சைலபுத்ரி எனும் மலைமகளை முதல் நாள் தியானிக்கும் போது கணவனை மீறிய தாட்சாயினி, தியானத்தில் பூஜையில் தன் துணையினை கண்டடைந்த பார்வதி, ராணியாக ஆண்டாலும் உரியவனை கண்டதும் இறைவிருப்பபட வாழ்வினை தொடங்குதல் வேண்டும் என்பதை சொல்வது
ஆம், மலைபோல் நின்று நம்பியவரை காப்பவள் சைலபுத்ரி, அவள் எல்லோர் வாழ்வையும் தாங்கி காப்பாள், அதனாலே அவள் மலைமகள் என்றானாள்
மலைதான் இந்த உலகின் அமைப்பில் முக்கியமானது, மலைதான் ஆறுகளை தரும், ஆறுகள்தான் உலகை வாழவைக்கும்
மலைதான் தன்னில் பொழியும் மலையினை ஒரு சொட்டு தனக்காக வைக்காமல் நிலத்துக்கு அனுப்பும், மழையில்லா காலங்களில் பனியினை உருக்கி உயிர்வாழ அனுப்பும்
மலைதான் காட்டுவளம், உயிர்வளம் என எல்லாமும் தரும், தேவதைகள் அங்கிருந்துதான் அருள்பாலிக்கும், நல்ல காற்றும் நல்ல நீரும் அங்கிருந்துதான் வரும்
மலைதான் ஒரு நாட்டுக்கு முதல் வளம், மலை இருந்தால் எல்லாமும் எல்லா செல்வமும் வரும், மலைதான் பெரிய காவல்
அப்படி ஹிமாலயம் எனும் மலை அமையபெற்றதாலே பாரதம் வற்றா நதிகளை பெற்று, பெரும் அரணையும் வடக்கே பெற்றது
அன்னை மலைமகள் என்பது மலைபோல் நம்மை வாழவைப்பவள், எல்லா ஆபத்தையும் தடுத்து காத்து எல்லா வளமும் தந்து வாழவைப்பவள் என பொருளாகின்றது
மலை நிலத்துக்கு மேல் மட்டும் இருப்பதல்ல மணலுக்கு அடியில் இருப்பதும் பாறை எனும் மலையே அதுதான் இந்த உலகை இந்த நிலத்தை தாங்குகின்றது
அந்த உறுதியான படிமானத்தில்தான் உயிர்கள் வாழ்கின்றன மானுடனும் வாழ்கின்றான், மலைதான் உயிர்களை ஆதாரமாக பாறை என தாங்குகின்றது, மலைதான் பூமிக்கு மேல் மனிதனை வாழவும் வைக்கின்றது
இப்படி அன்னை மலைபோல் நின்று தாயாக வாழவைக்கின்றாள், அவளை இந்நாளில் தொழவேண்டும் என இந்நாளை சொன்னார்கள்
இந்த தத்துவம் இன்னும் வரும்
உடலை ஒன்பதாக பிரித்தால் அங்கே எலும்பு என்பது முக்கியமானது, மற்றவை தோல், மாமிசம், மஞ்ஞை, சுக்கிலம், ரோமம், கொழுப்பு, ரத்தம், நிணநீர் என வரும்
இந்த ஒன்பது பொருளும் சேர்ந்ததுதான் உடல்
அன்னை மலைமகள் என்பது நிலத்துக்கு மலை எனும் பாறை எப்படியோ அப்படி உடலுக்கு எலும்பு நின்று உருதருகின்றாள், வாழ்வின் ஆதாரமாக நிற்கின்றாள்
அவள் எப்படியான பலத்தை தருவாள் என்பதுதான் இங்கே காணவேண்டியது, அவளின் தாத்பரியமே அதில்தான் அடங்கியுள்ளது
அன்னை சிவனின் தோளில் இருந்து வந்தவள் என்பது அவள் எலும்பின் அதிபதி எலும்பு தத்துவத்தை கொண்டவள் என்பதை சொல்கின்றது
உடல்பாகத்தில் தோள் எலும்புதான் வலுவானது, சுமைகளை தாங்க கூடியது இன்னும் பலமும் வலிமையும் அதிகம் கொன்டது
அதனாலே அவள் தோளில் இருந்து வந்தாள் என்பது அவள் வலிமையானவள் சக்தி கொண்டவள் எதையும் தாங்கும் எதையும் எதிர்கொள்ளும் வலிமையினை தருவாள் என்கின்றது
ஆம், அவள் எலும்பின் அதிபதி
இந்த உலகில் எலலமே ஒவ்வொரு வடிவத்தை கொண்டிருக்கின்றன, வடிவம் இல்லாமல் படைப்பு இல்லை. பிரபஞ்ச கோள்கள் முதல் பூலோக மண்புழு வரை எல்லாமே ஒரு வடிவம் கொண்டவை
மானிட உடலுக்கும் வடிவம் உண்டு அந்த வடிவினை கொடுப்பது எலும்பு, எலும்பு இன்றி உடல் வடிவமில்லை இயங்க வழியில்லை
