மழைத்துளி 13

சில மாதங்களுக்கு பிறகு…


ஹ்ருதயா சூர்யா வீட்டில் வந்திருந்த நாளிலிருந்து அந்த இல்லம் இன்னும் ஜீவசக்தி நிறைந்தது. வீட்டுக்குள்ள எல்லாரோடும் அவள் கலந்துபோய் விட்டாள். சூர்யாவின் தங்கை காவ்யாவும், தம்பி அனிருத்வும் அவளோட பெஸ்ட் கிரைம் பார்ட்னர் ஆகிட்டாங்க.... மூணு பேரும் சேர்ந்து பேசினால் அந்த வீட்டின் சுவர்களுக்கே வாய் இருந்தால் கதறும் அளவுக்கு பேச்சு சத்தம் இருக்கும்.

வேலை பக்கம் பார்த்தாலும் ஹ்ருதயா அங்கேயே தன் இடத்தை செதுக்கிக்கிட்டாள். ஃபேக்டரி ஒர்க்கர்ஸ் கிட்ட அவங்க வீட்டு பொண்ணா பழகினாள், கார்த்தி கூட பெவிகால்கே டஃப் குடுக்குற அளவுக்கு ஒரு அண்ணன் தங்கை பாண்ட். ( நியூ வெர்ஷன் ஆஃப் பாசமலர்)
ஆனா சூர்யா மட்டும் வேற மாதிரி அமைதியோடு இருந்தான்.

அவன் மனசில் எழுந்த காதல் குரலை யாரிடமும் சொல்லாமல், சின்ன சின்ன அக்கறைல, பார்வைல வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். ஹ்ருதயா புரிஞ்சாளா இல்லையா என்ற குழப்பம் இருந்தாலும், அந்த உணர்ச்சிகள் தினமும் அவனை ஆட்கொண்டிருந்தது.

அந்த நேரத்துலே வந்தது ஆகஸ்ட் 15,16,17 தேதி ஒரு நீண்ட விடுமுறை… மூன்று நாள்கள் கிடைத்திருக்கு. இதைப் நல்லா உபயோக படுத்தனும் என்று அனிருத்வும் காவ்யாவும் ஒரு ஜாலியான ட்ரிப் பிளான் பண்ணினார்கள்.

“இது மாதிரி வாய்ப்பு எப்போ வரும், மிஸ் பண்ணக்கூடாது!” – என்று இருவரும் முழு உற்சாகமா ஹ்ருதயாவையும் இழுத்து திட்டங்கள் தீட்ட ஆரம்பிச்சாங்க.

இன்று

மாலைநேரம்…

மூணு பேரும் மாடிக்யேறி ஓய்வா அமர்ந்திருந்தாங்க.

காவ்யா "ப்ரோ, இப்போ நமக்கு தொடர் விடுமுறை வருதுல எங்கயாவது ட்ரிப் போகலாம்னு நினைக்கறேன்"ன்னு ஆரம்பிச்சா.

அனிருத் உடனே "ஹா, ட்ரெக்கிங் போகலாமே! மலைப்பகுதி சூப்பரா இருக்கும்"னு குதித்தான்.

ஹ்ருதயா "முன்னாடினா நல்லா இருக்கும்…டீ எஸ்டேட் ,குளு குளு வானிலை"ன்னு செம்மையா இருக்கும்.

இடையில காவ்யா "அப்படின்னா தேக்கடி போலாம் , படகு சவாரி, நீர்வீழ்ச்சி, எல்லாமே இருக்கும்".

அந்த நேரத்துல சூர்யாவும் கார்த்திக்கும் வீட்டுக்குள் வந்தாங்க. சூர்யா அம்மாவிடம் கண்களால் ஹ்ருதயாவை தேடிக்கொண்டே, , "அம்மா, எங்க யாரையும் காணோம்… எல்லாரும் எங்க?"ன்னு கேட்க.

