நெய் மைசூர்பாக்

Saranya Hema

Administrator
Staff member
வந்துட்டேன் ஒரு ஸ்வீட்டோட

நெய் மைசூர்பாக்

இதை செஞ்சீங்கன்னா அடிக்கடி செய்வீங்க. சிம்பிள் & ஈஸி தான் இதுவும்.
கடைல வாங்கறதை விட்டுடலாம்

நான் இதுக்கு எடுத்துக்கிட்ட அளவு 125 ml மாவு மட்டுமே.

நீங்க ஒரு கப் அளவை வச்சு அதையே சுகருக்கும், நெய்க்கும், தண்ணிக்கும் அளவு வச்சுக்களாம்.

கடலை மாவு - ஒரு கப் (125 ml)
சுகர் - அதே கப்ல முக்கால் கப்
நெய் - அதே கப்ல 1 கப்
தண்ணி - அதே கப்ல கால் கப்

முதல்லை கடலை மாவை கடாய்ல சிம்ல வச்சு வறுக்கனும். தீஞ்சிறவோ, பிடுச்சுடவோ கூடாது. கிளறிவிட்டுட்டே இருக்கனும்.
நல்லா வாசனை வரும். எடுத்து சலிச்சு வச்சுட்டு அதை அளந்து வச்ச நெய்ல பாதி எடுத்து மிக்ஸ் பண்ணி கட்டி இல்லாம கரைச்சு வைக்கனும்.

அதே கடாய்ல சுகரை போட்டு தண்ணிய ஊத்தி ஒரு கம்பி பதம் வரவும் அதுல நெய்ல கரைச்சு வச்ச மாவை மிக்ஸ் பண்ணி கிளறிவிடனும்.

மிச்சம் இருக்கிற நெய்யை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்த கிளறி விட்டு இறக்கி நெய் தடவின பாத்திரத்துல மாத்தி ஆறவும் பீஸ் போட்டுடனும்.

சாஃப்ட்டா டேஸ்ட்டா ஒரு சூப்பர் ஸ்வீட்

செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க.
1747811903782.webp1747811979160.webp
 
Back
Top
Developed and maintained by – Akeshya