சப்தமாதாக்கள்

amirthababu

Moderator
Staff member
சப்த மாதாக்கள் : 01

ஆடிமாதம் அம்மனுக்கானது, அப்படியான மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சப்த மாந்தர்களுக்கானது, அவர்கள் ஏழுபேரும் தனியாக இருந்தால் சப்த கன்னியர் , சிவாலயத்தின் உள்ளே இருந்தால் அவர்கள் சப்த மாதாக்கள்

இந்த சப்த மாதாக்கள் பார்வதியின் அம்சம், அதாவது இவர்கள் ஏழுபேர்தான் உலகை இயக்குபவர்கள் எல்லாமும் இந்த ஏழு பேரில் அடங்கிவிடுகின்றது

அவ்வகையில் ஒவ்வொருவர் குலதெய்வமும் இந்த ஏழுபேரின் அம்சத்தில் அடங்குகின்றது, இதனால் ஆடியின் முதல் ஏழு நாளும் இவர்களை வணங்குதல் மரபு

இன்றும் கேரளத்தில் இது "கற்கடகம் ஏழு" எனும் சம்பிரதாயமாக கொண்டாடபடும், அன்று விநாயகருக்கும் சப்த மாதாக்களுக்கும் ஹோம வழிபாடும் செய்யபடும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்மனுக்கு அந்த பூஜை நடக்கும், ஒருத்தி பிரதானம் மற்றவரெல்லாம் உடன் இருப்பார்கள்

இந்த சப்தமாதா வழிபாடு ஆடியில் விஷேஷம், ஒவ்வொருவரும் முதல் ஏழு நாட்கள் வழிபடும் கடமை உண்டு, இது மிகுந்த பலனை கொண்டுவரும்

ஆடியில் இந்த சப்தமாதாக்களை ஆலயத்தில் வணங்கலாம், வீட்டிலும் வணங்கலாம் இது குலதெய்வ வழிபாட்டுடன் அதாவது எல்லா குலதெய்வமும் இவர்களில் அடக்கம் என்பதால் மிகுந்த அருளை பெற்று தரும்

முதல் சப்தமாதா பிராமி, இன்றைய நாள் அவளுக்கானது

இந்த பிரபஞசத்தை இயக்கும் மகா சக்திகளை ஏழுவிதமாக சக்திகளாக பிரித்து சொன்ன இந்துமதம் அவர்களை சப்த கன்னியர், சப்த மாதர்கள் என்ற அடையாளமிட்டு சொன்னது

இந்த சக்திகள் இயக்கும் சக்திகள், இயங்கும் பலத்தையும் அருளையும் தரும் சக்திகள். அந்த சக்திகளின் பலத்தாலே இந்த பிரபஞ்சமமும் அண்டமும் அண்டத்தின் வடிவமான மானிட பிண்டம் எனும் மானிட உடலும் இயங்குகின்றது

இந்த சக்திகளின் தோற்றம் பற்றி புராணத்தில் பல கருத்துக்கள் உண்டு, சிவன் அந்தகார அசுரனை அழிக்கும் போது யோகேஸ்வரி எனும் ச்கதியினை , அவள் மகேஸ்வரி எனும் சக்தியினை உருவாக்கினாள், அவளுக்கு துணையாக பிரம்மன் பிராம்மியினையும் நாராயணன் நாராயனியினையும் முருகபெருமான் கௌமாரியினையும் , இந்திரன் இந்திராணியினையும், வராஹமூற்த்தி வராஹியினையும், யமன் சாமுண்டியினையு உருவாக்கி , தங்களின் சக்தியில் இருந்து உருவாக்கி கொடுத்ததாக ஒரு குறிப்பு உண்டு

மகிஷாசுரனை அழிக்க , கப்பத்தில் உருவாகாத பெண்ணால் மட்டும் அழிவு என வரம் பெற்ற மகிஷனை அழிக்க இந்த சக்திகள் உருவாகி வந்தன என்பது இன்னொரு குறிப்பு

ஆனால் மார்கண்டேய புராணம் தெளிவாக இந்த சப்த கன்னியர் தோற்றம் நிம்ப சுதம்ப அசுரனை அழிக்க இவை அவதரித்த்ன் என தெளிவாக சொல்கின்றது

வேதங்களில் இருந்து காவியம் படைத்த மகாகவி காளிதாசன் சப்த கன்னியர் சிவனை வணங்கும் பணிபெண்கள் என குமார சம்பவம் காவியத்தில் சொல்கின்றான்

மார்கண்டேய புராணம்தான் அந்த சப்த கன்னியர் பிராம்மி, மஹேஸ்வரி, கௌமாரி, நாராயணி, இந்திராணி, வராஹி, சாமுண்டி என ஏழுபேர் என சொன்னது

பிராம்மி என்பவள் பிரம்மனின் முகத்தில் இருந்து வந்தவள, மகேஸ்வரி சிவனில் இருந்து வந்த்வள், கௌமாரி முருகபெருமானின் சக்தியாய் வந்தவள், வராஹி வராஹமூத்தியிடம் இருந்த்ம், சாமுண்டி ருத்திரனிடம் இருந்தும் வந்தவள் என சொல்கின்றது

இங்கே அறிந்துகொள்ள வேண்டிய தாத்பரியம் ஒன்றுதான், அந்த தாத்பரியம் புரிந்தால்தான் சப்த கன்னியரின் அவதாரமும் அவை இயக்கும் முறையும் அருளும் அவசியமும் முழுக்க புரியும்

இந்த உலகின் இயக்கம் முக்கியம் , இந்த உலகின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு விதி, ஒரு தர்மம், ஒரு சத்தியம் ஒரு ஞானம் உண்டு

ஒரு இயங்குவிதி உண்டு

இந்த விதியினை இந்த தர்மத்தை ஏதோ ஒரு சக்தி மாற்ற முயன்றால் அல்லது அழித்து தனக்கு ஏற்ப புதுவிதி ஏற்படுத்த முயன்றால் அந்த தர்மத்தை உடைக்க முயன்றால் இந்த சக்திகள் வந்து அந்த அதர்மத்தை அழித்து விதிப்படி தர்மபடி எல்லா இயக்கமும் நடக்க வழி செயுயும்

ஒரு ஒயக்கம் தர்மபடி விதிபடி அதனதனை பகவான் படைத்தபடி அதனதன் ஞானத்தின்படி நடக்க இந்த சக்திகள் வழி செய்யும்

இங்கு எல்லாமே பிரபஞ்சததின் ஏதோ ஒரு திட்டத்திற்காக அந்த சக்தியின் விருப்பபட் இயங்குகின்றன, அந்த இயக்கத்தை சரியாக நடக்க வைக்க, தடைகள் வந்தால் விலக்கி, பெரும் குறுக்கீடுகள் வந்தால் உடைத்து அந்த இயக்கத்தை சரியாக செய்ய வைப்பவை இந்த ஏழு சக்திகள்

இந்த பிராம்மிதான் சப்த கன்னியரில் முதல் தெய்வம்

இவள் பிரம்மனின் முகத்தில் இருந்து உருவானவள் என்பது புராணம் சொல்லும் செய்தி, ஒருவகையில் அல்ல இவள் முழுக்கவே சரஸ்வதி அம்சம்

அன்னபறவையில் வரும் இந்த தேவிக்கு நான்கு கரங்கள் உண்ட், அதில் ஏடுகள், அபயம், கமண்டலம், அட்சமாலிகை எனும் மந்திர மாலை என நான்கும் கொண்டிருப்பாள்

அன்னை தர்ப்பை புல்லில் வாசம் செய்பவள்

இந்த பிராமிதான் சிந்தனைகளை நல்ல அறிவினை ஞானத்தை தருபவள், கலைகளின் மூலத்தை அருள்பவள், படைக்கும் தொழிலுக்கு பக்கபலமாய் இருப்பவள்

பிரம்மனின் ஞானம் இவள்தான், பிரம்மனின் சக்தி இவளேதான் இவள் அருளாலே பிரம்மன் இந்த பிரபஞ்சத்தையும் அதிலுள்ள உயிர்களையும் படைக்கின்றான்

இந்த பிராம்மி என்பவளை மானிடருக்கு சிந்தனை கல்வி கலை அருள்பவள் என மட்டும் கருதிவிட கூடாது,அவள் ஒவ்வொரு படைப்பின் ஒவ்வொரு உயிரின் ஞானமாக நிற்கின்றாள், படைப்பின் தத்துவ விதி அவள் ஞானமே

அதாவது இந்த பிரபஞ்சம் மிக பெரியது ஏகபட்ட கோள்கள் அவற்றின் இயக்கங்களை கொண்டது, ஒவ்வொரு கோளும் அதனதன் இயக்கத்தில் இயங்குகின்றது, ஒரு புள்ளி கூட தன் பாதையில் இருந்து நகர்வதில்லை
அதன் இயல்பில் இருந்து விலகாமல் தன் கடமையினை தன் வேலையினை சரியாக செய்யும் அதில் ஒரு ஞானம் இருக்கும்

இதே ஞானம் ஒவ்வொரு படைப்பிலும் உண்டு , ஒரு ஒழுங்கான சீரான இயக்கம் உண்டு அது மழையில், மேகத்தி, காற்றில், நெருப்பில் என எல்லாவற்றிலும் உண்டு

அந்த ஞானமே ஒவ்வொரு உயிரிலும் உண்டு அது மீன்கள், பறவைகள், எறும்புகள், விலக்குகள், மரம் செடி கொடிகள் என ஒவ்வொன்றும் தன் இயல்பில் அதன் ஞானத்தில் சரியாக இயங்குகின்றன‌

தேனீக்கள், தூக்கணாங்குருவி, சிலந்தி, எறும்பு, யானை, சிங்கம், நாகம் என எல்லாமே ஒரு ஞானத்தில் ஒரு ஒழுங்கில் இயங்குவதை காணலாம்

கடலும் மலையும் அந்த விதிக்கு உட்பட்டதே

அந்த ஞானமான ஒழுங்கான அந்த விதியினை அந்த இயக்கத்தை அந்த சீராக நடக்கும் ஞானத்தை அருள்பவள் அன்னை பிராம்மி

எல்லா படைப்பிற்கும் அந்த விதியினை ஒழுங்கை ஞானத்தை கல்வியினை கொடுக்கும் அவள் மானிடருக்கும் ஞானமும் அறிவும் கொடுக்கின்றாள்

( இதைத்தான் கம்பன் பாடுகின்றான் தன் சரஸ்வதி அந்தாதியில் பாடுகின்றான்

""தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற
மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்
யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த
பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே.""

அதாவது வானலோக தேவர்கள், தேவர்களின் அரசனான இந்திரன், உயர்ந்த புனிதமான வேதங்கள் போற்றும் முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, சிவன் விஷ்ணு என சக்தி மிக்கோர், அசுரர்கள், முனிவர்கள், இன்னும் எல்லா உயிர்களும் வெண் தாமரையில் இருக்கும் அன்னையின் அருளால் ஞானம் பெறுகின்றார்கள் )

அப்படியான நிலையில்

மானுடன் படைப்பின் உச்சம், ஈரேழு உலகங்களில் பூமியில் அவன் ஆத்ம சொரூபம். பரம்பொருளின் ஆத்மா தங்கியிருக்கும் கூடு

அந்த மனிதன் தன் சிந்தையால் செயலால் இறைவனை உணர்ந்து அடையவேண்டும், மற்றவரும் இறைவனை உணர வழி செய்யவேண்டும் என்பது அவன் வாழ்வின் தாத்பரியம்