அம்மா சிரிச்சுகிட்ட"அத ஏன் கேக்குற, என்னமோ சீக்ரெட்டா பேசுறாங்க. மாடில போய் பாரு".

இருவரும் மேலே ஏறினாங்க. கார்த்திக் தட தடன்னு படிக்கட்டில் ஏறி,

" அநியாயம் என்ன விட்டுட்டு என்ன மீட்டிங் இங்க, எனக்கே தெரியாம? என்னையும் சேர்த்துக்கோங்க "ன்னு சிரிச்சான். அவனையும் இழுத்து போட்டு , மீட்டிங் இன்னும் ஜாலியா தொடர்ந்தது.

கார்த்திக் சிரிச்சு, "என்ன? இப்போ ட்ரிப் போறோமா... எங்க போறது சூர்யா முடிவு பண்ணட்டும்… அவனுக்கு தான் எப்போ எந்த இடம் போலாம்னு நல்லா தெரியும்"ன்னு சொல்லும்போது,

சூர்யா கையில் சூடான டீ கப் எடுத்து மாடிக்கு வந்தான். எல்லாருக்கும் கப் கொடுத்து சிரிச்சபடியே, "சரி… நம்ம பிளான் பண்ணலாம். யாருக்கு எங்க போலாம் எனி ஐடியா" எல்லாரும் அவங்க ஒரு இடம் சொல்றாங்க.

"ம்ம் குட். ஓகே நாம இப்படி பண்ணலாமா"

"எப்படி???"

"சுருளி அருவி, மேகமலை ஈஸ்வர் கோவில், மேகமலை ட்ரெக்கிங் போலாம் ஓகே வா"

காவ்யா அனிருத்தும் "சூப்பர் அண்ணா!"ன்னு ஒரே கோரஸ். ஹ்ருதயாவும் மனசுக்குள் அந்த திட்டத்தை ரசிச்சா.

கார்த்திக் "ஆமா… இந்த ட்ரிப் செம்மயா இருக்கும். நாம ட்ரிப் போயே எவ்ளோ வருஷம் ஆகிடுச்சு, காலேஜ் டைம்ல போனது"

காவ்யா சிரிச்சபடி, “அண்ணா… நீங்க சொல்லுங்க, பிளான் பண்ணிருக்கும் இடமெல்லாம் செஃப்- ஆ இருக்குமா? எது எதுக்கு ஜாக்கிரதையா இருக்கனும்?” .

சூர்யா ஒரு சிப் டீ, குடிசிட்டு சிரிச்சபடி “நம்ம இலக்கு மேகமலைனா… அதைச் சும்மா சாதாரண பயணமா எடுத்துக்கக்கூடாது.

பாதை கிட்டத்தட்ட 35 கிலோமீட்டர் மலை தொடர்ச்சாலை... சும்மா கார் போகும் சாலை இல்ல, செங்குத்தான திருப்பங்கள், கரடுமுரடான பகுதிகள் இருக்கும். அதனால பகல்ல மட்டும் தான் ஓட்ட முடியும். 6 மணிக்குள்ள வனச் சோதனைச் சாவடி வேற மூடிடும். அதுக்கப்புறம் செல்ல முடியாது.”

ஹ்ருதயா கவனமா கேட்டுக்கிட்டு, “அப்படின்னா சாப்பாட்டுக்கு என்ன பண்றது ?”.


கார்த்திக்" எவ்ளவோ இருக்கு கேக்க சோறு தான் முக்கியமா மேடம்"


" சோறு அதானே எல்லாம், என்ன சின்ன தம்பி"

“கண்டிப்பா அதுவும் முக்கியம் தான்,”ன்னுசூர்யா தொடர்ந்தான்.

