மழைத்துளி 14

ஹாய் வணக்கம் நமஸ்காரம் நண்பர்களே

மழைத்துளியின் சாரல் 14 உங்களுக்காக இதோ

படிங்க படிச்சுட்டு நிறை குறை என்னவாயிருந்தாலும் சொல்லிட்டு போங்க....

உங்கள் பொன்னான கருத்துக்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்..

சினேகமுடன்
ஹரிணி வினோத்
 
மேகமலை மலைத்தொடரின் மடியில் விழுந்து பாயும் இந்த அருவி, பார்ப்பவரின் மூச்சையே நிறுத்திடும் அளவுக்கு அழகு.

150 அடி உயரத்தில் இருந்து விழும் தண்ணீர், பனி நுரையோடு குளம் உருவாக்கி, அங்கிருந்து சற்றே தூரம் பாய்ந்து மீண்டும் 40 அடி உயரத்தில் விழுந்து சுருளி நதியில் கலக்கிறது. இரண்டு நிலை அருவியாக பெயர் பெற்ற இது, இயற்கையை நேசிக்கிறவர்களுக்கும் சாகசத்தை விரும்புகிறவர்களுக்கும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்.

பெரியார் வனவிலங்கு சரணாலயத்துக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் நிறைய பேர் வருவார்கள்.


சுற்றியுள்ள பசுமை காடுகள், காட்டுப்பூக்களின் வாசம், பழங்களின் மணம்—அனைத்தும் ஒன்றாய் கலந்திருக்க, அருவி விழும் சத்தம் அந்தப் பசுமையோட ஒரு சங்கீதமா ஒலித்தது.

பக்கத்தில் உள்ள பழங்கால குகைகள், 11ஆம் நூற்றாண்டின் பாறைச் செதுக்கல்களின் சின்னங்கள், இயற்கை மட்டுமல்ல வரலாற்றின் சுவடுகளையும் நினைவூட்டின.
சுற்றிய காடு பச்சை வண்ணங்களின் பந்தலாய், இங்கங்கே காட்டுப்பூக்கள் மணம் வீசி, வனத்தின் உயிரோட்டத்தை உணர்த்தின.

சூர்யா, கார்த்திக், ஹ்ருதயா, காவ்யா—அனைவரும் சேர்ந்து அந்த அருவியின் அடியில் குளிர்ந்த தண்ணீரில் கால் ஊற வைத்து, சின்னச் சின்ன கற்களை எறிந்து சிரிச்சுக்கொண்டே விளையாடினார்கள்.

கார்த்திக் தண்ணீர் சிதறச் சிதற ஹ்ருதயா, காவ்யாவை நனைக்க, அதுக்குப் பழிவாங்க இருவரும் சேர்ந்து அவனை துரத்த, சிரிப்பும் சத்தமும் கலந்த அந்த தருணம் மறக்கமுடியாத ஆனந்தமாய் இருந்தது.

பல நேரம் அப்படி ஆட்டம் போட்ட பிறகு தான் எல்லாருக்கும் சோர்வு தெரிஞ்சது. நனைந்த தலைமுடியை துடைத்துக்கொண்டு, பாறையின் ஓரத்தில் உட்கார்ந்தார்கள்.

“சும்மா... அற்புதம்னு சொல்லினா போதாது இங்க,”ன்னு சூர்யா மூச்சு வாங்கிக்கொண்டு சொன்னான்.

அந்த நேரத்தில்தான் காவ்யா தன்னோட பையிலிருந்து சின்ன பையை எடுத்து வைத்தாள்.

“சாப்பிடாம நீங்க ஆடிகிட்டு தான் இருந்தீங்க... இப்போ பசிக்கலையா?”ன்னு சிரிச்சுக்கிட்டு பை திறந்தாள்.

அந்த வாசனை வரும் நேரத்திலேயே கார்த்திக், ஹ்ருதயா இருவரும் கவனத்தோட அந்தப் பக்கமே திரும்பினார்கள்.

“என்னன்னு ரகசியமா எடுத்துக்கிட்டு வந்திருக்க?”ன்னு கார்த்திக் கேக்க

“என்னடா, நீங்க சாப்பிடுவீங்கன்னு தெரிஞ்சுதான் பாக்கெட் பண்ணி கொண்டு வந்தேன்,”ன்னு காவ்யா புன்னகையோட சொன்னாள்.

சிப்ஸ், சுட்ட கடலை, வெங்காய பக்கோடா, முறுக்கு, தேன் மிட்டாய், தட்டை, கப்கேக்,சின்ன பிஸ்கட் பாக்கெட்டுகள் என இன்னும் பல இருந்தன—அனைத்தையும் கையிலெடுத்துக்கிட்டு சிரிப்போட பகிர்ந்து சாப்பிட ஆரம்பிச்சாங்க.

