நீரிழிவு

amirthababu

Moderator
Staff member
நீரிழிவு நோய் உடைய தமிழர்கள்
ஸ்நேக்ஸாக எதை உண்கிறார்கள் என்று ஒரு கருத்து கணிப்பு நடத்தினால்
பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஒரு குறிப்பிட்ட ப்ராண்டு பிஸ்கெட் இருக்கும் .

நான் அந்த பிராண்டு பிஸ்கட்டைக் குறை கூறவில்லை.
மாறாக அதை நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்று நம்பி
தேனீரில் நனைத்து உண்பதைத் தான் தவறென்கிறேன்.

ஆம்..

பெரும்பான்மை நீரிழிவு உடையோர்
காலை மற்றும் மாலை இருவேளை
டீ அருந்தும் போதும்
இரண்டு முதல் நான்கு பிஸ்கட்டுகளை உண்கிறார்கள்.

ஆம்..
டீ/ காபியில் சீனி போடாதவர்கள் கூட இந்த பிஸ்கட்டை முக்கி சாப்பிடுகிறார்கள்.

"நான் இனிப்பு போடாம டீ குடிப்பேன் என்று கூறிக் கொள்ளும் மக்கள் கூட
"ஆனா ரெண்டு பிஸ்கெட் முக்கி சாப்பிடுவேன்" என்பார்கள்.

மக்களே, இந்த பிஸ்கட்ட மட்டுமல்ல அனைத்து பிஸ்கட்டுகளிலும் சீனி சோர்க்கப்படுகிறது என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நீரிழிவு என்று கண்டறியப்பட்டுவிட்டால் தயவு தாட்சண்யம் ஏதுமின்றி

சீனி
நாட்டு சர்க்கரை
வெல்லம்
கருப்பட்டி
தேன்
சுகர் ஃப்ரீ
இனிப்பு சுவை கொண்ட பழங்கள்
அனைத்தையும் நிறுத்தி விடுவது
உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் நம் ஊருக்கும் நாட்டுக்கும் நல்லது.

என்னது பழங்களையுமா?
என்று கேட்பார் நம்மில் அநேகமுண்டு இங்கே...

சுகர் நோய் வருவதற்கு முன்பு
ஆப்பிள் - மாதுளை போன்ற இனிப்பு சுவை கொண்ட பழங்களை அனுதினம் சாப்பிடாதவர்கள்
கூட

சுகர் என்று கண்டறியப்பட்ட பின்
சரி டாக்டருங்க
வெள்ள சர்க்கரை வேணாங்குறீங்க

நான் நாட்டு சர்க்கரை போட்டுக்கவா? என்று கேட்கிறார்கள்

ஏங்க.. நாட்டு சர்க்கரை மட்டும் எதுல இருந்துங்க வருது . அதுவும் கரும்புல இருந்து தானங்க வருது. அது வேணாமுங்க என்று கூறினால்

அப்ப கருப்பட்டிக்கு தாவிக்கிறேன் என்பார்கள்

கருப்பட்டியிலும் சுக்ரோஸ் இருக்குங்க என்றால்

அப்ப இயற்கையான தேன் நல்லது தான என்பார்கள்

ஐயோ.. தேன் இயற்கையானது தான். மருந்து மாதிரி தான். ஆனா அதுலயும் சுக்ரோஸ் இருக்குங்க. அதுவும் உள்ள போனா க்ளூகோஸை அதிகரிக்கும். வேணாமுங்க.என்றால்

அப்ப தினமும் ஒரு வாழைப்பழம்
அப்பப்போ அல்போன்சா / பங்கனபள்ளி/ மல்கோவா
கொஞ்சமே கொஞ்சம் ஆப்பிள்
தண்ணிப்பழம்
சக்கப்பழம் .. சேட்டா பாஷையில் பலாவைக் கூறினேன்...
இதையெல்லாம் சாப்பிட்டுக் கொள்கிறேனே ப்ளீஸ் என்று கேட்கிறீர்கள்

என்னைப் பொருத்தவரை
நீரிழிவு - உடல் பருமன் - இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் - பிசிஓடி இருக்கும் மக்களுக்கு இனிப்பு சுவை கொண்ட பழங்களைத் தவிர்ப்பது அதை உண்பதை விட "நன்று" என்பதில் உடன்படுகிறேன்.
இதில் சக நண்பர்கள் என்னுடன் உடன்படாமல் போகலாம்.