“அங்க ஷாப் ரொம்ப கம்மி. நீங்க பசியோட இருக்காம இருக்க , முன்னாடியே ஸ்நாக்ஸ் பிஸ்கெட் தண்ணி பாட்டில், ஃபர்ஸ்ட் எயிட் கிட், இப்படி எல்லாம் எடுத்துக்கணும். நல்ல ட்ரெக்கிங் ஷூ , பூச்சி விரட்டி கண்டிப்பா தேவைப்படும். விலங்குகளோட நடமாட்டம் இருக்கும் நேரம் அதிகாலை, மாலையில தான்… அதனால அந்த நேரம் வெளியில சுத்தாம பாதுகாப்பா இருக்கனும். யானை, காட்டெருமை, சிறுத்தை மாதிரி விலங்குகள் அங்க அடிக்கடி சுற்றித் திரியும்"

கார்த்திக் உடனே இடைமறித்து, “அப்போ நம்ம காட்டில் உயிர்வாழ தேவையான மூட்டை முடிக்சுக்கள் கட்ட தயாராகனும் போல?”. எல்லாரும் சிரிச்சாங்க.

சூர்யா சிரிச்சபடியே, “கிட்டத்தட்ட அப்படிதான்… ஆனா தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கிட்டா ட்ரிப் ரொம்ப என்ஜாய் பண்ணலாம். மேகமலையோட உண்மையான அழகு அந்த மலைகள், தோட்டங்கள், அணைகள், நீர்வீழ்ச்சிகள், காட்சிகள்... அவை எல்லாம் ஆபத்தில்லாம அனுபவிக்கணும்.”

ஹ்ருதயா, கார்த்திக், காவ்யா எல்லாரும் ட்ரிப் போறது நெனச்சு பரபரப்புல இருந்த போது,

சூர்யா, இறுதி பயண திட்டம் உறுதி ஆனதும், உடனே சந்ததோஷுக்கு கால் 🤙 பண்ணினான்.

“ஹே சந்தோஷ்… எப்படி இருக்க?” என்று சிரித்து கேட்டான்.

சந்தோஷ் ஃபோன்ல குதூகலமாக, “அண்ணா! எப்டி இருக்கீங்க... நான் நல்லா இருக்கேன்… !”.

சூர்யா, “குட் டா.. அப்றோ ஒரு முக்கியமான விஷயம், நம்ம எல்லாரும் மேகமலைக்கு ட்ரிப் போலாம்னு இருக்கோம் .. நீயும் வரணும். நீ நைட்டு வீட்டுக்கு மூணு நாளைக்கு டிரஸ் எடுத்துட்டு வந்துரு… ஜீப் தயாரா இருக்குது".

சந்தோஷ் உற்சாகமாக, “ஹா அண்ணா! உங்க பிளான் சூப்பர்னா.. ஐயா செம ஹேப்பி நான் கண்டிப்பா வர்றேன்… !”

அழைப்பு முடிந்ததும், சூர்யா போனை-ஐ விட்டு, இவர்களை நோக்கி," சரி… சந்தோஷ் வரது உறுதி. இன்னும் நாலு மணி நேரத்தில் எல்லாரும் பேக்கிங் பண்ணா தான் அதிகாலைல கிளம்ப சரியா இருக்கும்.
 
இரவு சாப்பாடு முடிச்சுட்டு, நாலு பேரும் ஹால்லே கூடினாங்க. காவ்யா தான் வாயைத் திறந்தா, "அம்மா… அப்பா… நாங்க மூணு நாள் ட்ரிப் போகலாம்னு முடிவு பண்ணிருக்கோம். சுருளி அருவி, மேகமலை, மகாராஜா மெட்டு எல்லாம் பார்க்கணும்னு ப்ளான்.”

ஆமா பா, எல்லாமே நான் பாத்துக்கிறேன். பாதையில் கவனமா டிரைவ் பண்ணுவேன். தேவையான சாமான்கள் எல்லாம் எடுத்துக்கறோம். கவலைப்பட வேண்டாம்.”

அம்மா சிரிச்சபடி,
“சரி டா… ஆனா என்ன பண்ணாலும் அதிகாலை போய்ட்டு, சூரியன் மறையற முன்னாடி ரூம்க்கு திரும்பணும். மாலையில அங்க விலங்குகள் அதிகமா வரும். உங்க பாதுகாப்பு தான் முக்கியம்.”

அப்பா கூட ,
“சூர்யா சொல்றானா எனக்கு நிம்மதி தான். நீங்க போய் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க”.

அந்த அனுமதி கிடைத்தவுடன் காவ்யா, அனிருத் இருவரும் ஒரே சத்தமா “யேய்!”ன்னு ஹ்ருதய இழுதுகிட்டு ஓடி போய்ட்டாங்க பேக்கிங் பண்ண.
---
அடுத்த சில மணிநேரம் வீடே ரணகளம்:
காவ்யா டிராவல்பேக்ல ட்ரெஸ் ஒன்னொன்னா எடுத்து போட்டு பாத்து
“ட்ரிப்க்கு என்ன துணி போட்டுட்டு போலாம் ? ட்ரெக்கிங் தனியா ஆடை ,போட்டோ எடுக்கும் போது நல்லா தெரியனு…”ன்னு குழப்பதுல இருந்தா.

அனிருத் அங்கே வந்து அவ பண்றத பார்த்து “ரொம்ப துணிலாம் எடுத்து வைக்காதே லூசு… அங்க யானைய பார்த்தா நீ மட்டும் ஓடுவியா இல்ல இந்த பேக் தூக்கிட்டு ஓடிவியா கொஞ்சமா துணி பேக் பண்ணு இலகுவான ஆடையா இருந்தா இன்னும் பெட்டர்"ன்னு சிரிச்சான்.

காவ்யா சிறு குஷன் எடுத்து அவன் மேல் எறிந்து பழிப்பு காட்டி வேற டிரஸ் அடுக்க தொடங்கினாள்.

இதை கண்ட ஹ்ருதயாவோ “நீ இவ்ளோ நேரம் துணி செலக்ட் பண்ணா ட்ரிப் மிஸ் பண்ணிடுவன்னு சொன்னாள்.

கார்த்திக் மட்டும் ஒரு சின்ன பேக்ல இரண்டு சட்டை, ஒரு அரை கால்சட்டை வெச்சுட்டு ,“எனக்கு இவ்வளவு போதும்… வாழ்க்கைல எப்போமே சிம்பிளா இருக்கணும் கய்ஸ் !..

அதுக்கு காவ்யா சிரிச்சுக்கிட்டு,
“அதான் உங்க சிறப்பு … எங்கப் போனாலும் சிம்பிளா இருந்தாலும் அழகா தெரியுறிங்க”ன்னு சொல்லி பாராட்டினாள்.

அதை கேட்டதும் எல்லாரும் அவனை நோக்கி சிரிச்சாங்க. கார்த்திக் முகத்திலோ ஒரு சின்ன வெட்கம் தெரிஞ்சது.
அதை பார்த்த காவ்யா
" ஹே கார்த்தி அண்ணா வெட்க படுறாங்க " சொல்லி சிரிக்க..

" ஹே போங்கபா " அப்டின்னு பக்கத்தில் சூர்யா ரூம்க்கு ஓடிட்டான்.

சூர்யா மட்டும் அமைதியா அத்தியாவசிய தேவையான – டார்ச், மேப்ஸ், ஜீப் சாவி, ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில்கள்எல்லாம் அழகா தன்னோட டிராவல் பேக் லா அடுக்கிட்டு இருந்தான்.

கார்த்திக் பார்த்துட்டு அவனை கலாய்ச்சான்:
“மச்சி… உன்ன பாத்தா நம்ம ஸ்கூல் PT டீச்சர் ஞாபகம் தான் வருது. ட்ரிப்க்கு போறப்பாலம் இப்படி தான் பண்ணுவாரு".

சூர்யா அவன் சொன்னதை சின்ன தலைசப்போடு " , ஜீப்வோட ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் சரிபார்த்து, அப்றோ கார்த்தி, காலைல கூடுதல் டயரை செக் பண்ணிடு, வண்டில முழு டேங்க் பெட்ரோல் இருப்பதை செக் பண்ணிட்டு தேவனா டேங்க் புல் பண்ணிக்கலாம் "

இப்போ வா ஒரு சின்ன ரவுண்ட் போயிட்டு வரலாம். ஜீப் கண்டிஷன் தெரியும்.

ஜீப் சாவி கையில் எடுத்துக்கொண்ட கார்த்தி நீ கீழ வா மச்சி நா வண்டிய செட்டுல இருந்து வெளிய கொண்டு வரேன்
 
ஹிர்தயா அவளோட அறைக்குள் மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது.

ஃபோன்ல ராஜா சார் சாங் போட்டுட்டு ட்ரிப்க்கு தேவையானத பேக் பண்ண ஆரம்பிச்சா .

ஒரு காம்பேக்ட் டிராவல் பேக் லா கவனமாக இலகுவான காட்டன் குர்தா லேசான ஷால் நீட்டா மடிச்சு அடுக்கிக் கொண்டிருந்தாள்.

மேகமலையின் குளிர் நினைவுக்கு வந்தவுடன், மெல்ல சிரித்தபடி ஒரு ஷால் ஜாக்கெடையும் சேர்த்தாள். “அங்க இரவு குளிரில் நடுங்கக்கூடாது…” என்ற சிந்தனை அவள் முகத்தில் வெளிப்பட்டது.

கூடவே ஒரு நாவல், ஸ்கெட்ச் புக், பென்சில், தேவையான அழகு பொருட்கள் எல்லாம் அடுக்கிட்டு. “டிராவல்ல பாடல் கேக்க அவளோட ஐபாட் சார்ஜர்ல போட்டு, பவர்பேங் , சார்ஜர் , ஹெட்செட்யும் சேர்த்து பாக் பண்றாள்.

பின் தண்ணீர் பாட்டில்கள்,பிஸ்கட், பிரட், மற்றும் ஜாம், சிறு சிப்ஸ், பர்பி , ரோஸ்ட்டேட் வேர்க்கடலை… அப்புறம் யாருக்கும் தேவைப்பட்டால் பயன்படும் மாதிரி அவள் தன் பையில் ஒரு சிறிய முதலுதவி பெட்டியையும் வைத்திருந்தாள் - வலி தைலம், களிம்பு, பிளாஸ்டர், பேண்ட்-எய்ட், தெர்மோமீட்டர்.

“யாருக்காவது தேவைப்பட்டால் கஷ்டம் வரக்கூடாது… எல்லாரும் என்ஜாய் பண்ணணும்னா முன்னெச்சரிக்கையாக இருக்கிறது தப்பில்ல,” என்று தன்னோட மனசுல சொல்லி கொண்டே அவள் பையிலே பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்தாள்.

அந்த நேரம் காவ்யா உள்ளே வந்து பையைப் பார்த்ததும் சிரித்தபடி,
“ஹ்ருதயா அக்கா… நீ எப்போ டாக்டர் ஆனேன்னு எனக்கே தெரியல. உங்க பேக்யை பார்த்தா குட்டி கிளினிக் மாதிரி இருக்கு!” என்று கலாய்த்தாள்.

ஹ்ருதயா சின்ன வெட்கத்தோடு, “அது என்ஜாய் பண்ணணும்னா, கூடவே பாதுகாப்பா இருக்கணும் தானே , அதான்…” என்றாள்.

அந்தக் கணம் கதவு அருகில் நின்ற சூர்யா, அவள் பக்குவமா பண்ணும் ஒவ்வொரு செயலும் கவனித்து, மனசுக்குள் ஒரு பெருமையோடு சிரித்தான்.

அந்த சிரிப்பை அவளும் கண்டுகொண்டாள் . நொடிநேரம் கண்கள் சந்தித்ததும் இருவரும் வேகமா தங்கள் வேலைக்குள் மூழ்கிக் கொண்டார்கள்.

சூர்யா உள்ளே வந்து, அவள் பையிலே அடுக்கிக்கொண்டிருக்கும் பொருட்களை ஒருமுறை பார்த்தான்.

அங்க பக்கத்துல ஃப்ளாட் ஸ்லிப்பர் மேசை மீது இருந்ததை கவனிச்சவன்,
“ஹ்ருதயா… ஸ்லிப்பர் வேணாம். மேகமலைக்கு போகுறதால ஷு தான் போடணும். பாதை ஏற இருக்கும், அப்றோ உங்களுக்கு தான் கஷ்டமா இருக்கும் அதான் முன்னாடியே சொல்லுறேன்,”ன்னு சொன்னான்.

ஹ்ருதயா அவனை நோக்கி சிரிச்சபடி,
“சரி சூர்யா… நான் மறந்துட்டேன். கண்டிப்பா ஷூ எடுத்துக்குறேன்,”ன்னு சொன்னாள். அவனோட குரல்ல அவளுக்கான அக்கறையா அவ பார்த்தா

சூர்யா சின்ன சிரிப்போடு “அதுதான் நல்லது… சேப்டி முக்கியம்"ன்னு சொல்லி அவளை ஒரு நிமிஷம் கவனமா பார்த்துக்கிட்டு, பையில இருந்த ஷாலை நீட்டா மடிச்சு உதவி பண்ணினான்.
 
வீட்டுல எங்க பார்த்தாலும் சிரிப்பு, கலாட்டா, teasing – அந்த moodலேயே அவர்கள் tripக்கான bags எல்லாம் ரெடியா ஆயிடுச்சு.

-----

அடுத்த நாள் அதிகாலை, சூர்யா பின்பக்கஷெட்க்கு சென்றான். அங்கே அவனுக்கு பிடித்த வாகனமான 2024 மஹிந்திரா தார் - பளபளப்பான கருப்பு நிறத்தில், கரடுமுரடான மற்றும் சக்திவாய்ந்த தோரணையுடன், அங்கே நின்று கொண்டிருந்தது. இந்த ஜீப் சூர்யாவுக்கு அத்தனை நெருக்கம். அதைப் பார்த்தாலே அவனுக்கு ஒரு உற்சாகமும் கம்பீரமும் ஏற்படும்.

சூர்யா சாவியை காரில் போட்டு ஆன் செய்து , அந்தப் பழக்கமான உறுமல் சத்தத்தைக் கேட்டான், அவனது உற்சாகம் இரட்டிப்பாகியது. அவன் ஜீப்பை செட்டில் இருந்து முன் வளாகத்திற்குக் கொண்டு வந்து சாமான்களை அடுக்கி கட்டத் தொடங்கினான்.

பயணப் பை, மலையேற்றப் பை, முதலுதவி பெட்டி, தண்ணீர் பாட்டில்கள் என அனைத்தையும் உன்னிப்பாகச் சரிபார்த்து, அதைப் பாதுகாப்பாக வைத்தான்.

அதே நேரத்தில், கார்த்திக் அனிருத் சூர்யாவுக்கு உதவ, சாமான்களை கட்டி முடித்தான்.
சந்தோஷ் ஜீப்பின் கண்ணாடியை சுத்தம் செய்தான்.

ஹ்ருதயா அவ ஹண்ட்பாக் கையை பிடித்து, அதிலே போன், காசு எல்லாம் இருக்கானு செக் பண்ணிக்கிட்டா. அவளுக்கு விரைவான அணுகல் தேவைப்படும் போது கஷ்டம் வரக்கூடாது என்று நினைத்தாள்.
காவ்யா தன் ஸ்நாக்ஸ் பையை எடுத்து, அதில் தன் தொலைபேசியையும் ஸ்நாக்ஸ் வைத்து, "ஸ்நாக்ஸ் முக்கியம் பிகிலு
!"என்று சிரித்து, பையை கவனமாக வைத்து கொண்டாள்.​
 
ஜீப் பயணம் தொடங்கியது, கார்த்திக் முன் இருக்கையில் அமர, சூர்யா சாலை வரைபடத்தைப் பார்த்து ஒரு கணம் வழியை உறுதிப்படுத்தினான். ஹ்ருதயா, காவ்யா மற்றும் சந்தோஷ் ஆகியோர் பின் இருக்கையில் வசதியாக அமர்ந்தனர்.

அவன் தார் ஜீபின் இக்னிஷனை ஆன் செய்தான். எஞ்சினிலிருந்து வந்த அந்தப் பழக்கமான முணுமுணுப்பைக் கேட்ட சூர்யா, நுட்பமான பெருமையாலும் உற்சாகத்தாலும் நிறைந்தான் - கிட்டத்தட்ட சேணத்தில் அரேபிய குதிரையின் மீது பாய்ந்து செல்வது போன்ற சிலிர்ப்பு. ஜீப்பில் இருந்த அந்த சக்தியின் உள் கட்டுப்பாடு மனதின் ஓட்டத்தையும் அவன் எதிர்பார்த்த சாகசத்தையும் சமப்படுத்தியது.

-------

மலை உச்சிகளில் பச்சை பச்சையாகப் பரந்திருந்த டீ தோட்டங்களை வெள்ளை மிஸ்ட் போர்வை போல் மூடி வைத்திருந்தது. சின்ன ஓடைகள் சலசலத்து ஓடியதோடு, பறவைகள் கூட்டமாய் பறந்த காட்சி ஓவியமாய் விரிந்தது. அத்தனை இயற்கையையும் கிழித்து சத்தமிட்டு பாய்ந்தது சூர்யாவின் ஜீப் . ஸ்டீயரிங் வீலில் அவனது கை அநாயாசமாக சுழற்றி வந்தாலும், அவனது முகத்தில் ஒரு மென்புன்னகை மலர்ந்தது.

----------------

வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையின் வளைவுகள் வழியாக ஜீப் சீராக உருண்டு சென்றது. சக்கரங்களிலிருந்து சிறிய கற்கள் குதித்தன, மூடுபனியை வெட்டிச் செல்லும் ஜீப்பின் ஹெட்லைட்களின் வெளிச்சம் காட்சிக்கு மற்றொரு அழகைக் கொடுத்தது.

உள்ளே இருந்த நண்பர்கள் அனைவரும் சிரிப்பிலும், கிண்டலிலும், சிறு பேச்சுகளிலும் மூழ்கியிருந்ததால், பயணம் இன்னும் உயிர்ப்புடன் இருந்தது.

அந்த நேரத்தில், சூரியன் மெதுவாகத் தோன்றியது, மரக்கிளைகளில் இருந்த மூடுபனியின் வழியாக தங்க ஒளி மின்னியது. எல்லோரும் அழகைக் கண்டு வியந்தனர்.

முகத்தில் வீசும் குளிர்ந்த காற்றும், சிரிப்பும், மென்மையான பாடல்களும் அந்த அதிகாலை ஜீப் பயணத்தை ஒரு அற்புதமான அனுபவமாக்கின.

தொலைவில் சுருளி அருவியின் வெள்ளை நீர் பறக்கும் தோற்றம் தென்படத் தொடங்கியது. எல்லோருடைய கண்களிலும் துள்ளலான ஆர்வம், “இன்னும் கொஞ்சம் தான்… அருவி வந்துடுச்சு!” என்ற எதிர்பார்ப்பு தெரிந்தது.

அந்தக் காட்சியையெல்லாம் ரசித்துக்கொண்டிருந்த சூர்யா, ஒரு சின்ன புன்னகை சிந்தினான். ஒரு புதிய உணர்வு அவன் மனதை நிரப்பியது

- "எனக்குப் பிடித்த தார், என் நண்பர்கள், இந்த மலைக்காற்று... இவை அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது, வாழ்க்கை சரியான கலவையாகும்."

எல்லாவற்றையும் பின் தொடர்ந்து ஜீப் சுருளி அருவி நோக்கி சுழன்று சென்றது.
.........

நெடுந்தூரம் சுழன்ற காட்டுவழி பாதை கடந்து, ஜீப் ஒரு இறுதி வளைவைத் தாண்டியவுடன், சுருளி அருவி திடீரெனக் கண்முன்னே விரிந்தது. வெள்ளை திரை போல மலை உச்சியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்த அந்த அருவி, இடியோசை போல் முழங்கியபடி சுற்றியிருக்கும் காற்றையே அதிரச் செய்தது.

பறக்கும் நீர்த்துளிகள் முகத்தில் படும்போதெல்லாம் குளிர்ச்சி நரம்புகள் வரை ஓடின. நண்பர்கள் எல்லாரின் முகத்திலும் அதிசய சிரிப்பு மலர்ந்தது.

“டா… இதுதான் சுருளி அருவி!” என்று கார்த்தி ஆர்வத்தோடு சொன்னதும், மற்றவர்கள் குழந்தைகள் மாதிரி சிரித்துக்கொண்டு ஓடி அந்த நீர் பறக்கும் பாறைகளைக் கையால் தொட்டுப்பார்த்தனர்.

சுற்றிலும் பசுமை நிறைந்த மரங்களும், பாசி படிந்த பாறைகளும், ஈரப்பதம் வீசும் மண்ணும் அந்தக் காட்சிக்கு உயிர் ஊட்டின.

அந்த சூழலைப் பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, ஜீப்பின் பக்கத்தில் அமைதியாக நின்றுகொண்டு, முகத்தில் ஒரு திருப்தி புன்னகை சிந்தினான்.

------

அருவிக்கரையிலே ஜீப்பை நிறுத்தி, எல்லாரும் ஓடிச்சென்று அந்த நீர் பறக்கும் பாறைகளைக் கையால் தொட்டனர். பறக்கும் துளிகள் முகத்தையும் ஆடையையும் நனைக்க, சின்ன சின்ன குழந்தைகள் மாதிரி கத்திக்கொண்டு ஆடினார்கள்.

“டா… இங்கே வர்ற காற்றே வேற லெவல்!”ன்னு காத்திக் குரல் கொடுத்தான்.

“சரியா சொல்றே… சிட்டில இவ்வளவு இயற்கையான காற்று கிடைக்காது!”ன்னு சாந்தோஷ் சேர்த்தான்.

அருவியின் ஓசை, பறக்கும் நீர்த்துளிகள், சிரிப்பு சத்தங்கள் எல்லாம் ஒன்றாக கலந்து அந்த இடத்துக்கே ஒரு புது உயிர் கொடுத்தது.

சூர்யா அருகில் நின்று, அவர்களோட சந்தோஷத்தை ரசித்தான்.

சிறிது தூரத்தில் இருந்த காவ்யா, தன் கேமராவை எடுத்து அனைவரையும் படம் பிடிக்க ஆரம்பித்தாள்.

“ஹேய்... எல்லாரும் போஸ் கொடுங்க!

" சீஸ்" என எல்லாரும் கத்திக்கொண்டு சிரித்தனர்.

சிரிப்பு, நீர் சத்தம், மலைக் காற்று – மூன்றும் சேர்ந்து அந்த சுருளி அருவி தருணத்தை கேமராவில் அழகாய் மலரும் நினைவாய் பதித்துவிட்டது.

............

இயற்கை தாயின்
மடியில் பிறந்து இப்படி
வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய்
இருந்து பறக்க வேண்டும்
பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து.....
 
Back
Top
Developed and maintained by – Akeshya