மட்டன் நோன்பு கஞ்சி

Saranya Hema

Administrator
Staff member
மட்டன் நோன்பு கஞ்சி


வெரி சிம்பிள்

ஒரு பல்லாரி வெங்காயம்
மூணு பச்சை மிளகாய்
ஒரு தக்காளி
பத்து பல் பூண்டு
வெந்தையம் ஒரு டேபில் ஸ்பூன்
ஒரு குட்டி கேரட்
பாசுமதி அரிசி ஒரு கப்
கால் கப் கடலை பருப்பு
தேங்காய் பால் ஒரு கப்
புதினா, மல்லி இலை ஒரு கைப்பிடி
உப்பு தேவைக்கு
தாளிக்க
பட்டை, கிராம்பு, அண்ணாசிப்பூ, ஏலக்காய்,
அரிசி,பருப்பு ரெண்டையும் 20 நிமிஷம் ஊற வைக்கனும்.
மட்டனை கழுவிட்டு கொத்துக்கறி மாதிரி மிக்ஸில போட்டு சுத்தி எடுத்துக்கனும்.
குக்கர்ல எண்ணெய் ஊத்தி தாளிப்புக்கு குடுத்ததை போட்டு வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, பூண்டு, வெந்தயம், பூண்டு, மட்டன் எல்லாம் சேர்த்து கண்ணாடி பதத்துக்கு வதக்கி கேரட்டும் சேர்த்து கிளறி உப்பு போடனும்.
புதினா மல்லி இலையும் சேர்த்து கிளறி அடுத்து அரிசி பருப்பை சேர்த்து ஒரு கப் அரிசிக்கு அதே கப்ல எட்டு கப் தண்ணி விட்டு 5 விசில் விட்டு ஆவி போக திறந்ததும் தேங்காய் பாலை சேர்த்து 5 நிமிஷம் கொதிக்கவிட்டு
இறக்கினா கமகம கஞ்சி ரெடி.
மட்டன் சேர்க்காம இதே மெத்தட்ல வெஜ்ல செய்யலாம்.
பாசுமதிக்கு பதில் பச்சரிசி போட்டும் செய்யலாம்.
கடலைப்பருப்புக்கு பதில் பாசி பருப்பு, வெள்ளை சுண்டல் சேர்த்தும் செய்யலாம்
உடம்புக்கும் நல்லது. பசிக்காதவங்களுக்கு நல்ல பசி எடுக்கும்ன்னு சொல்லுவாங்க.
ஆனா நான் ருசிக்காக செய்வேன்
செஞ்சு பாருங்க அன்பூக்களே

1747722540484.webp
 
Back
Top
Developed and maintained by – Akeshya