இந்த மானுடருக்கும் இந்த உலகில் வாழ சில விதிகள் உண்டு , அவன் சிந்திக்க தெரிந்தவன் அவன் சிந்திப்பதை வெளியில் சொல்லும் அறிவு படைத்தவன், அவன் சொல்லும் செயலும் சிந்தனையும் இந்த உலகை நல்லவழியில் நடத்தவும் இந்த மானுட சமூகத்துக்கு நலல் வழிகாட்டுவதாகவும் பல பயன்களை செய்வதாகவும் இருத்தல் வேண்டும்

மானுட விதிப்படி அவன் உலகில் வாழ பல விஷயங்கள் அவசியம் அவற்றை உருவாக்கவும் அடையவும் மனுகுலம் மேன்மையடையவும் மகிழ்ச்சியாய் வாழவும் அவனுக்கு சில விதிகள் நல்ல சிந்தனைகள் நல்ல ஞானங்கள் அவசியம்

அந்த ஞாந்த்தை அறிவினை தருபவள் அன்னை, அதனலே அவளை கல்விக்கு அதிபதி கலைக்கு அதிபதி என்றார்கள்

மானுட வாழ்வின் பெரும் பலம் சிந்தனை, அந்த சிந்தனையினை தருவது தலையின் மூளை , அன்னை அந்த மூளைக்கான பலததை தருவாள் நல்ல சிந்தனையினை தருவாள் ஞானத்தை கலை ஞானத்தை தருவாள் என்பதாலே அவள் தலையில் இருந்து உருவானதாக சொல்லபட்டாள்

பிரம்மன் படைப்பு தொழிலை செய்பவன், அந்த படைப்புக்கான மூலமாக அவளே உண்டு என்பதால் அவள் நல்ல அறிவு, ஞானன், கல்வி என எல்லாம்தந்து நல்ல மூளை பலத்தை கொடுப்பாள்

இங்கே புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் கல்வி, ஞானம் என்றவுடன் அது ஏட்டுகல்வி அல்ல, கலை என்றவுடன் 64 கலை என்பதுமட்டுமல்ல‌

மானுடன் செய்யும் ஒவ்வொரு தொழிலிலும் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் சொல்லும் சொல்லிலும் செயலிலும் எல்லா தொழிலிலும் ஞானமும் அறிவும் அவசியம்

விவசாயி மீணவன், கொல்லன், தொழிலாளி, வியாபாரி என எல்லாவற்றிலும் ஒரு ஞானமும் அறிவும், செய்வதை அழகுறை செய்து அதை மக்களிடம் பயனுற ஒப்படைத்து தானும் வாழ்ந்து மற்றவர்களை வாழவைப்பதிலும் நல்ல அறிவு முக்கியம்

அது சமையல் முதல் சந்தை வரை எந்த தொழிலாகவும் இருக்கட்டும், எல்லாவற்றிலும் ஒரு அறிவும் ஞானமும் நலல விதியும் அவசியம், அப்போதுதான் அது நிலைக்கும் சிறக்கும்

அந்த ஞானத்தை அறிவை தருபவள் இந்த பிராம்மி, அவளை வழிபட்டு துவங்கினால் எல்லாம் துலங்கும், அவள் செய்ய் தொழிலுக்கு அல்லது அவரவர் வாழ்க்கை நிலைக்கு என்ன வரம் வேண்டுமோ அதை அருள்வாள்
அதனால் சப்த கன்னியரில் அவளை முதலாவதாக வைத்தார்கள், "எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்" என்பதால் அவளை சிரசில் இருந்து வந்தவள் சிரசுக்கு காவல் என்றார்கள்

உடலின் ஏழு தாதுக்களில் மூளை முக்கியமானது அது தலையில் உண்டு, பிராம்மி தேவியின் அருளால் மூளை நலமாகும் பலமாகும் சிந்திக்கும் திறன் கூடும்

ஏழு தாதுக்களான உடல் நலல் பலம் பெற்றால்தான் சரியான இயக்கத்தில் இருந்தால்தான் ஆத்மா சரியாக செயலாற்றமுடியும் கர்மம் செய்யமுடியும்

அந்த உடலுக்கு மூளைதான் பிரதானம், அந்த மூளைதான் உட்லை இயக்கும் கட்டுபடுத்தும் இன்னும் ஒவனை சிந்திக்க செய்யும், அதுதான் அவனின் அடையாளமாகவே கருதபடும்

அந்த மூளையினை பலமாக்குபவள் அன்னை பிராம்மி

இந்த அன்னைதான் யோக தத்துவத்தில் மூலாதாரமாக நிற்கின்றாள், அவளை வழிபட வழிபட அந்த் சக்கரம் துலங்கும், படைக்கும் திறன் புதிய புதிய புதிய சிந்தனைகள் பெருகும்

மூலாதார சக்கரம் துலங்க ஆரம்பித்தால் பல நல்ல மாறுதல்கள் சிந்தனையில் வரும், அன்னை அங்கேதான் இருந்து நடத்துகின்றாள்

ச்பத கன்னியர் வழிபாட்டில் முதல் இடம் இந்த பிராம்மி தேவிக்கு அவளை வழிபட வழிபட ஞானமும் அறிவும் பெருகும்

இந்த பிராம்மி என்பவள் புராணத்தில் மட்டுமல்ல பல இடங்களில் வருவாள், மகாபாரதத்தில் பெரும் அட்டகாசம் செய்யும் லவண அசுரன் என்பவனை, சிவனின் சூலாயுதம் கொண்ட அவன் யாரும் வெல்லமுடியா நிலையில் நின்று பெரும் அட்டகாசம் செய்வான்

அவனை ராமனின் அம்பு மூலம் அழிப்பான் சத்ருகன், அப்படி அழிக்கும் போது அவன் இந்த பிரமமியினை வேண்டி அழைத்து செல்வான் எனபது ராமாயணத்தின் ஒரு காட்சி