மேற்கூறிய அனைத்திலும்
இனிப்பு என்ற சுவை இடம்பெற்றிருப்பதைக் கவனிக்கலாம்.

இனிப்பு எனும் சுவைக்கும்
சுக்ரோஸ் - சுகர் தரும் போதைக்கும் நமது மூளை அடிமை.

அதனால் தான்
ஒன்று மாற்றி ஒன்றுக்கு நமது மூளை தாவுகிறது.

பழங்கள் அனைத்தையும் இனிப்பற்றதாக ஆக்கி ஆனால் அதில் உடலுக்குத் தேவையான சத்துகள் மிக அதிகமாக்கி விற்றால் கூட பழங்கள் மிகக்குறைவாகவே நுகரப்படும்.

பழங்களை மக்கள் நுகர்வது அதன் சத்துக்களும் மட்டுமன்று
அவற்றின் இனிப்பு சுவைக்காக தான் என்பதை உணர வேண்டும்.

உங்களுக்கு நல்ல ஸ்நாக்ஸ் கூறுகிறேன் கேளுங்கள்.

முழுக்காயும் இல்லாத
முழுப்பழமும் இல்லாத கொய்யா காய் 🍈( எகனாமிக் ) கனி அல்ல.. காய்.. கவனம்...

பெர்ரி வகைகள்
ஸ்ட்ராபெர்ரி ( காஸ்ட்லி பழம்)

அவகாடோ ( காஸ்ட்லி பழம் )

வெள்ளரிக்காய் 🥒

தேங்காய் துண்டுகள் (100 கிராம் ) 🌴( எகனாமிக்)

முட்டை (2) ஆம்லெட் அல்லது பொடிமாஸ் 🥚🥚( ரொம்ப எகனாமிக்)

50 கிராம் அவித்த நிலக்கடலை / சுண்டல் ( எகானமிக்)

கைப்பிடி அளவு பாதாம் ( காஸ்ட்லி)

கொஞ்சம் காய்கறிகள் போட்டு சூப் 🍆🥒
கூட உப்பிட்ட லெமன் ஜூஸ்🍋 ( எகனாமிக்)

நான் கூறிய பொருட்களில் மாவுச்சத்து மிகவும் குறைவு, இருந்தாலும் உடலால் எளிதாக கிரகிக்கப்படும் "நல்ல கார்ப்" இருக்கிறது.

ஆகவே மேற்சொன்ன ஸ்நேக்ஸ்களை உண்ணலாம்.

சர்க்கரை அளவுகள் பெரிதாக ஏறாது
உடலுக்கு நல்ல சத்துகளும் கிடைக்கும்

முயற்சி செய்யலாம் தானே???

நீரிழிவு இல்லாதவர்களும் இந்த ஸ்நாக்ஸ்களை உட்கொள்ளலாம்.
 
Thank you sister for the information.

ஆனால் சுகர் இல்லாவிட்டாலும், ஒரு நாளைக்கு 3 தரம், சூடாக coffee/ tea (with sugar) கேட்கிறது. என்னோட parents யாருக்கும் sugar இல்லைங்கிறதால நான் 3 times இத தான் குடிக்கிறேன்.
என்னால நிப்பாட்ட முடியல. அப்படியே addict ஆகி விட்டேன். என்ன செய்ய??🤔
 
Back
Top
Developed and maintained by – Akeshya