குளிர் பௌர்ணமி தூறலில் - அறிவிப்பு

புதிய வரவுக்கு வாழ்த்துக்கள் ❤️ 💜💜 💜 💜 சரண் ஜீ.
பேரு சூப்பர் ப்பா 🥰 🥰 🥰.
என்ன பண்றது அடுத்த ஆடு ரெடியாகுது. பொங்கல் வச்சு வெட்டிற வேண்டியதுதான்.ஈரோப்பயலே வாடா வாடா😆😆😆
 
🌕 குளிர் பௌர்ணமி தூறலில்…

குளிர் பௌர்ணமி தூறலில் நின்றேன்,
உன் நினைவின்
நிழல் தழுவி
நெஞ்சம் நனைந்தது...

காத்திருப்பின் குளிர் துளிகள்
கனவின் தீப்பொறிகளை அணைக்க முடியவில்லை...

சில்லென்று விழுந்த
ஒவ்வொரு துளியிலும்
உன் பெயரின் எழுத்து விழுந்தது...

நெஞ்சம் அதை
நினைத்து வாசிக்கும் போதே
நிம்மதியாய் உருகியது...

இணை சேரா உயிர்களின் வலியில்
இணைவு தேடும் ஆனந்தம் வழியில்....

விழிக்கும் தருணம்
பூமியும்
வானமும் சேரும் நிமிடமாய் இருக்கும்...

உறவும் உணர்வும் —
இரு சொற்கள் அல்ல,
இரு இதயங்களின் ஓர்
மௌன மொழி,
ஒரே தாளத்தில் துடிக்கும் துடிப்பு...

நிழலாய் தொடரும் நீ,
நிஜம் தீண்டிடும் என் ஆருயிர்...
நம் நேசம் ஒரு பயணமல்ல,
அது நித்தியமான இரு உயிர்களின் ஒற்றுமை பாதை....

✍️ அப்சரீஸ் பீனா லோகநாதன்


வாழ்த்துக்கள் மா 💐 👏🏻 ❤️❤️❤️😘
 
Back
Top
Developed and maintained by – Akeshya