குளிர்ந்த காற்று முகத்தை வருட, அருவியின் சத்தம் காதிலொலிக்க, நடுவில் வாயில் நொறுங்கப்படும் சத்தமும் இன்னும் சுவையாக்கின.

ஹ்ருதயா ஒரு சின்ன பக்கோடாவை எடுத்து சூர்யாவுக்கு நீட்டினாள். “நீங்க சாப்பிட்டு பாருங்க… ரொம்ப நல்லா இருக்குது,”ன்னு மெதுவா சொன்னதும், சூர்யா உள்ளுக்குள் ஒரு புதுசா பூரிப்பு உணர்ந்தான்.

ஆனால் வெளியில் எதுவும் காட்டாமல் சிரிப்போட “ஹ்ம்ம், சூப்பர் டேஸ்ட்" ன்னு சொன்னான்.

கார்த்திக் அதேநேரம், மரவள்ளி கிழங்கு சிப்ஸ் பார்த்து “இது தான் என் எனர்ஜி பூஸ்டர் … இல்லனா நான் மலை ஏறுவது ரொம்ப கஷ்டம்"ன்னு சொல்ல, எல்லாரும் சிரிச்சார்கள்.

குளிர்ந்த பாறை மேல் எல்லாரும் உட்கார்ந்துகிட்டு, பையிலிருந்து சிப்ஸ், பக்கோடா, கடலை என அவங்களுக்கு ஏற்றது எடுத்துக்கிட்டு சாப்பிட ஆரம்பிச்சிருந்தாங்க.

அருவியின் சத்தம், பசுமையான காட்டு காற்றோட கலந்த அந்த சூழ்நிலையில்,

ஹ்ருதய சூர்யா கிட்ட "இந்த இடம் பத்தி சொல்லுங்க உங்களுக்கு தெரிஞ்சது "

உடனே சூர்யா “உங்கக்குத் தெரியுமா, இந்த சுருளி அருவி பத்தி சிலப்பதிகாரத்திலேயே குறிப்பிட்டு இருக்கு,”ன்னு சாப்பிடும் இடையிலே சொன்னான்.

கார்த்திக் கண்களை பெரிதா திறந்து, “என்ன! சிலப்பதிகாரமா? அதுவே பண்டைய இலக்கியம் தானே?”ன்னு கேட்டான்.

சூர்யா சிரிச்சுட்டு, “ஆமா டா… இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் இந்த அருவி அழகைப் பற்றிப் பாடியிருக்காங்க.அதனால் தான் இங்க வந்து உட்காரும்போது நம்மளோட முன்னோர்கள் அனுபவிச்ச அதே அழகையும், அந்த same peace-யையும் நாமும் உணர மாதிரி தோணுது.”


"சுருளி அருவியில் தான் மனிதன் ஓய்வு அடையற அளவுக்கு இங்கிருக்கும் அழகு இருக்கு.”

ஹ்ருதயா அந்த வரிகளை கேட்டவுடன் ஒரு நிமிஷம் கண்ணை மூடிக்கிட்டு அருவி சத்தத்தோட சேர்த்து அந்தக் கவிதை வரிகளை உணர்ந்தாள்.

“வாவ்… என்ன அழகு… இன்னும் அந்தக் காலத்திலேயே இதை கவிஞர்கள் சொல்லிப்போயிருக்காங்க னா, இந்த அருவியின் பெருமை சொல்லவே வேண்டாம்,”ன்னு மெதுவா சொன்னாள்.

“அதோட, இங்கிருக்கும் தண்ணீர் சுத்தமா மருத்துவ குணம் கொண்டது. நிறைய பேரு வந்து இங்க குளிப்பாங்க, ஏன்னா சில தோல் சம்பந்தபட்ட நோய் தீர்க்கும் வேலை செய்யும்னு நம்புறாங்க,”ன்னு சூர்யா தொடர்ந்தான்.

காவ்யா ஸ்நாக்ஸ் பையை சூர்யாவுக்கு நீட்டிக்கிட்டு, “அருவி பத்தி சொல்லிக்கிட்டு நீங்க சாப்பிடவே மறந்துட்டீங்கநா!”ன்னு கிண்டலடிக்க, எல்லாரும் சிரிச்சாங்க.

அதற்குள்ள சூர்யா கை காட்டிக்கிட்டு, “அட, இன்னும் ஒரு 1.5 கி.மீ தான்… அங்கே ஒரு அற்புதமான கோவில் இருக்கு. சக்திமிகு அன்னை ஸ்ரீ ஜெயமீனா திருக்கோவில். உங்கக்குத் தெரியுமா, இது உலகிலேயே முதல் முறையா ஒரு அன்னைக்காக அவங்க மகனும் கணவரும் சேர்ந்து கட்டிய கோவில்.”

“நெஜமாவ? அம்மாவுக்கு கோவில் கட்டினாங்களா?”ன்னு ஹ்ருதயா ஆச்சரியமா கேட்டாள்.

“ஆம். டாக்டர் ஜேகந்த் அவர்களும், அன்னை ஜெயமீனாவின் கணவர் ஜெயராஜ் அவர்களும் சேர்ந்து அவங்க தியாகத்துக்கும், தன்னலமில்லாத அன்புக்கும் நினைவாக இந்த கோவில் கட்டினாங்க. "

"அந்த அம்மா கேன்சர்க்கு எதிரா போராடும்போது கூட, குடும்பத்தாரை ஆறுதல் சொல்லிக்கிட்டு, ‘நான் எப்போவும் உங்களோடத்தான் இருப்பேன்… நீங்கள் என்னை அழைக்கும் போதெல்லாம் ஆசீர்வதிக்க வந்து நிற்பேன்’ன்னு சொன்னாராம்."

அந்த வரிகள் தெய்வ வார்த்தை மாதிரி உண்மையாயிற்று. இப்போ அந்தக் கோவில் ஒரு சின்னம் 'அன்னை தெய்வத்தை விட மேலானவர்’ன்னு உலகுக்கே எடுத்துக்காட்டுறது,”ன்னு சூர்யாவின் குரலில் ஒரு மரியாதை தெரிந்தது.

அவன் சொல்லிக் கொண்டே இருக்க, கார்த்திக் கைல சிப்ஸ் இருந்தும் வாய்க்குள்ள போடவே மறந்துட்டான்.

“சூப்பரா இருக்கு டா… இப்படி ஒரு இடம் இருக்கே தெரியாம போச்சே,”ன்னு சொன்னான்.

ஹ்ருதயா அதேசமயம் அந்தக் கோவிலின் கதை கேட்டவுடன் பல நினைவுகளோட முகம் யோசனையை தத்தெடுத்தது. அவள் மனசுக்குள் ஏதோ ஒரு அன்பும், துக்கமும் கலந்த உணர்வு எழுந்தது.

சூர்யா அவளது முகத்தை சற்றே கவனத்தோட பார்த்தான், ஆனா எதுவும் சொல்லாமல் சிரிப்போட கடந்துவிட்டான். அவனுள் ஏதேதோ எண்ண அலைகள் அடித்து ஓய்ந்தன...

அருவியின் சத்தம், காற்றின் இசை, சூர்யா சொல்லிய வரலாற்று சொற்கள்—அந்த தருணத்தை எல்லாருக்கும் இன்னொரு நினைவாக ஆக்கின.


சந்தோஷ் உடனே "ஓகே கைஸ் ரொம்ப சென்டியா போகுது.. சூரியனா வேற இடம் சொல்லுங்க இன்ட்ரெஸ்டிங்கா "

சுருளி அருவி அடிவாரத்திலிருந்து சுமார் 500 மீட்டர் பயணம் செய்யும்போது, நீங்கள் சுருளிவேலப்பர் கோவில் மற்றும் கைலாய குகையை இருக்கு,”ன்னு சூர்யா மெதுவாக சொன்னான்.

“இந்தக் கைலாய குகையில், புராணக் கதைகளில் சொல்லப்படுகிற முப்பத்து முக்கோடி தேவர்கள் வாத்தியங்களோடு வந்து தியானம் செய்ததாகக் கூறப்படுது. இங்கு இமயகிரிச் சித்தர் என்றவர் தனது கடுமையான தவத்தால் பிரசித்தி பெற்றார். அவர் செய்து வந்த சத்காரியம், குகையின் ஆழமான அமைதியோடு இன்றும் உணரப்படுகிறது,”ன்னு சூர்யா
தன்னுடைய கண்களை சுற்றி காடுகளுக்கு திருப்பினான்.

“மேற்கு தொடர்ச்சிமலையின் இதயப் பகுதியிலே இது அமைந்திருப்பதால், இந்த இடம் பண்டைய காலத்திலிருந்தே இந்துக்களுக்கு ஒரு புனிதத்தலமாகக் கருதப்படுகிறது.

மிகவும் பழமையான மரங்கள், சிலர் காலத்தின் மாறுதலால் விதமான அரிய வடிவங்களில் வளர்ந்திருப்பதை காணலாம். மரங்கள், குகைகள், அருவி சத்தம்— சேர்ந்து ஒரு வகையான புனிதமான சூழலை உருவாக்குகிறார்கள்,”

“மற்றும், இந்த இடத்தில் புண்ணியதானம் செய்யப்படும் போது, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய அவர்கள் உதவுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளதால், சுருளி அருவியின் அடிவார பகுதியில் புண்ணியதான நிகழ்வுகள் நிறைய நடக்கின்றன. அதுவும் இந்த இடத்தின் மிகவும் விசேஷமான ஒரு அம்சம்தான்,”ன்னு சூர்யா சிறு இடைவெளி விட, காற்றின் சத்தத்தோடு அந்த உணர்வை எல்லோருக்கும் அனுபவிக்க வைத்தான்.

ஹ்ருதயா, காவ்யா, கார்த்திக்—அனைத்து அமைதியாக அந்த புனிதத்தன்மை-ஐ உணர்ந்து, ஒரு தனிமையான மரியாதை-ஐ காட்டினர். கண்ணை மூடி, அருவியின் சத்தம், குகையின் அமைதியும், பழமையான மரங்களின் பிரசன்னம்-ஐ மனதில் அனுபவித்தனர்

சூர்யா கடைசியில் ஒரு சிரிப்பு சிரித்து சொன்னான், “இங்க வந்து பார்க்கும் போது, வரலாறு
இயற்கை
ஆன்மீகம் ஒரே நேரத்தில் அனுபவிக்கலாம். அது தான் சுருளி அருவியின் பெருமை.”


சூர்யா, கார்த்திக், ஹ்ருதயா, காவ்யா சாப்பிட்டு சற்று ஓய்வு பெற்றனர். ஆனாலும் அந்த ஓய்வும் நீண்டநேரம் நிலை நிறுத்தவில்லை.

சந்தோஷ், அனிருத் இருவரும் மீண்டும் விளையாட்டு மனதோடு வந்து, கையில் சின்னக்
கற்களை எறிந்து, “விளையாட்டு நேரம்!” என்று கூச்சலிட்டனர்.
 
அவர்களைப் பார்த்து கார்த்திக் சிரித்துக் கொண்டு, “அடடா… மீண்டும் தொடங்கியாச்சு போல... நானில்லாமையா " என நீரில் குதிக்க , சந்தோஷ், அனிருத் சேர்ந்து, கார்த்திக்-ஐ தூக்கி, ஆழமான தண்ணீரில் போட்டு விட்டனர்.

நீரில் மூழ்கி மேலே வந்து "யாஹூ" என்று கூச்சலிட்டான் .

ஹ்ருதயா அதைப் பார்த்து சிரித்துவிட்டு, காவ்யாவுடன் நீரில் குதித்து அருவி நீர் மேலே விழுமாறு நின்றாள்.

“ஹப்பா! இப்பதா செம்மையா இருக்கு .. அப்டியே பாகுபலில வர லிங்கம் நெனைஞ்சு மாதிரி உச்சி குளிர்ந்து போச்சு"

சூர்யா, விளையாட்டு விளையாட்டா இருந்தாலும் மீண்டும், சந்தோஷ், அனிருத், ஹ்ருதயா , காவ்யா மற்றும் கார்த்திக்-ஐ சேர்த்து தண்ணீரில் பாதுகாப்பாக, அனைவரையும் கவனித்து கொண்டான்.

ஆழமான தண்ணீரிலும், பரதமான அலைகளும், சுவாசம், உற்சாகமாய் அந்த தருணத்தை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றியது.

விளையாட்டு ஜோரில், ஹ்ரிதயா பாசி பதிந்த பாறையில் கால் வைத்து சறுக்கி, "அம்மா "அலறலுடன் தண்ணீரில் விழ , தண்ணீரின் வேக ஓட்டம் அவளை ஆழமான பகுதியுக்கு இழுத்து கொண்டு சென்றது.

ஆழ்மனதில் ஒலித்த அவள் பெயர் அவனையும் தாண்டி
“தயா… தயா…!”ன்னு கடைசியில் அவளை பார்க்கவே பாய்ந்து வெளிவந்தது

 
சுருளி அருவி பற்றி நிறைய தகவல் சொல்லி இருக்கீங்க.

எப்படியும் சூர்யா ஹ்ருதயாவை காப்பாற்றி விடுவான். தன் நேசத்தை சொல்வானா?🤩
 
சுருளி அருவி பற்றி நிறைய தகவல் சொல்லி இருக்கீங்க.

எப்படியும் சூர்யா ஹ்ருதயாவை காப்பாற்றி விடுவான். தன் நேசத்தை சொல்வானா?🤩
ஆமா மா...
 
Back
Top
Developed and maintained by – Akeshya