ஆம், இந்த வடிவத்தின் ஆதாரமாய் நிற்பவள்தான் இந்த அன்னை. ஒவ்வொரு படைப்புக்கும் மிக சரியான வடிவத்தை அவள் வழங்குகி இயக்கம் சரிவர நடக்க அவள் அடிநாதமாய் இருக்கின்றாள்
வானில் சுழலும் கோள்களுக்கு உருண்டை வடிவம், மலைகக்கு கூம்பு வடிவம் நதிக்கு திரவ வடிவம் மேகத்துக்க்கு புகைவடிவம், கடலுக்கு அலை வடிவம் என கொடுத்த அவள் ஒவ்வொரு உயிருக்கும் எது அதன் இயக்க வடிவமோ அதை கொடுக்கின்றாள்
மரத்துக்கு, செடிக்கு, மலருக்கு, ஊர்வன, பறப்பன, நடப்பன நீந்துவன என எல்லாவற்றுக்கும் எது ஏற்ற வடிவமோ அதை அருள்கின்றாள்
ஒவ்வொரு படைப்பும் எப்படி இயங்க வேண்டுமோ அந்த ஞானம் அவளாலே வடிவமைக்கபடுகின்றது
சரிவுகளை கொண்ட மலை, பள்ளத்தில் ஓடும் நதி, கூர்மூக்கும் இறகும் வாலும் கொண்ட பறவைகள், தங்கள் கடமையினை க்ர்மாவினை செய்யும்படி உடல் கொண்ட விலங்குகள் என எல்லாமும் பார்த்து பார்த்து வடிவமைக்கின்றாள்
விதைகள் அதன் வடிவம் முதல் அதன் எல்லா நுட்பமும் அவளாலே வடிவமைக்கபடுகின்றன, எல்லா படைப்பின் மூல வடிவமும அவளாலே உருவாகின்றன
அப்படிபட்டவளே மானுடருக்கும் எலும்பாய் வடிவங்களை கொடுக்கின்றாள், எலும்புதான் மானுடனுக்கு வடிவம் கொடுக்கின்றது அதனால்தான் மானுட உடல் இயங்குகின்றது
எலும்பும் வடிவமும் வெறும் இயக்கம் மட்டுமல்ல, அதுதான் பலம் அதுதான் தாங்கும் சக்தி அதுதான் பலமாக உழைக்க வைக்கும் சக்தி
எதையும் தாங்குவதும் உழைக்க வைப்பதுமான சக்தியினை எலும்புதான் கொடுக்கும் எலும்பு இன்றி மானிடர் இல்லை
முதுகெலும்பாக நிற்போம், தோள் கொடுப்போம், உறுதியாக நிற்போம் எனப்தெலலம் எலும்பின்றி எந்த் இயக்கமும் இல்லை தாக்கமும் இல்லை என்பதை சொல்வது
அன்னை அப்படி எலும்புபோல் மானுடருக்கு பலம் தருவாள், வடிவம் தருவாள், உழைக்கும் பலத்தை எதையும் தாங்கும் சக்தியினை தருவாள் என்பது அவள் வழிபாட்டின் தாத்பரியம்
சிவனுக்கு "கங்காள மூர்த்தி" என ஒரு பெயர் உண்டு, அதாவது ஒரு முதுகெலும்பினை கையில் வைத்திருப்பவர் என் பொருள்
அந்த சிவனின் சக்திமிக்க எலும்பாக இருப்பவள் அன்னை என்பதே அதன் தத்துவம், சிவனின் ஆதாரம் அவள்தான் என்பதே அந்த கங்காள முர்த்தி கோலத்தின் தாத்பரியம்
எலும்புதான் மிக முக்கிய விஷயங்களை காப்பதும் இயக்குவதுமானது, உடலில் இதயம் மூளை என முக்கிய பாகங்கள் எலும்புக்கு உள்ளேதான் உன்டு
மானுட உடலில் 206 எலும்புகள் இப்படி பலவகை பணிகளை செய்கின்றன, அவைதான் இரத்தம் உருவாக காரணமான மஞ்சையினை உருவாக்கி காக்கின்றன
ததிசி முனிவர் முதுலெலும்பை ஆயுதமாக விட்டு சென்றார் என்பதும் ,சகுனி தன் முன்னோர்களின் எலும்பை ஆயுதமாக கொண்டிருந்தான் என்பதும் சக்தியினை வழி வழி வந்த பலத்தினை சொல்வது
எலும்பின் இன்னொரு வடிவம்தான் சங்கு, இதனாலேதான் சிவன் கங்காளமுர்த்தி என எலும்போடு இருப்பது போல் விஷ்னு பகவான் சங்கோடு இருக்கின்றார்
எப்படி மானுடன் பிறக்கும் போது எலும்பும் உருவாகி அவன் இறந்தபின்பு அது எஞ்சுகின்றதோ, அப்படி சங்கு பூச்சு உருவாகி அது வளர்ந்து அழிந்தபின்னும் சங்கு அழிவதில்லை
சங்குதான் அந்த உயிருக்கு வடிவம், அந்த உயிருக்கு காவல், அதன் ஆதாரம் எல்லாம். அப்படி மானிட உயிர்க்கு பெருமாளே காவல் அவரே ஆதாரம் என சொல்லத்தான் சங்கை அவர் கையில் கொடுத்தார்கள்
