Narmadha mf
Well-known member
கண் எதிரில் இருந்தும் உன்னதம் உணராமல் கடந்து செல்லும் மக்களில் நானும் ஒருவளாய் இருந்திருக்கிறேன் தும்பை செடியின் மகிமையை அறியும் வரை...
பலருக்கு தெரிந்திருக்கும் இருப்பினும் தெரியாத நட்புகளுக்காக 
நாள் பட்ட சளியினால் அவதி படும் நபர்கள் இந்த தும்பை இலையின் சாறை எடுத்து கொள்வதால் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தொந்தரவில் இருந்து முழுமையாக விடுபடலாம். சளியினால் ஏற்படும் தலை பாரமும் படிப்படியாக குணமாகும்.
தேவையான பொருட்கள் :
1.தும்பை இலை சாறு -இரண்டு தேக்கரண்டி
2.இஞ்சி சாறு-ஒரு தேக்கரண்டி
3.தேன் -இரண்டு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை :ஒரு கைப்பிடி தும்பை இலையை எடுத்து கசக்கினால் தும்பை சாறு கிடைக்கும் அதனுடன் தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து காலை வேலை சூரிய உதயத்திற்கு முன்பு மூன்று நாட்கள் எடுத்து வந்தால் படிப்படியாக சளி தொல்லை நீங்கும்.
குறிப்பு :மூன்று நாட்கள் மட்டும் எடுத்து கொள்ளவும், தும்பை சாறு உடல் உஷ்ணத்தை அதிகபடுத்தும் என்பதால் அளவுடன் எடுத்து பயன் பெறவும்
.
வாழ்க வளமுடன்