ரவை கேசரி

Saranya Hema

Administrator
Staff member
ஒரு கப் ரவைக்கு அதே கப்ல மூணு கப் தண்ணி, ஒரு கப் சுகர்.

தண்ணியை தனியா ஒரு பாத்திரத்துல சுட வச்சுட்டு அதே நேரம் இன்னொரு ஸ்டவ்ல கடாய் வச்சு ரெண்டு ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துடுங்க.

அதே நெய்ல ரவையை போட்டு லேசா வறுத்துவிடுங்க. நெய் ரவை ஃபுல்லா ஒட்டி வரும் போது கொதிக்க வச்ச தண்ணியை எடுத்து ரவைல ஊத்தி கட்டி படாம கிளறிவிடுங்க.

ரவை வேக ஆரம்பிக்கும் போது ஃபூட் கலர் ரெண்டு ட்ராப்ஸ் விடுங்க.

இல்லை குங்குமப்பூ இருந்தா முதல்லையே சூடான தண்ணில போட்டு அதை இந்த ரவைல சேர்க்கலாம். தண்ணி குழைஞ்சு ரவை வெந்ததும் சுகரை சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணிவிட்டு ஏலக்காய் பொடியை லைட்டா தூவி முந்திரி, நெய் கொஞ்சம் சேர்த்து கிளறி இறக்கினா கமகம கேசரி ரெடி

1747812082710.webp
 
நல்ல அழகா சிம்பிளா சொல்றீங்க..👌🏽 நான் செஞ்சு பாக்கறேன்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya