சொர்க்கம்

amirthababu

Moderator
Staff member
சகல சாப்பாட்டு பிரியர்களுக்கு

சமர்ப்பணம் .
கவிதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை...

சொர்க்கம்
-----------------

மீந்து போன அடைமாவில்
மிருதுவான குனுக்கு சொர்க்கம்
ஒருவாரமான தோசைமாவில்
ஊத்தப்பமே சொர்க்கம்

மார்கழி மாத குளிரில்
மணக்கும் வெண்பொங்கல் சொர்க்கம்
கார மிளகு தாளித்த - பொங்கலுடன்
கத்திரிக்காய் கொத்ஸ்சே சொர்க்கம்

பரங்கிக்காய் சாம்பாருக்கு - பீன்ஸ்
பருப்புசிலி சொர்க்கம்
கதம்ப சாம்பாருக்கு - பொடியிடிச்ச
கத்திரிக்காய் கறி சொர்க்கம்
குடைமிளகாய் சாம்பாருக்கு
கோஸ் பட்டாணி கறி சொர்க்கம்
உலகிலுள்ள அத்தனை சாம்பாருக்கும்
உருளைக் காரகறியே சொர்க்கம்

வெந்திய குழம்பிற்கு
வெண்டைக்காய் கறி சொர்க்கம்
சுண்டைக்காய் வெத்த குழம்பிற்கு
சுட்ட அப்பளமே சொர்க்கம்
பத்திய மிளகு குழம்பிற்கு
பருப்பு தொகையலே சொர்க்கம்
மத்தியான தயிர் சாதத்திற்கு
மாவடு இருந்தால் சொர்க்கம்

பல் முளைக்கா பிஞ்சுகளுக்கு
பருப்பு சாதமே சொர்க்கம்
அடைக்கு வெல்லத்தோடு
அவியல் இருந்தா சொர்க்கம்;

பசியில் துடிப்பவனுக்கு
பழைய சோறே சொர்க்கம்
நோயில் வீழ்ந்தவனுக்கு
நொய்க் கஞ்சியே சொர்க்கம்!!!
 
Back
Top
Developed and maintained by – Akeshya