prithi
Writer
அன்று காலை 7 மணி அளவில் அந்த கேட்டட் கம்யூனிட்டி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
அனைத்து டூப்ளக்ஸ் வீடுகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும், "கொஞ்சம் லேட்டா போனா டிராஃபிக்ல மாட்டிக்குவோமா" என்று வேலைக்குச் செல்லும் இளைஞர்களும் அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தனர்.
அப்படி இருக்கையில், ஒரு வீட்டில் மட்டும் 'ஹோம் தியேட்டரில்' அனிருத்தின் இசையில், 'கூலி' படத்தில் வரும் "மாப்ஸ்டா" பாடலின் சவுண்ட் பட்டை கிளப்பியது. அந்த வீட்டு மூத்த பெண்மணி, மிஸஸ் அமிர்தா மாதவ், சிட் அவுட்டில் சூடான, சுவையான தன் பாசமிகு மருமகள் ஈஷா போட்ட ஃபில்டர் காபியைச் சுவைத்துக்கொண்டிருந்தார்.
திடீரென கேட்ட சத்தத்தில் காபி கப்பைத் தவறவிட்டார்.
அவர் காலுக்கு அருகே படுத்து இருந்த அரிய வகை "ஜென்டில் ஜெயன்ட் " என அழைக்கபடும் 'சயன்டு பெர்னார்டு' இன நாயும் பதறிஅடித்து எழுந்து வீட்டை பார்த்து குறைத்தது.
"102வது கப்பு" என அவரது மகன் மிஸ்டர் திரிலோக் மாதவ் பேப்பர் படித்துக்கொண்டே சிரிக்க, அவரை வெட்டவா, குத்தவாவென பார்த்தார் அமிர்தா.
"இன்னிக்கும் உடைச்சிட்டீங்களா, உங்களுக்கு வேற வேலையே இல்லையா?" என்று 'மனதில் கேட்பதாக நினைத்து வெளியே கேட்கிறாளோ' என மருமகளை மலங்க மலங்க முழித்தார் அமிர்தா.
"என்ன பாக்குறீங்க? உங்களைத்தான் கேட்கிறேன்" என ஈஷா கேட்க, "இல்ல, நீ மனசுல நினைச்சு வெளியே பேசலையா?" என அமிர்தா கேட்கிடார்.
"நான் என்னைக்கு மனசுல நினைச்சிருக்கேன்? நான் எப்போதுமே 'ஸ்ட்ரெயிட் ஃபார்வர்டு'தான்"..."பேச்சை மாத்தாம சொல்லுங்க" என ஈஷா கேட்க, "அது, உன் மகள் வெச்ச அலாறலம் சத்தத்துல பயந்து, த...த...தவறி" (அலாரம் சத்தமா? ஹோம் தியேட்டர்ல வெச்சிருக்கான்னு நீங்க நினைக்கிறது எனக்குக் கேட்குது ஃபிரெண்ட்ஸ்) என அமிர்தா பேசிக்கொண்டிருக்க, ஈஷா முறைத்தார் .
"ம்ம்ம்... எப்படி எப்படி? 'என் பேத்திய அவ இஷ்டத்துக்கு விடு ஈஷா' அப்படின்னு சொல்லும்போது உங்க பேத்தி... இப்போ என் மகளா?"... "இந்த ஐடியா நல்லா இருக்கே" என ஈஷா சண்டைக்கு வர, சரியாக கேட்டைத் தட்டினர் அக்கம் பக்கத்தினர்.
"போச்சு, இன்னிக்கும் பஞ்சாயத்தா?" என ஈஷா அமிர்தாவை முறைத்தார்.
"என்னங்க, உங்ககூட டெய்லி இதே வழக்கமா போச்சு. நாங்க அசோசியேஷன்ல கம்ப்ளெய்ன்ட் பண்றோம் பாருங்க" என பக்கத்து வீட்டுக்காரர் கோபால் கத்த, பெண்கள் வாய் திறக்கும்முன் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தார் ஜாக்கிங் சென்ற மிஸ்டர் மாதவ், அந்த கேட்டட் கம்யூனிட்டியின் நிறுவனர் மற்றும் அசோசியேஷன் தலைவர்.
அவர் உள்ளே நுழைந்ததும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து "என்ன ப்ராப்ளம்?" என கேட்டார்.
கோபால் பேச வாய் திறப்பதற்கு முன் ...தாத்ததததா! என கேட்ட சத்ததில் அணைவரும் அக்குரளுக்கு உரிமையானவளை திரும்பி பாரத்தனர்.