இங்கே ஒரு கேள்வி எழலாம், எழும்

அதாவது நல்ல சிந்தனைக்கு அறிவுக்கும் ஞானத்துக்குமான இந்த தேவியினை ஏன் நிம்ப சுதும்பனை அழிக்க படைகள் சண்டையிடும் களத்தில் இறக்கினார்கள் என்பது

அங்கேதான் பெரிய ஞானதாத்பரியம் உண்டு

போரில் வீரம் முக்கியம், ஆயுதம் முக்கியம் அப்படியே ஞானமும் அறிவும் மகா முக்கியம், அறிவு கலக்காத போர் வெற்றியடையாது அது முரட்டுதனமான சண்டையாகிவிடும்

இதனாலே பலமிருந்தாலும் அசுரர்கள் தோற்று ஓடுவார்கள்,
 
பலம் குறைந்திருந்தாலும் தேவர்கள் வெற்றிபெறுவார்கள்

போரில் அறிவும் ஞானமும் மகா முக்கியம்

ஆம், ஒவ்வொரு மானிடரும் ஒவ்வொரு நாளையும் போராடி கழிக்கும் வாழ்வு இது, அந்த போராட்டமான வாழ்வில் ஞானம் முக்கியம் அறிவு முக்கியம் சமயோசித புத்தியும் , வாழ்வை காத்து தன்னோடு இருப்பவரை காத்து இந்த சமூகத்தை காத்து செல்ல அறிவும் ஞானமும் வேண்டும்

ஒவ்வொருவருக்கும் அதை தருபவள் அன்னை பிராம்மி

அன்னை பிராம்மியின் அருள் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம், பெண்களுக்கு இந்த அறிவும் விழிப்பும் நல்ல சிந்தனையும் அவசியம்

அவளே படைக்கும் சக்தி கொண்டவள், அவளே உயிர்களை வளர்க்கும் சக்தி,குடும்பத்தை காக்கும் சக்தியும் கொண்டவள், அவளாலே எல்லாம் இயங்கும் , மானுட வாழ்வினை இயக்குவது பின்னால் இருந்து பெண்கள்தான்

அந்த பெண்களுக்கு எல்லா வகையான அறிவும் வேண்டும், நல்ல தோற்றம் நலல் சூழல், நலல் சிந்தனைக்ள், நலல் மனோவளம், அறிவு என எல்லாம் கொண்டிருக்கும் பெண்ணே, எல்லாம் புரிந்து உணர்ந்து ந்டக்கும் பெண்ணே வீட்டுக்கு சிறப்பினை கொடுப்பாள், சிறப்பான குடும்பத்தை உருவாக்குவாள்

அவளே வீட்டின் விளக்கு, அந்த விளக்கினை ஜொலிக்க வரம்ருள்பவள் அன்னை பிராம்மி

பெண்களுக்கு சப்த கன்னியர் வழிபாடு மகா முக்கியம், ஒவ்வொரு பெண்ணும் நடத்தும் போராட்ட வாழ்வில் அவளுக்கு அறிவும் ஞானமும் மகாமுக்கியம்

சிறப்பில்லா குடும்பங்கள், குழம்பி தவிக்கும் குலங்கள், கண்ணீரும் ஏழ்மையும் நிரம்பிய இடங்கள், ஓயா சண்டைகள், எப்போதும் அழுகை நிம்மதி குறைவு என குடும்பத்தை கண்டால் ஆழ்ந்து பார்த்தால் அங்கு அறியாமையும் எதுவும் தெரியாத சூனியமான ஒரு பெண் இருப்பதை காணலாம்

நன்றாக சிறந்துவாழும் குலம், ஏழ்மை என்றாலும் அது தெரியாமல் மகிழ்ந்துவாழும் குடும்பத்தை கண்டால், எல்லோரும் இன்புற்று மகிழ்வும் சந்தோஷமும் வளமும் கொண்ட குடும்பத்தை கண்டால் அங்கே ஒரு அறிவுள்ள பெண் இருப்பதையும் காணலாம்

இந்த வரம்தான் அன்னை பிராம்மி தரும் வரும், பெண்களுக்கு அறிவும் கல்வியும் ஞானமும் மகா முக்கியம் என்பதால் அவளை வணங்க சொன்னார்கள்

எல்லா கோவில்களிலும் சப்த கன்னியர் என ஏழு கன்னியரை வைத்து வணங்கி வழிபட சொன்னார்கள் இந்துக்கள், இந்த நாள் அவளுக்கானது அவளை நினைந்து மற்ற மாதர்களோடு வழிபடுவோர்க்கு எல்லா அறிவும் நல் சிந்தனையும் வாய்க்கும்

“ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.”
 
சப்த மாதாக்கள் 02 : மகேஸ்வரி

இந்துமதம் பிரபஞ்ச ரகசியங்களை தன்னுள் கொண்டிருக்கும் மதம், இந்த உலகம் எப்படி உருவானது அது எப்படி இயங்குகின்றது என்பதை சூட்சுமமாக போதித்த ஞானமதம்

அது உலகம் அன்னையால் உருவாகி அதாவது தியான நிலையில் இருக்கும் சிவனை அன்னை இயக்கி அதிலிருந்து இந்த பிரபஞ்சம் உருவாகி, முதலில் நாராயணனும் அவரில் இருந்து பிரம்மனுமாக இந்த பிரபஞ்ச்ம விரிந்து பின் 7 சக்திகள் வடிவில் காக்கின்றது என்பதை சொன்னது

இதனால்தான் இந்துக்களுக்கு ஏழு என்பது பிரதானமாயிற்று, எல்லா இடத்திலும் இயக்கத்திலும் இந்த ஏழு வகை சக்திகள் இருப்பதை உணர்ந்து சொன்னார்கள்