கடலில் சங்கு கடைசியில் எஞ்சுவது போல் சம்சார சாகரத்தில் எலும்பு மிஞ்சும் என்பதை காட்டவே சங்கு இங்கு பகவான் கையின் அடையாளமாயிற்று
அப்படியா மகா சிறப்பானது எலும்பு, அதன் அதிபதி தேவி மகேஸ்வரி, அதனாலே வெண்மை நிறமான எலும்பினை அவளுக்கு கொடுத்தார்கள்
எலும்பு என்றால் உறுதி, பலம். அன்னை எலல உறுதியும் பலமும் தருவாள் எதையும் தாங்கும் சக்தி தருவாள் என்பதற்காக அவளுக்கு வாகனமாக நந்தியினை வைத்தார்கள்
நந்தி பலமானது, கடுமையாக உழைக்க கூடியது. அன்னையினை வழிபட்டால் உழைக்கும் சக்தி எந்த பெரும் சுமையினையும் தாங்கி செல்லும் சக்தி கிடைக்கும் என்பதை சொன்னார்கள்
ஆம் , அன்னை பார்வதியின் வழிபாட்டில் ஆயிரம் தத்துவங்கள் உண்டு, லவுகீகமாகவும் சூட்சுமமாகவும் நிறைய உண்டு
லவுகீகமாக அன்னையினை வழிபட வழிபட எலும்பு சம்பந்தமான சிக்கல்கள் நோய்கள் லவுகீக வாழ்வில் தீரும், அவளுக்கான வழிபாட்டை சரியாக செய்தால் எலும்பு நோய்கள் தீரும்
எலும்பு சம்பந்தமான நோய்களே தலைமுதல் கால்விரல் வரை ஏதோ ஒரு உருவில் வந்து மானிடரை முடக்கும், அவளை வேண்ட வேண்ட அவள் எலும்பு நோய்களை தீர்த்து முழு சக்தி தருவாள்
எந்த பணி, எந்த தொழில் ,எந்த கலையாக இருந்தாலும் அதன் அடிப்படை வடிவம் சரியாக வர அவள் முழு அருள் செய்வாள், அதனால் தொட்டது எல்லாம் அவள் அருளால் வாய்க்கும்
உழைக்கும் முழு பலத்தை எருதுபோல் உழைக்கும் பெரும் பலத்தை, களைப்பில்லாமல் சளைப்பில்லாமல் உழைக்கும் பெரும் பலத்தை அவள் கொடுப்பாள்
பெண்கள் அவளை வழிபட சொல்ல காரணம் நிறைய உண்டு, இந்துமதம் அதை சரியாக செய்தது
பெண்கள்தான் ஒரு குடும்பத்தின் வடிவம், அவர்களை கொண்டே ஒரு குடும்பம் வடிவம் பெறும், பெண்கள் சரியில்லா குடும்பம் நல்ல வடிவம் நல்ல கோலம் பெறா, அது அவமான கோலமாகிவிடும்
குடும்பம் சரியாக அமைய, நல்ல வடிவில் அமைய பெண்கள் அவளை வழிபடுதல் அவசியம்
குடும்ப சுமையினை தாங்கி, குடும்பத்தின் முக்கிய ஆதாரங்களை காத்து எலும்பு செய்யும் அனைத்து காரியங்களையும் குடும்பத்துக்கு செய்பவர்கள் பெண்கள், அதனால் அந்த அன்னையின் அருளில் எலலா பலமும் அவர்கள் பெறுவது அவசியம்
அன்னையினை வழிபட்டால் பெண்களுக்கு பொறுப்பும், சுமைதாங்கும் சக்தியும், குலம் தளைக்க உழைக்கும் சக்தியும் அதிகரிக்கும், அவள் அருளால் அவளை வணங்கும் குலம் வலிமைபெறும்
இதை பெற்றுகொள்ளத்தான் சைலபுத்ரி எனும் மலைமகளை வணங்க சொன்னார்கள்
இப்படி லவுகீக வாழ்வின் தாத்பரியத்தை சொன்ன மதம் யந்திர வழிபாட்டில் சக்கர தத்துவமாக அவளை சொல்லிற்று
யந்திரங்களில் மிகவும் உயர்ந்ததும், சாமான்யங்களினால் எளிதில் வணங்கப்படக் கூடிய யந்திரம் ஸ்ரீ சக்ரம் எனப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு ஆகும். ஸ்ரீ வித்யா பூஜை என்பது இதுதான்
ஸ்ரீ சக்கரம் என்பது ஆதிபராசக்தியின் சூட்சும உருவம். ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் அவள் சூட்சுமமாக அம்ர்ந்திருப்பாள், அவளை மந்திர ஒலியினால் பூஜிக்க வேண்டும். பொதுவாக ஸ்ரீ சக்கரம் என்பது பரமேஸ்வரனும், பார்வதி தேவியும் இணைந்து அமர்ந்து உள்ள இடமாகும்.
