வயிற்றுப்புண் விரைவில் குணம் பெற சுண்டைக்காய் 💚

Narmadha mf

Well-known member

சுண்டைக்காய் நம்மில் பலருக்கு தெரியும் அதிக அளவிளான மக்கள் உணவில் சேர்த்து கொள்ளவும் செய்கிறோம், இருப்பினும் அதன் சிறு கசப்பின் காரணமாக இன்றைய தலைமுறையினருக்கு பிடித்தம் இல்லாமல் போய்விடுகிறது.

23-658be209d7cc2.webp


நாகரிக உலகில் துரித கதியில் கிடைத்ததை உண்டு, வாய்க்கு ருசியையையும் வயிற்றுக்கு அவஸ்தையையும் கொடுத்து ஓடி கொண்டு இருக்கிறோம்...சேராத உணவினால் வயிற்றில் செரிமான கோளாறு மற்றும் குடல் புண் ஏற்பட்டு அவதியும் படுகிறோம்,.. நம்முடைய இத்தகைய அவஸ்தையை குறைக்கும் அருமருந்து சுண்டைக்காய்.

🔹சுண்டைகாய் தீராத வயிற்று புண் மற்றும் அஜீரணத்தை விரைவில் குணப்படுத்தும்.

🔹அதிக அளவில் நார்சத்து இருப்பதினால் உடல் கழிவுகளையும் வெளியேற்றும்.

🔹ஹீமோகுளோபின் அளவை அதிக படுத்தி இரத்தசோகையை குணப்படுத்தும்.

🔹இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி இரத்த சக்கரை அளவை காட்டுக்குள் வைக்கும்.

🔹இரத்தில் உள்ள கொழுப்பை கரைத்து இதயத்திற்கு பலத்தை அளிக்கும்.

இன்னும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்த சுண்டைக்காயை நாம் மாதத்தில் இரு முறையாவது எடுத்து பயன் பெற வேண்டும்.

வாழ்க வளமுடன் 🙏🙏

 
Back
Top
Developed and maintained by – Akeshya