ஏழு வானம், ஏழு கடல், ஏழு மேகங்கள், வாரத்துக்கு ஏழு நாட்கள், ஏழு கண்காணும் கிரகங்கள், ஏழு பிறவிகள், உடலில் ஏழு சக்கரங்கள் என எல்லாமும் ஏழு என சொன்னார்கள், சூரியனின் தேரை ஏழு வண்ணம் இழுத்துவரும் என்பதை கூட சொன்னார்கள்

இந்த அடிப்படையில்தான் உலகை இயக்கும் சக்திகளை ஏழு என்றார்கள் அதுதான் சப்ந்த மாந்தருமுமாயிற்று

இது காலம் காலமாக இந்து மரபில் வந்தது, இந்துக்கள் ஞானத்தின் தாத்பரியமாய் வந்தது, இது இந்துக்களிடம் அதுவும் தமிழக இந்துக்களிடம் இடையில் புகுத்தபட்டது அல்ல‌

சப்த கன்னியரில் இரண்டாம் தெய்வமான மகேஸ்வரியினைக் காணுமுன்னால் இந்த சப்த கன்னி வழிபாடு இடையில் புகுத்தப்பட்டதா? யாரோ இடைச்செருகல் செய்தார்கள்களா என்பதான குழப்பங்களைக் காணலாம்.

சப்த கன்னியர் வழிபாடு இங்குக் கால காலமாக உண்டு. சிறிய கோவில்களின் தெய்வமாக, கிராமங்களிலும் பெரிய ஆலயங்களில் சப்த கன்னியராகவும் இந்த வழிபாடு உண்டு.

கலிங்கத்து பரணி இந்த வழிபாட்டைச் சொல்கின்றது.

"மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்
வேழம் என்ற கொடி ஏழுடைச்
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழ்இரு
துணைப் பதங்கள் தொழு வாம்"

என அக்காலத்திலே இங்குச் சப்தகன்னி வழிபாடு இருந்ததைச் சொல்கின்றது.

குமரகுருபரர் எனும் மகாஞானி, தமிழ் இந்து ஞானி பாடுகின்றார்.

"கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்"

அதாவது "கடகளிறு தவுக பாய் மிசைப்போர்த்தவள்" என்றால் தாருகாவன முனிவர்கள் கொல்ல அனுப்பிய மத யானை தந்த தோல் ஆகிய நிலைஅங்கியை மேலே போர்தியவள் எனப் பொருள்.

அந்தச் சாகசத்தை அந்த மதயானையினைச் சிவன் அடக்கிக் கொன்று தோலை உரித்து போர்த்திக் கொண்டார் என்பது புராணம். ஆனால், அவருக்கு அந்த சக்தியினை அளித்தவள் ஒருத்தி அவள் மகேஸ்வரி என்பது வரியின் பொருள்.

அடுத்து "கருகுவிது உறுகலின் வாரியைத் தூர்த்தவள்" குரங்குகள் குவித்த சிறுகற்களினால் மன்னார்குடாக்கடலை மேடாக்கியவள் " அதாவது, கடலைச் சிறிய கற்களால் நிரப்பி பாலம் அமைத்தவள், குரங்களுகளால் கடலைக் கடந்தவள் என்பது பொருள்.

நாராயணின் சக்தியாக நாராயணி இருக்கின்றாள் என்கின்றார் முனிவர்.

அடுத்து, " கடல்வயிறு எரியஒள் வேலினைப்பார்த்தவள்" அதாவது கடலின் அடிவயிறு கலங்கும்படி வேலை எறிந்தவள் எனப் பொருள்.

முருகப்பெருமானின் சக்தியாக நின்ற கௌமாரி எனப் பொருள்.

அடுத்து "க‌டிகமழ்தருமலர் தார்முடிச் சேர்த்தவள்" மணங்கமழ்கின்ற கற்பகத்தருவின் மலரை மாலையாகப் புனைந்துமுடியிற் சேர்த்தவள் என்றால் இந்திரனின் சக்தியான இந்திராணி எனப் பொருள்.

"இடி உக அடல் அரி ஏறு உகைத்துஆர்த்தவள்" என்றால் இடியும்சிதறும்படி வலியுற்ற ஆண்சிங்கத்தினைச் செலுத்திமுழக்கம் புரிந்த சாமுண்டி எனப் பொருள்.

"எழுத அரு முழுமறை நூலினில் கூர்த்தவள் " என்றால் எழுத்து அறிவும் கல்வி அறிவும் வேத அறிவும் கொடுக்கும் பிராமி எனப் பொருள்.

"எயிறுகொடு உழுது எழு பாரினைப்பேர்த்தவள்" என்றால் வராகம் ஆகிக் கொம்பினால் உழுது ஏழுலகங்களையும் பேர்த்தெடுத்த வராஹத்தில் இருந்து வந்தவள் எனப் பொருள்.

இவர்எழுவர்கள் தாள் முடிச்சூட்டுவதும் என்றால் என்று சொல்லப் படுகின்ற ஏழு மாதர்களின் திருவடிகளை நம்தலைமேற் கொண்டு பணிவோம் எனப் பொருள்.

ஆக மும்மூர்த்திகள் அவர்களின் அம்சமான அவதாரங்களில் சப்த கன்னியரே நின்று இயக்குகின்றார்கள். அந்தச் சக்திமிக்க சப்த கன்னியரை தொழுவோம் எனக் குமரகுருபரர் சொல்கின்றார்.

ஆம். இந்த சப்த கன்னியர் வழிபாடு எல்லாக் காலமும் எல்லா இடத்திலும் இருந்தது, எதுவும் இங்கு புதியதல்ல‌.

அந்தச் சப்த கன்னியரில் இரண்டாம் தேவி மகேஸ்வரி.

