தேங்காய் இல்லாமல் தேங்காய் சட்னி

சில குட்டி பசங்க டெய்லி தேங்காய் சட்னி வேணும்னு அழுவாங்க. சமைச்சு கொடுத்து நமக்கும் கடுப்பில் போராடிக்கும். அவங்களுக்கான ஒரு சட்னி தான் இது.

பெரிய வெங்காயம் ரெண்டை நறுக்கி, எண்ணையில் வதக்கி எடுத்துக்கோங்க. பொட்டு கடலை, கொஞ்சம் உப்பு, ரெண்டு மிளகாய், கொத்தமல்லி கூட இந்த கலவையும் சேர்த்து மிக்ஸியில் அரைச்சு எடுக்கவும். கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வைத்தால் தேங்காய் சட்னி போலவே சாப்பிடவும், சுவையும் இருக்கும். வேறுபாடு தெரியாது.


வெங்காயம், கூடவே ரெண்டு மிளகாய் வத்தலையும் சேர்த்து வதக்கினால் சட்னி லைட் ஆரஞ்சு கலரில் கிடைக்கும். சேம் டேஸ்ட்.
மிகவும் பயனுள்ள தகவல்
 
Back
Top
Developed and maintained by – Akeshya