டேஸ்டுக்கும் குறைவில்லாம, அதிக பொருட்களின் தேவையும் இல்லாம, நேரமும் மிச்சப்படும் ஒரு ஈஸி சாம்பார்.
பாசிப்பருப்பு இரண்டு கைப்பிடி, ஒரு மீடியம் சைஸ் பெரிய வெங்காயம், இரண்டு தக்காளி, துளி பெருங்காயத்தூள், தேவையான அளவு சாம்பார் பொடி. இந்தளவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி போதும்.
எல்லாம் சேர்த்து ஒரு குக்கர்ல ரெண்டு விசில் விட்டு எடுங்க. பருப்பு குழையாம மலர்ந்து இருக்கனும்.
உப்பு தாளிக்கும் போது சேர்த்தா போதும்.
தாளிக்க :
கடுகு, உளுந்து, வெந்தையம், சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிச்சுக்கொட்டிட்டா சூப்பர் சாம்பார் ரெடி.
இட்லி, தோசை, பொங்கலுக்கு நல்லா இருக்கும்.
இதையே தக்காளி ஒன்னு மட்டும் சேர்த்து கெட்டியா கடைஞ்சு எடுத்தா சப்பாத்தி, பூரிக்கும் கூட சாப்பிடலாம்.