இந்த மகேஸ்வரி சிவனின் தோளில் இருந்து உருவானவள் என்கின்றது புராணம். மகேஸ்வரனின் இயக்கு சக்தியான அவள் பெயர் மகேஸ்வரி.

இந்த மகேஸ்வரி சிவனின் அம்சம் அதாவது மகேசன் என்றால் அமைதியான நிலையில் இருக்கும் சிவன், தவக்கோலத்தில் இருக்கும் அந்தச் சாந்தமான வரமருளும் சிவன்.

அந்தச் சிவனின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி தேவி.

இந்தத் தேவிக்கும் மூன்றுகண் உண்டு. மகுடம் கொண்டவள். கையில் மான், கோடரி எனும் மழு ஏந்தி நிற்பாள், அபயவரதம் காட்டி நான்கு கரங்களோடு வீற்றிருப்பாள், சிவனைப் போலவே பாம்பும் பிறையும் சூடிய கோலமும் உண்டு.

சிவனைப் போலவே இவளும் ஈசானிய மூலைக்கு அதிபதி.

வெண்ணிற ஆடையினை அணிந்திருப்பவள்.

மஹதி என அழைக்கப்படும் தெய்வமும் இவள்தான். ஐந்து முகங்களைக் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணு தர்மோத்திர புராணம் ஆகியவை சொல்கின்றன.

ஸ்ரீதத்துவநிதி புராணம் இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது.

இந்தத் தேவி எருதினை அதாவது நந்தியினைச் சிவனைப் போல வாகனமாகக் கொண்டவள், பலத்தினை தரும் சக்தியாக அறியப்படுகின்றாள்.

அவள் எப்படியான பலத்தை தருவாள் என்பதுதான் இங்கே காணவேண்டியது, அவளின் தாத்பரியமே அதில்தான் அடங்கியுள்ளது.

அன்னை சிவனின் தோளில் இருந்து வந்தவள் என்பது அவள் எலும்பின் அதிபதி எலும்பு தத்துவத்தைக் கொண்டவள் என்பதைச் சொல்கின்றது.

உடல்பாகத்தில் தோள் எலும்புதான் வலுவானது, சுமைகளைத் தாங்கக் கூடியது, இன்னும் பலமும் வலிமையும் அதிகம் கொன்டது.

அதனாலே அவள் தோளில் இருந்து வந்தாள் என்பது அவள் வலிமையானவள், சக்தி கொண்டவள், எதையும் தாங்கும் எதையும் எதிர்கொள்ளும் வலிமையினைத் தருவாள் என்கின்றது.

ஆம். அவள் எலும்பின் அதிபதி.

இந்த உலகில் எல்லாமே ஒவ்வொரு வடிவத்தைக் கொண்டிருக்கின்றன. வடிவம் இல்லாமல் படைப்பு இல்லை. பிரபஞ்ச கோள்கள் முதல் பூலோக மண்புழு வரை எல்லாமே ஒரு வடிவம் கொண்டவை.

மானிட உடலுக்கும் வடிவம் உண்டு. அந்த வடிவினைக் கொடுப்பது எலும்பு. எலும்பு இன்றி உடல் வடிவமில்லை இயங்க வழியில்லை.

ஆம். இந்த வடிவத்தின் ஆதாரமாய் நிற்பவள்தான் இந்த அன்னை. ஒவ்வொரு படைப்புக்கும் மிக சரியான வடிவத்தை அவள் வழங்கி இயக்கம் சரிவர நடக்க அவள் அடிநாதமாய் இருக்கின்றாள்.

வானில் சுழலும் கோள்களுக்கு உருண்டை வடிவம், மலைகளுக்கு கூம்பு வடிவம், நதிக்கு திரவ வடிவம், மேகத்துக்க்கு புகைவடிவம், கடலுக்கு அலை வடிவம் எனக் கொடுத்த அவள் ஒவ்வொரு உயிருக்கும் எது அதன் இயக்க வடிவமோ அதைக் கொடுக்கின்றாள்.

மரத்துக்கு, செடிக்கு, மலருக்கு, ஊர்வன, பறப்பன, நடப்பன நீந்துவன என எல்லாவற்றுக்கும் எது ஏற்ற வடிவமோ அதை அருள்கின்றாள்.

ஒவ்வொரு படைப்பும் எப்படி இயங்க வேண்டுமோ அந்த ஞானம் அவளாலே வடிவமைக்கப்படுகின்றது.

சரிவுகளைக் கொண்ட மலை, பள்ளத்தில் ஓடும் நதி, கூர்மூக்கும் இறகும் வாலும் கொண்ட பறவைகள், தங்கள் கடமையினைக் கர்மாவினைச் செய்யும்படி உடல் கொண்ட விலங்குகள் என எல்லாமும் பார்த்துப் பார்த்து வடிவமைக்கின்றாள்.

விதைகள் அதன் வடிவம் முதல் அதன் எல்லா நுட்பமும் அவளாலே வடிவமைக்கப்படுகின்றன, எல்லாப் படைப்பின் மூல வடிவமும் அவளாலே உருவாகின்றன‌.

அப்படிப்பட்டவளே மானுடருக்கும் எலும்பாய் வடிவங்களைக் கொடுக்கின்றாள். எலும்புதான் மானுடனுக்கு வடிவம் கொடுக்கின்றது. அதனால்தான் மானுட உடல் இயங்குகின்றது.

எலும்பும் வடிவமும் வெறும் இயக்கம் மட்டுமல்ல, அதுதான் பலம், அதுதான் தாங்கும் சக்தி. அதுதான் பலமாக உழைக்க வைக்கும் சக்தி.

எதையும் தாங்குவதும் உழைக்க வைப்பதுமான சக்தியினை எலும்புதான் கொடுக்கும் எலும்பு இன்றி மானிடர் இல்லை.

