விட்டாலும் விலகாதே! ~ விலகல் 24

திவ்யா ரொம்ப பாவம்.... 😔😔😔

ராகவன் அயோக்கியன் தான் ஆனா திவ்யா மேல இருக்குற பாசம் உண்மை..... ஆனா சுபாஷினி ஒரு அம்மாவா எங்கயும் திவ்யாக்காக இருக்கல......

ராகவன் விஷயத்துல சுபா செஞ்சது ரொம்பவே சரி.... ஆனா பொண்ணு உயிரோட இருக்கானு தெரிஞ்சும் அவளை அவங்க கூட வச்சுக்க நினைக்கல இன்னொரு பொண்ணு இருந்ததாலயா இல்லனா எப்படி விட்டுக் குடுக்க மனசு வரும்...... அங்க உரிமையா இருந்திருப்பா இங்க தத்தெடுத்த குழந்தை தானே.....

ராகவனுக்கு குழந்தை கிடைக்க கூடாதுன்னு தானே அபார்ஷன் பண்ணிட்டதா சொன்னாங்க அப்புறம் எப்படி அதே குழந்தையை அவன்கிட்ட வளர விட்டாங்க...... சுபாவை திவ்யா ஏத்துக்காதது சரி தான்.....

ராஜாராம் கிரேட்..... 😍

ஹரிஷ் நீ வேணாமாம் அவளுக்கு.... எவ்ளோ டார்ச்சர் பண்ணிருப்பா லவ் பண்றேன்னு இப்போ உன்னோட டர்ன் விடாத 😂😂😂😂
 
இந்த சுபாம்மா வரலைன்னா திவ்யா அப்பான்னு ராகவனோடவாது இருந்துருப்பா.. ஆனாலும் நிம்மதியாவான்னு தெரியல..

இப்ப சுபாம்மா பத்தி தெரிஞ்சாலும் விலகல் தான்.

ஹரிஷ் sir என்ன செய்யப்போறாரு..
 
💞💞 ஒரு பெண்ணை பழி வாங்க போதையில் குழந்தை கொடுத்த தண்டனைக்கு தான், தான் உயிர் கொடுத்தவளையே யாரென தெரியாது தத்தெடுத்து வளர்த்துள்ளார் ராகவன். விதி வலியது. திவி ஹரிஷ் மனதை விரைவில் புரிந்து கொள்வாள்.
 
Last edited:
ராஜாராம் சுபா இரண்டு பேரையும் இப்பவும் எனக்கு பிடிக்கல😑 😑 😑 😑 😑 ராகவன் அயோக்கியன் தான் 🙁🙁🙁 ஆனா சாருவால் திருந்தி திவ்யாவுக்கு நல்ல அப்பாவாக தான் வாழுறாரு ☹️☹️☹️அதை இவங்க போய் கலைச்சு விட்டுட்டாங்க 🥺🥺🥺

பதினைந்து வருஷம் அவ சந்தோஷமா தான் வாழ்ந்திருக்கா 🙂🙂🙂 இரண்டு நாள் அனாதை ஆசிரமத்தில் இருந்ததை ஒரு பெரிய கொலை குத்தம் மாதிரி தூக்கிட்டு வந்து இவங்க பிரச்சினை செய்யாமல் இருந்திருந்தா திவ்யா இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டா 🤧 🤧 🤧 🤧

திவ்யா தன் பெத்த பொண்ணு என்று தெரியாமலே அவ மேல் உயிரா இருக்காரு 😐 😐 இரண்டே நாளில் அவளை தேடி பிடிச்சு கூட்டிட்டு வந்துட்டாரு 😖😖😖 அவரோட அன்பால் கொஞ்சம் கொஞ்சமாக சமாதான படுத்தி இயல்பாக்கிருப்பாரு 😒😒😒

ராஜா சுபா இரண்டு பேரும் கொஞ்சம் மூளைய யூஸ் பண்ணிருக்கலாம் 🤨 🤨 🤨 பதினைஞ்சு வயசு பொண்ணு எப்படி வேற ஒருத்தரை அப்பா அம்மா என்று ஏத்துக்கும் என்று கொஞ்சம் கூடவா யோசிக்கல 🤨 🤨 🤨 🤨

அவளை திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு போனதை வச்சாவது ராகவனுக்கு திவ்யா மேல் இருக்க அன்பை இவங்க புரிஞ்சுக்க வேண்டாமா 😏 😏 😏 திவ்யாவோட சந்தோஷத்துக்காகவாது ராகவனை பத்தின உண்மை அவளுக்கு தெரியாமல் பார்த்திருக்கலாம் 😵 😵 😵 ஆனா ராஜாராம் கூடவா யோசிக்காமல் இப்படி திவ்யா வாழ்க்கைய குழப்பி விடுவாரு 😔😔😔

சாரு நல்லவங்களா இருந்தாலும் ராகவன் கிட்ட தன் பொண்ணு வளர வேண்டாம் என்று வந்திருக்கணும் ☹️ ☹️ இல்லன்னா சாரு இறந்த பிறகு பார்வதி சரியில்லை என்பதை தெரிஞ்சிக்கிட்டு அப்போதாவது கூட்டிட்டு போயிருக்கணும் 😑😑😑

இவங்க ராகவனை தண்டிக்கிறதா நினைச்சு திவ்யாவ தான் தண்டிச்சிருக்காங்க 🤨🤨🤨🤨🤨🤨🤨

ராகவன் பண்ண தப்புக்கு திவ்யாவோட வெறுப்பு தான் தண்டனை 🙁 🙁 🙁 ராஜாராம் சுபா கூட சேருவதில் இப்பவும் எனக்கு விருப்பம் இல்லை 🤧 🤧 🤧

திவ்யா ஹரிஷோட இடத்தில் இருந்து கொஞ்சம் கூட யோசிக்க மாட்டன்னா நீ எதுக்கு லவ் பண்ற 🥶🥶🥶 ஒன்னுக்கு இரண்டு குடும்பமா உன்னை தாங்கி கிட்டு உன் பின்னாடி சுத்துறதால் அவனோட நிலை உனக்கு புரியல 😣😣😣😣😣😣😣

உனக்காக எதுவும் செய்யாத ராஜாராம் மேல் உனக்கு பாசம் இருக்கும் போது அவன் இந்த நிலைக்கு வர உதவி செஞ்சவருக்கு அதுக்கான நன்றிய காட்டி தானே ஆகணும் 🙁🙁🙁 உன்னை பத்தி மட்டும் தான் யோசிக்கணும் என்று நினைக்கிறது தப்பு 😏😏😏😏
@உதயா
எஸ்.. ராஜாராம் அண்ட் சுபா போகாமல் இருந்து இருந்தா திவ்யா இவ்ளோ கஷ்ட பட மாட்டா தான்.. adopted child னு தெரிய வந்தாலும், ராகவன் அன்புல நாளடைவில் அந்த காயம் குறைந்து அவ இயல்புக்கு திரும்பி இருக்க தான் அதிக வாய்ப்பு..

அவங்களுக்கு ராகவன் மேல் நல்ல impression இல்லை.. அவங்க அனுபவம் அப்படி.. அவர் திருந்தியதோ திவ்யா மேல இவ்ளோ பாசம் வச்சு இருக்கிறதோ அவங்களுக்கு தெரியாதே!! திவ்யா வேற ஆசிரமம் போய்டவும் பயம் வந்துடுச்சு, பொண்ணு life நல்லா இருக்காதோ னு.. அதான் கிளம்பி போறாங்க..

ராகவன் பத்தின உண்மையை திவ்யா கிட்ட சொல்ற ஐடியா அவங்களுக்கு இல்லை.. அது எதிர்பாராமல் நடந்தது தான்.. திவ்யா வந்து நின்னதை ராஜாராம் பார்த்து இருந்தா கண்டிப்பா சுபாவை பேச விட்டு இருக்க மாட்டார்.

திவ்யா ஹரீஷ் நிலமைய புரிஞ்சுக்காம இல்லை ஆனா அவளால அதை ஏத்துக்க முடியலை.. ராஜாராம் விட தனக்கு முன்னுரிமை தரனும் னு நினைக்கிறா.. இது அவ அனுபவித்த வலிகளோட effect.. என்ன சொல்றது.. புத்திக்கு புரியுது மனசுக்கு புரியலை னு சொல்லுவோமே! அப்படி தான் அவ இப்போ இருக்கிறா..

-கோம்ஸ்.
 
கொஞ்சம் குழப்பமான அதிர்ச்சி கதை தான். ஆனால் திவ்யா மிகவும் பாவம். சொந்தம் என்று நம்பியவர்கள் ஏமாற்றியதால் உண்மையான சொந்தங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள்.

ஹரிஷ் இனி காதலுக்காக நிறையவே போராடனும். 😍

மாமனாரும், மாப்பிள்ளையும் ஜோர்.🥰 ராஜாராம் உண்மையிலேயே உயர்ந்தவர். அருமை 🥰
எஸ்.. திவ்யா பாவம் தான்..

எஸ்.. போராடனும்..

மிக்க நன்றி டா :-)

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya