கவிதையாய் ஒரு காதல்

#காதலும்_கவிதையும்

தபூ சங்கரோட கவிதைகள் மேல கல்லூரி காலத்துல எனக்கு அதீத ஈர்ப்பு இருந்துச்சு...

ரொம்ப பெரிய அர்த்தம் புடிபடாத வார்த்தைகள் எல்லாம் போட்டு எழுத மாட்டார்... ரொம்ப ரொம்ப எளிமையான வார்த்தைகள் தான்.... ஆனால் ஒவ்வொரு வார்த்தைகளிலும் காதல் தழும்பி வழியும்...

அந்த கவிதைகளை படிச்சாலே போதும்... சும்மா போகுற யாரையாவது கூப்பிட்டு வச்சு ப்ரோபோஸ் பண்ணி உடனே காதல் ங்கிற வார்த்தைய அனுபவிக்க வேண்டி நம்மளை தூண்டும்..... சுருக்கமா சொல்லனும்னா காதலிக்க நம்மை உந்தும் ஒரு உந்து சக்தி அவரோட கவிதைகள்.... அவற்றில் சில,

ஒரு வருட உலக அழகிகளே
ஒதுங்கி நில்லுங்கள்
என் ஆயுட்கால உலக அழகி
வருகிறாள்.

எதை கேட்டாலும்
வெட்கத்தையே பதிலாக தருகிறாய்
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்?

இந்த மாதிரி அவரோட கவிதைகள் என் நினைவடுக்குகள்ல எங்கயாவது ஒரு ஓரமா இருந்துகிட்டே தான் இருக்கும்.... காரணம் எளிமையும் காதலும் தான். ஆனா ரொம்ப நாளா அத நான் மறந்திட்டேன்.

உனதாகிடும் ப்ரியங்கள் கதை படிக்கிறப்போ எனக்குள்ள மீண்டும் அந்த கவிதைகள் கண் முன்ன வந்து போச்சு... திரும்புவும் எடுத்து வாசிச்சேன்.... இன்னும் மனசு லேசாச்சு ....

இந்த கதைக்கும் அந்த கவிதைகளுக்கும் அனேக ஒற்றுமை உண்டு. ரெண்டோட மையப் புள்ளியும் காதல் காதல் காதல் மட்டும்தான்....

பார்த்து ,பேசி ,தொட்டு ,அணைத்து அப்படி இருக்க காதல்ல இல்லாத சுவராசியம் இந்த காதல்ல உண்டு.
இதுல காதலோட தொடக்க புள்ளி எதுன்னு தெரியாது. ஆனா பெரும் பிரளயத்திற்க்கு பிறகு இந்த பிரபஞ்சம் தன்னைத் தானே மீட்டெத்து அதன் இயல்பு திரும்புற மாதிரிதான் இவங்க காதலும் ....

ரெண்டு உள்ளம் அதுல ஏற்பட்ட பிரளயம்... அதன் பின் பிடித்தம் உணர்ந்து ஒரு பிரிவு.... தேடல்.... தவிப்பு.... யாசிப்பு.... எதிர்ப்பார்பு.... எக்கசக்க உணர்வு போராட்டம் கடைசியில கைசேர்தல் ....

ரொம்ப அழுத்தமான காதல்கள் தான் நம்ம மனசுல அழமா பதியும்....
அதுமாதிரி உணர்வுகள்ல தத்தளிச்சு பின் உணரும் நேரம் வரை இந்த இருவருடைய காதலும் நம்மை ஆட்டிபடைச்சிடுச்சு....

பெயர் உச்சரித்தல்லயே ஒரு பெருங்காதல் ஒளிஞ்சு இருக்கிறது இவங்ககிட்ட மட்டும் தான்.....
பார்த்தாலே பசி தீர்ந்திடும் மாதிரி இவங்க ரெண்டு பேரும் நினைவுகள்லயே ஒரு பெரும் காதல் சுவர் எழுப்பிட்டாங்க.....

ரெண்டு பேரும் பேசிக்கிற ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு கவிதையா தான் தெரிஞ்சிச்சு.... இந்த அழுத்தமான காதல் அது சேர வேண்டிய இடத்தை அடைந்ததில் மகிழ்ச்சி....

காதலில் அழுத்தமும் பேரழகு தான்...... ரொம்ப ரொம்ப இதம் சேர்த்த கவிதையாய் ஒரு காதல் கதை....

ஒவ்வொரு வார்த்தையும் லவ்லி....
ஏனோ தெரில... இந்த கதை முடிய முன்ன இத பதிவு பண்ண என்னோட instinct சொல்லிட்டே இருந்துச்சு .... பதிஞ்சிட்டேன்...

கவிதையாய் ஒரு காதல்.....
காதலாய் ஒரு கவிதை -

♥️ ப்ரியங்களுடன் ஸ்வாஹதம்♥️
super sis nanum kavithai ellam padichuruken an intha mathiri mind le nikkura alavuku ila 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ nice
 
காதலித்தால் கவிதை வருமாம் தபு சங்கரின் கவிதைகள் அவரின் காதலை காட்டுகிறது அவரின் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஒரு கவிதை துளி உங்கள் பதிவின் வழி
 
Back
Top
Developed and maintained by – Akeshya