வெஜ் பாஸ்தா

Saranya Hema

Administrator
Staff member
முதல்ல தண்ணி வச்சு அதுல கொஞ்சம் உப்பு போட்டு கொதிக்கவும் பாஸ்தாவையும் போடுங்க. இது 5 மினிட்ஸ் தான். வெந்துரும்.

தண்ணிய வடிச்சுட்டு ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு பாஸ்தாவை விரவி வச்சிடனும். அப்போதான் ஒட்டாம, குழையாம நல்லா இருக்கும்.
இன்னொரு சாஸ்பேன்ல பட்டர் கொஞ்சமா போட்டு அதுல க்ரஷ் பண்ணின இஞ்சி, பூண்டு போட்டு ப்ரை பண்ணனும்.

ஒரு மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் கட் பண்ணி அதோட சேர்த்து, கூடவே உப்பு, கரம் மசாலா தூள் போட்டு வதக்கனும்.
நல்லா கோல்டன் ப்ரையாகவும் மூணு தக்காளியை குட்டியா கட்பண்ணி அதோட சேர்த்து வதக்கிடனும். ( பெங்களூர் தக்காளி 2 போதும் )
இதோட வெஜிடபிள்ஸ் இருந்தாலும் சேர்க்கலாம்.

நான் ஸ்வீட்கார்ன் கொஞ்சம், அரை குடைமிளகாய், ஒரு குட்டி கேரட் சேர்த்து வதக்கிட்டேன். உங்களுக்கு எந்த வெஜீஸ் வேணுமோ சேர்த்துக்கலாம்.

தண்ணீர் லேசா தெளிச்சுவிட்டு கிளறனும். சீக்கிரமே வேகக்கூடியவை தான் இது.
அதோட ஒரு ஸ்பூன் தக்காளி ஹெட்சப், ரெண்டு ஸ்பூன் ஹாட் சில்லி சாஸ் சேர்க்கனும்.

சாஸ் இல்லனா சில்லி பவுடர் கூட ஒரு ஸ்பூன் சேர்த்துக்கலாம். அப்போ எக்ஸ்ட்ரா இன்னொரு ஸ்பூன் ஹெட்சப் சேர்க்கனும்.
எல்லாம் மிக்ஸ் ஆனதும் பாஸ்தாவை போட்டு கிளறி அதோட ஓரிகனோ, பேசில்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு 5 மினிட்ஸ் மூடி வச்சு இறக்கும் போது சீஸ் துருவி இறக்கிடனும்

குட்டீஸ்க்கு மட்டுமில்ல நமக்குமே இது புடிக்கும்
🙂


ஈஸி & குவிக் ரெஸிபி

ஓரிகனோ இல்லைனா ஒன்னும் பிரச்சனை இல்லை. காய்ந்த கொத்தமல்லி இலை இருந்தா கூட அதை உதிர்த்து தூவிடலாம்.

டொமெட்டோ ஹெட்சப் இல்லாதப்போ தக்காளியை வேக வச்சு ஸ்கின் அவுட் பண்ணி நல்லா அரைச்சுடனும். கடாயில் ஒரு க்யூப் ( ஸ்பூன்) பட்டரும், ரெண்டு ஸ்பூன் சுகரும் சேர்த்து நல்லா கொதிக்கவச்சு கெட்டியானதும் ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம்

1747660897538.webp
 
Back
Top
Developed and maintained by – Akeshya