முருங்கை கீரை pasta

🌿முருங்கை கீரை ஃப்யூஷன் பாஸ்தா 🍝

தேவையான பொருட்கள்:-

🍝 பாஸ்தா - 2 கப்
🧅 வெங்காயம் - 1 சிறியது (நறுக்கியது)
🍅 தக்காளி - ½ சிறியது (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - ½ தேக்கரண்டி
🧈 வெண்ணெய் - 1 தேக்கரண்டி
🧂 உப்பு - தேவைக்கேற்ப
🛢️ எண்ணெய் - 2 தேக்கரண்டி

அரைக்க:
🌿முருங்கை கீரை - 1 கப்
கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
முந்திரி - 10 -12
இஞ்சி - 1 இன்ச்
சீஸ் 🧀 1 cube
பாஸ்தா மசாலா 1பாக்கெட் (5rs)

சமைக்கும் முறை:-

1. பாஸ்தாவை உப்பு மற்றும் எண்ணெயுடன் 8-10 நிமிடங்கள் வேகவைக்கவும். வடிகட்டி ஒதுக்கி வைக்கவும்.

2. கீரையை எண்ணெயில் 2 நிமிடங்கள் வதக்கி, கொத்தமல்லி, முந்திரி, இஞ்சி, சீஸ் , பாஸ்தா மசாலா சேர்த்து அரைக்கவும்.

3. கடாயில் வெண்ணை போட்டு வெங்காயம், பூண்டு விழுது மற்றும் தக்காளியை மென்மையாகும் வரை வதக்கவும்.

4. அரைத்த விழுது, மசாலா, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவும் 5 நிமிடங்கள் மூடி மிதமான தீயில்.

5. பிறகு,பாஸ்தாவை சேர்த்து, மூடி வைத்து 3 நிமிடங்கள் சமைக்கவும்.

6. சூடாக பரிமாறவும்! 😋

7. சூடான சுவையான இரும்பு சத்து மிக்க பாஸ்தா தயார்..


ஊட்டச்சத்து குறிப்பு 🌟
✅ இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் (கீரை) நிறைந்தது
✅ புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் (முந்திரி, சீஸ்)
✅ பாஸ்தாவிலிருந்து வரும் ஆற்றல் - குழந்தைகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்
✅ குழந்தைகள் கீரைகளை சாப்பிட வைக்கும் சுவையான வழி.1000136099.webp
 
Back
Top
Developed and maintained by – Akeshya