முதுகெலும்பாக நிற்போம், தோள் கொடுப்போம், உறுதியாக நிற்போம் என்பதெல்லாம் எலும்பின்றி எந்த இயக்கமும் இல்லை தாக்கமும் இல்லை என்பதைச் சொல்வது.

அன்னை அப்படி எலும்புபோல் மானுடருக்கு பலம் தருவாள், வடிவம் தருவாள், உழைக்கும் பலத்தை எதையும் தாங்கும் சக்தியினைத் தருவாள் என்பது அவள் வழிபாட்டின் தாத்பரியம்.

சிவனுக்கு "கங்காள மூர்த்தி" என ஒரு பெயர் உண்டு. அதாவது ஒரு முதுகெலும்பினைக் கையில் வைத்திருப்பவர் எனப் பொருள்.

அந்தச் சிவனின் சக்திமிக்க எலும்பாக இருப்பவள் அன்னை என்பதே அதன் தத்துவம். சிவனின் ஆதாரம் அவள்தான் என்பதே அந்த கங்காள முர்த்தி கோலத்தின் தாத்பரியம்.

எலும்புதான் மிக முக்கிய விஷயங்களைக் காப்பதும் இயக்குவதுமானது. உடலில் இதயம் மூளை என முக்கிய பாகங்கள் எலும்புக்கு உள்ளேதான் உண்டு.

மானுட உடலில் 206 எலும்புகள் இப்படிப் பலவகை பணிகளைச் செய்கின்றன. அவைதான் இரத்தம் உருவாகக் காரணமான மஞ்சையினை உருவாக்கி காக்கின்றன‌.

ததீசி முனிவர் முதுகெலும்பை ஆயுதமாக விட்டுச் சென்றார் என்பதும், சகுனி தன் முன்னோர்களின் எலும்பை ஆயுதமாகக் கொண்டிருந்தான் என்பதும் சக்தியினை வழி வழி வந்த பலத்தினைச் சொல்வது.

எலும்பின் இன்னொரு வடிவம்தான் சங்கு. இதனாலேதான் சிவன் கங்காளமுர்த்தி என எலும்போடு இருப்பது போல் விஷ்ணு பகவான் சங்கோடு இருக்கின்றார்.

எப்படி மானுடன் பிறக்கும் போது எலும்பும் உருவாகி அவன் இறந்தபின்பு அது எஞ்சுகின்றதோ, அப்படி சங்கு பூச்சு உருவாகி அது வளர்ந்து அழிந்தபின்னும் சங்கு அழிவதில்லை.

சங்குதான் அந்த உயிருக்கு வடிவம், அந்த உயிருக்கு காவல், அதன் ஆதாரம் எல்லாம். அப்படி மானிட உயிர்க்கு பெருமாளே காவல் அவரே ஆதாரம் எனச் சொல்லத்தான் சங்கை அவர் கையில் கொடுத்தார்கள்.

கடலில் சங்கு கடைசியில் எஞ்சுவது போல் சம்சார சாகரத்தில் எலும்பு மிஞ்சும் என்பதைக் காட்டவே சங்கு இங்கு பகவான் கையின் அடையாளமாயிற்று.

அப்படி மகா சிறப்பானது எலும்பு. அதன் அதிபதி தேவி மகேஸ்வரி. அதனாலே வெண்மை நிறமான எலும்பினை அவளுக்குக் கொடுத்தார்கள்.

எலும்பு என்றால் உறுதி, பலம். அன்னை எல்லா உறுதியும் பலமும் தருவாள் எதையும் தாங்கும் சக்தி தருவாள் என்பதற்காக அவளுக்கு வாகனமாக நந்தியினை வைத்தார்கள்.

நந்தி பலமானது. கடுமையாக உழைக்கக் கூடியது. அன்னையினை வழிபட்டால் உழைக்கும் சக்தி எந்தப் பெரும் சுமையினையும் தாங்கிச் செல்லும் சக்தி கிடைக்கும் என்பதைச் சொன்னார்கள்.

ஆம். அன்னை மகேஸ்வரியின் வழிபாட்டில் ஆயிரம் தத்துவங்கள் உண்டு. லௌகீகமாகவும் சூட்சுமமாகவும் நிறைய உண்டு.

லௌகீகமாக அன்னையினை வழிபட வழிபட எலும்பு சம்பந்தமான சிக்கல்கள் நோய்கள் லௌகீக வாழ்வில் தீரும். அவளுக்கான வழிபாட்டை சரியாகச் செய்தால் எலும்பு நோய்கள் தீரும்.
 
Last edited:
  • Like
Reactions: uma
எலும்பு சம்பந்தமான நோய்களே தலைமுதல் கால்விரல் வரை ஏதோ ஒரு உருவில் வந்து மானிடரை முடக்கும். அவளை வேண்ட வேண்ட அவள் எலும்பு நோய்களைத் தீர்த்து முழு சக்தி தருவாள்.

எந்தப் பணி, எந்தத் தொழில், எந்தக் கலையாக இருந்தாலும் அதன் அடிப்படை வடிவம் சரியாக வர அவள் முழு அருள் செய்வாள், அதனால் தொட்டது எல்லாம் அவள் அருளால் வாய்க்கும்.

உழைக்கும் முழு பலத்தை எருதுபோல் உழைக்கும் பெரும் பலத்தை, களைப்பில்லாமல் சளைப்பில்லாமல் உழைக்கும் பெரும் பலத்தை அவள் கொடுப்பாள்.

பெண்கள் அவளை வழிபட சொல்ல காரணம் நிறைய உண்டு. இந்துமதம் அதை சரியாகச் செய்தது.

பெண்கள்தான் ஒரு குடும்பத்தின் வடிவம், அவர்களைக் கொண்டே ஒரு குடும்பம் வடிவம் பெறும், பெண்கள் சரியில்லாக் குடும்பம் நல்ல வடிவம் நல்ல கோலம் பெறா. அது அவமான கோலமாகிவிடும்.

குடும்பம் சரியாக அமைய, நல்ல வடிவில் அமைய பெண்கள் அவளை வழிபடுதல் அவசியம்.

குடும்பச் சுமையினைத் தாங்கி, குடும்பத்தின் முக்கிய ஆதாரங்களைக் காத்து எலும்பு செய்யும் அனைத்துக் காரியங்களையும் குடும்பத்துக்குச் செய்பவர்கள் பெண்கள். அதனால் அந்த அன்னையின் அருளில் எலலாப் பலமும் அவர்கள் பெறுவது அவசியம்.

அன்னையினை வழிபட்டால் பெண்களுக்குப் பொறுப்பும், சுமைதாங்கும் சக்தியும், குலம் தழைக்க உழைக்கும் சக்தியும் அதிகரிக்கும். அவள் அருளால் அவளை வணங்கும் குலம் வலிமைபெறும்.

ஆண் என்பவன் பெண்ணுக்குக் கொடுப்பது ஒருதுளி விந்துதான். அந்த விந்துவினை அழகிய உருவமாக்கி பெற்றெடுக்கும் சக்தியும் வரமும் பெண்ணுக்குத்தான் உண்டு.

குழந்தையாகப் பிறக்கும் மானுடரின் உடல் ஏழு தாதுக்களாலும் வளரவேண்டும். நல்ல உருவில் நல்ல சக்தியில் வளர்க்க வேண்டும். அதற்கு சப்த கன்னியரின் அருள் வேண்டும்.

இதுதான் மகேஸ்வரி தேவியினை வழிபடும் தத்துவம்.

அந்த அன்னைக்கு எல்லா ஆலயத்திலும் இடம் உண்டு. கிராமங்களில் எலும்புமாலை மண்டையோட்டு மாலை அணிந்தவள், கொற்றவை சாயல் தெய்வமெல்லாம் இந்த மகேஸ்வரிதான்.

அந்த வடிவைத்தான், அந்த தாத்பரியத்தைத்தான் கிராம பக்கங்களில் வேறுவடிவில் கொண்டாடுகின்றார்கள்.

இந்த மகேஸ்வரிதான் ஆயுர்தேவி என்றும் அழைக்கபடுகின்றாள்
 
Last edited:
  • Like
Reactions: uma
ஆந்த ஆயுர் தேவி பிரபஞ்சத்தின் ஆட்சி சக்தியாகவும், பராசக்தியின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறார். உலகளாவிய மற்றும் அனைத்து வியாபித்துள்ள சக்தி, மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றின் ஆதி உயிர் சக்தி அவள்.

ஆயுர் தேவி வழிபாடு சத்ய / கிருத யுகத்தின் போது நடைமுறையில் இருந்தது. ஆயுர் தேவியின் உருவம் ஆகமங்கள் மற்றும் புராணங்களில் எழுதப்பட்டுள்ளது,

இந்த அன்னைதான் மகேஸ்வரி, அவளை வழிபடுதல் எல்லோருக்கும் நன்று, குறிப்பாக பெண்களுக்கு மிகவும் நல்லது.

வாழ்க்கையின் உருவம், வடிவம் மாறும், தொழில் ஒழுங்கான வடிவம் பெறும். பெண்கள் வழிபட்டால் அவர்கள் குடும்ப நலனும் குடும்பமும் குடும்ப உறவும் முழு வடிவம் பெறும் எல்லாம் பூரண வடிவினை எட்டும்.

நல்ல அழகான வடிவத்தை எல்லா வகையிலும் அன்னை தருவாள்.

முடிந்தவர்கள் ஆலயம் சென்று அவளை வணங்கலாம், முடியாதவர்கள் வீட்டிலே அவளை நினைந்து வணங்கலாம்

அவளுக்குப் பாலில் வைத்த வெண்மையான பொங்கலும், புளியோதரையும் நைவேத்தியங்கள்.

பவளமல்லி மலர்கள், பிச்சிப்பூ, மரிக்கொழுந்து ஆகியன தூவி வழிபாடு செய்தல் நலம்.

அவளுக்கான ஸ்லோகம் இதோ.

"சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா"

அவளுக்கான மந்திரம் இதோ.

"ஓம் மாம் மாஹேச்வர்யை நம ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம" இதைச் சொல்ல சொல்ல எல்லா வகையிலும் அது தொழில், குலம், சொந்தம், நிர்வாகம், வீடு என எதெல்லாம் உருவமின்றி வடிவமின்றி ஒழுங்கின்றி இருக்குமோ அதெல்லாம் ஒழுங்கு பெறும்.

அவளுக்கான காயத்திரி மந்திரம் இதோ. இதைத் தினமும் சொல்ல சொல்ல எலும்புகள் பலம் பெறும், குடும்பமும் தொழிலும் நல்ல வடிவம் பெறும், உறுதியான கடுமையான உழைப்பினைத் தடையின்றி செய்ய முடியும்.

முக்கியமாக எதையும் சுமக்கும் பெரும் பலம் மனதாலும் உடலாலும் வாய்க்கும்.

"ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.”

என்பது அவளின் காயத்திரி மந்திரம். இதைச் சொல்ல சொல்ல ஆக்ரோஷம் கோபம் நிதானமின்மை எல்லாம் அழிந்து எருது எந்தக் களைப்பும் வன்மமும் இன்றி உழைப்பது போல உழைக்கும் மனநிலை மட்டும் வாய்க்கும்.

"அருள்மழை பொழியும் சுடர் மணி விழியே
ஆலவாய் கூத்ர ஒளியே உமையே
வருவினை தீர்க்கும் ஜெகத்ஜனனி நீயே
வைகை தலைவியே சரணம் தாயே"
 
  • Like
Reactions: uma
Back
Top
Developed and maintained by – Akeshya