ்ரீரங்கநாதா! காலைவேளையில் உனக்கு தொண்டு புரியும் கைங்கர்யபரர்கள் வந்து விட்டனர்.

உனது தாமரைப் போன்ற கண்களில் உள்ள உறக்கம் பாதி கலைந்தும், கலையாமலும் உள்ளதால், உனது இமை பாதி மூடியும், திறந்தும் உள்ளது.

இந்த
அழகைக் கண்டு நாபி கமலத்தில் உள்ள தாமரை மலர்
உனது கண்கள் போலவே மலர்ந்தும் மலராமலும் உள்ளது. இந்த அழகை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

உனது திருவடியினை வணங்கி வருடிய மஹாலக்ஷ்மியின் ஸேவையினை இனிப் பகலில் பாதுகை ஏற்றுக் கொள்ள வேண்டும். (ஆகவே துயில் எழுவாயாக!)
 
A nice message to share.
I once asked my Tamil friend, “Why do you worship Rama? Isn’t he from the North?”

He replied, “I do it at Rameshwaram — the place where he prayed to Shiva before defeating Ravana.”

Once I asked a Malayali uncle, “Why are there so many Krishna temples in Kerala? Wasn’t he from Mathura and Dwarka?”

He laughed and said, “Yes, but his butter theft stories are sweeter in Malayalam.”

And just like that, I realised that Krishna never stayed limited to one geography. His leelas were pan-Indian.

I once saw a Durga idol in Chennai and asked, “Isn’t Durga Puja mainly a Bengali thing?”

The priest smiled, “This is the same goddess you find in Kolkata. Just here, she’s called Kotravai or Mariamman.”

That day I understood - forms change but faith doesn’t.

In Kashi, Shiva sits as Vishwanath. In Chidambaram, he dances as Nataraja.

The river is Ganga in the North, and Cauvery in the South - but both flow with the same devotion.

The man who revived Sanatana Dharma walked from Kalady in Kerala to Kedarnath in the Himalayas. He didn’t ask for Aadhaar proof at the temple gates. His mission was clear i.e unify, not divide.

And that’s when I realized that North and South are just directions. Not divisions.

Dharma never asked which side of the Vindhyas you’re born on. It only asked if your actions are righteous.

The soul of India was never split but only our politics was.

If North India is the abode of Lord Shiva then South India is the abode of his son Karthikeya/Murugan. North and South are not two civilizations rather they are two arms of the same Sanatana body.

- Devendra Jha
 
ஸ்ரீரங்கத்தில் ‘விஸ்வரூபம்’ என்றழைக்கப்படும் காலை முதல் நேர பூஜை மகத்தானது. இது ஸ்ரீரங்கத்திற்கே
உரித்தான ஒரு தனி வழிப்பாட்டு முறையாகும்.

‘விஸ்வம்’ என்றால் ‘பெரிய’ என்றும் ஒரு பொருள் உண்டு.
‘ரூபம்’ என்றால் உருவம்.

இங்கு உறையும் பெருமாளுக்கே பெரிய பெருமாள் என்றுதான் திருநாமம். பெரியபெருமாள் காலை உறங்கியெழும் இந்த வேளைக்கு விஸ்வரூபம் என்று பெயர் வைத்தது சரியே!

வேறு ஏதாவது காரணம் உண்டோ? உண்டு..!

108 திவ்யதேசங்களில் உள்ள அனைத்து பெருமாளும் முதல் நாள் இரவு இங்கு வந்து அரங்கனிடத்து ஒடுங்கி,
ஒன்றாகி அடுத்த நாள் காலை அவரவர் தம் யதாஸ்தானத்திற்கு எழுந்தருளிவிடுவார்கள்.

அனைத்து திவ்யதேச எம்பெருமான்களும் ஒன்றாகி சேவை சாதிக்கும் இந்த நேரம் மிகப்பெரிய மகத்துவம் பொருந்திய சேவைதானே?