ஸ்ரீ சக்கரம் என்பது ஒன்பது ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது, இந்த ஒன்பது கோட்டைகள் எனும் நிலைகள் ஒன்பது தேவியரை குறிப்பது
அதில் முதல் தேவி இந்த சைலபுத்ரி எனும் மலைமகள்,
இந்த முதல் சக்கரம் வட்டவடிவிலானது அதற்கு ‘த்ரைலோக்ய மோகன சக்கரம்’ என பெயர் த்ரைலோக்ய மோகனம் என்றால் மூவுலகங்களையும் மயக்குவது என்று பொருள். இது திரிபுரா சக்ரேஸ்வரி என சொல்லபடும்
இதுதான் திரிபுர சுந்தரி என்றாயிற்று
ஆக சக்கரவழிபாட்டில் முதலில் வரும் இந்த தத்துவம் இந்த சக்திதான் இன்றை நாளுக்கானது
சக்கரவழிபாடு செய்பவர்கள் இந்த நாளில் அவளுக்கான பூஜையினை சரியாக செய்தால் சக்கரத்தின் முதல் தளம் முதல் நிலை துலங்கும்
இந்த அன்னைதான் யோக தத்துவத்தில் மூலாதார சக்தியாக ஜொலிக்கின்றாள் , மூலாதார சக்தி அவள்தான்,
நவதுர்கா என்பது யோகத்துடன் எப்படி பொருந்திவரும் என்பதை திருமூலர் பாடல் கொண்டு தொடங்கலாம், இந்த நவ துர்கை தத்துவத்தைதான் பத்தாம் திருமுறையில் பாடிவைத்தார் திருமூலர்
"நவாக்கரி சக்கர நானுரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி யக்கிலீ சௌமுத லீறே"
என்பது முதல் பாடல்
அதாவது நவம் என்றால் ஒன்பது, அக்கிரி என்றால் அட்சரம் பொருள்
ஆக பாடலின் பொருள் என்னவென்றால் ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட ஒன்பது சக்கரத்தைப் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறினால் அது ஒரே சக்தியாக இருக்கின்ற இறைவியின் திருமேனியாக விளங்கும் அட்சரமே ஒன்பது அட்சரங்களாக மாறி இருக்கின்றது
இங்கே ஒன்பது அட்சரம் என்பது "ஓம் ஐம் கிலீம் சௌவ்" எனும் ஒன்பது எழுத்து மந்திரமாகும்
இத "ஐம் கிலீம் சௌவ்" என்பதை மாற்றி இட்டு எழுதினால் 81 வார்த்தைகள் மாறி மாறிவரும், இந்த மந்திரங்களை முழுக்க சொன்னால் அன்னையின் அருளை அடைந்து முழு சித்தி ஆகலாம்
அந்த சூட்சுமத்தை , இந்த ஒன்பது அட்சரத்தை சொல்ல சொல்ல மூலாதாரத்தில் இருந்து எழும் குண்டலினி துரியத்தை தொடும் அப்போது ஞானம் விளையும் என்கின்றார்
ஆம், இங்கே நவதுர்கா வடிவத்தை நவ யோக நிலைகளாக போதிக்கும் திருமூலர், அதற்கான மந்திரமும் தருகின்றார்
""ஓம் ஐம் கிலீம் சௌவ்" என்பது அதுதான், இதுதான் வாலை குமரி எனும் திரிபுர சுந்திரிக்கான பீஜ மந்திரம்
இதனை சொல்ல சொல்ல குண்டலினி அன்னையின் அருளில் துலங்கும் என்பது யோகியர் சொன்னது
இது இன்னும் ஆழமாக செல்லும்
"ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சர்யம் மெத்த மெத்த அது தான் பாரு“
என்பது கருவூரார் பாடல்