நான் கொஞ்சம் காயா இருக்கற மாதிரி தக்காளி எப்பவுமே வாங்கிப்பேன். முட்டை பொரியலுக்குன்னே.
இப்ப அது இன்னும் வசதி காய் தக்காளி வாங்கிக்கறது. ரொம்ப நாள் வரும். மெதுவா பழுக்கும்.
இதை உதைக்காய்ன்னு சொல்லுவோம்.
முட்டை புர்ஜி & முட்டை பொரியலுக்கு வெங்காயம் கம்மியா சேர்த்து ரெண்டு தக்காளி காயையும் வெங்காயம் கட்பண்ணின அதே சைஸ்ல கட்பண்ணி எண்ணை ஊத்தி வதக்கிடுங்க.
பச்சைமிளகாய் சேர்த்தாலும் ஓகே. இல்லைனா வரமிளகாய் சேர்த்து ட்ரை பண்ணி பாருங்க.
வதங்க ஆரம்பிக்கும் போது துளி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நல்லா வதங்கவும் முட்டை உடைச்சு ஊத்தி நல்லா கிளறிடுங்க. கடைசில மிளகுத்தூள் சேர்த்து இறக்கிடுங்க.
புதுவிதமான ஒரு டேஸ்ட். ட்ரை பண்ணி பாருங்க.
இது மணத்தக்காளி வத்தல் குழம்பு, சுண்டவத்தல் குழம்புக்கு சைடிஷா சூப்பரா இருக்கும்.
தயிர்சாதத்துக்கும் கூட