அதனால்தான் இந்த தரிசனம் ‘விஸ்வரூப தரிசனம்’!

தேசிகர் தமது பாதுகாஸஹஸ்ரம் வைதாளிகப் பத்ததியில் (242 சுலோகம்) இந்த திருப்பள்ளியெழுச்சியின் போது
சிவன், நான்முகன், ஸநகர் ஆகியோர் அரங்கனது வாயிலில் இந்த விஸ்வரூப ரங்கனைக் காண்பதற்காக, தரிசிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டு,

உன் திருவடிகளினால் சுகம் பெற்று கொண்டிருக்கும், சக்ரவர்த்தினியாய் விளங்கும் பாதுகையை நீ சாற்றிக் கொண்டு எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றார்.

இதனால்தானே என்னவோ? ஆகம ரீதியாகவும், காவேரியினின்று யானையின் மேல் புனித நீர் கொண்டு வந்தவுடன்,

அந்த நீர் கொண்டு அர்ச்சகர்களால் முதலில் பாதுகைக்குத் திருமஞ்சனம் செய்விக்கப் படுகின்றது. இதற்கு ‘திருவடி விளக்குதல்” என்று பெயர்.

ஸ்வாமி தேசிகர் சொன்னது போல் அரங்கன் அதனைச் சாற்றிக் கொள்ளும் முன் முதலில் தன்னை கங்கையிற் புனிதமான காவிரி நன்னீரால் ஸ்நானம் பண்ணிக் கொள்கின்றது.

அரங்கன் கண் விழித்தலுக்கு முன் வீணை இசைக்கப்படுகின்றது. காவிரி நன்னீர் வந்தவுடன் பசுமாடு பின்பக்கமாய் திரும்பி நிற்க வைக்கபபடுகின்றது.

யானை அந்த பரந்தாமனை நோக்கிய வண்ணம் தயாராய் நிற்கின்றது. பசுமாட்டின் வால்பக்கம் மஹாலக்ஷ்மி வாஸம் செய்கின்றாள்.

யானையின் முகத்தில் வாஸம் செய்கின்றாள். பகவான் மஹாலக்ஷ்மியினை
கடாக்ஷித்தவாறு திருக்கண்ணை மெதுவே திறக்கின்றான்.

இந்த அழகினை ரசிக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.

பத்மா ஜுஷ்டம் பஜது சரணம் பாதுகா லப்தவாரா
ப்ரத்யாஸந்தா தவ பரிஜநா ப்ராதரஸ்தாந யோக்ய
அர்த்த உந்மேஷாத் அதிக சுபகாம் அர்த்த நித்ராநுஷங்காம்
நாபீ பத்மே தவ நயநயோ நாத பஸ்யந்து ஸோபாம் ||

பொருள்:

ஸ்ரீரங்கநாதா! காலைவேளையில் உனக்கு தொண்டு புரியும் கைங்கர்யபரர்கள் வந்து விட்டனர்.

உனது தாமரைப் போன்ற கண்களில் உள்ள உறக்கம் பாதி கலைந்தும், கலையாமலும் உள்ளதால், உனது இமை பாதி மூடியும், திறந்தும் உள்ளது.

இந்த
அழகைக் கண்டு நாபி கமலத்தில் உள்ள தாமரை மலர்
உனது கண்கள் போலவே மலர்ந்தும் மலராமலும் உள்ளது. இந்த அழகை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

உனது திருவடியினை வணங்கி வருடிய மஹாலக்ஷ்மியின் ஸேவையினை இனிப் பகலில் பாதுகை ஏற்றுக் கொள்ள வேண்டும். (ஆகவே துயில் எழுவாயாக!)
 
குதிரையை விட்டு விட்டீர்கள்....குதிரையும் அங்கு வரும்.

ஒரு மணி நேரம் தான் விஸ்வரூப தரிசனம் பிறகு 9.30 மணிக்கு தான்...
 
Back
Top
Developed and maintained by – Akeshya