உப்புச்சாறுக்கு தேவையான பொருட்கள்
நெத்திலி கருவாடு - ஒரு கை நிறைய
சூடன் கருவாடு - ரெண்டு போதும். (வாசத்துக்கு)
சின்னவெங்காயம் - ஒரு கைப்பிடி
பச்சைமிளகாய் - காரத்திற்கு ஏற்ப
தக்காளி - 1
மாங்காய் - 1 (தேவைனா போடலாம்)
புளி - சிறு எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு
தேங்காய் எண்ணைய்
மாங்காய் புளிப்பா இருந்தா புளியை குறைச்சுக்கலாம். ஆனா புளிப்பும் உரைப்பு ஈக்வலா இருக்கனும்.
கருவாடு ரெண்டையும் க்ளீன் பண்ணி வெந்நீர்ல போட்டு மணல் தூசு இல்லாம கழுவி எடுத்துக்கனும்.
மண்சட்டில தேங்காய் எண்ணைய் ஊத்தி ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கினது, தேவையான பச்சை மிளகாயோட கூட ரெண்டு மிளகாயும் சேர்த்து வதக்கனும்.
ரொம்ப பொன்னிறமா ஆகனும்னு இல்லை. வதங்கினதுல ஒரு நாட்டு தக்காளியை கட் பண்ணி போட்டு, உப்பு சேர்த்து வதக்கனும்.
அடுத்ததா அதுல கருவாடை போட்டு லேசா உடையாம 2 நிமிஷம் பிரட்டிவிட்டுட்டு கரைச்ச புளித்தண்ணியை ஊத்தி மாங்காயும் போட்டு கொதிக்கவிடனும்.
நல்லா பச்சை வாசம் பிற வரை கொதிச்சு மிளகாய் புளிப்பு கலந்து ஒரு அற்புதமான வாசனை வரனும்.
கொதிப்பு அடங்கினதும் சுட சுட சாதத்துக்கு ஊத்தி சாப்டுங்க சாப்டுங்க சாப்ட்டுட்டே இருங்க
சூடன் கருவாடு ஒண்ணு, ரெண்டு போட்டாலே போதும். ரொம்ப ருசியை கூட்டும். கிடைக்காதபட்சத்துல தேவையில்லை.
எங்கம்மா இந்த உப்புச்சாறுக்கு தேங்காய் துவையல் செய்வாங்க தொட்டுக்க.
பொரிகடலை கம்மியா நிறைய தேங்காய், பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து. ரொம்ப நல்லா இருக்கும்.
ஆனாலும் நான் இதுக்கு சைடிஷா நெய்மீன் துண்டு கருவாடு நிறைய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு பொரிச்சுடுவேன்
தேங்காய் எண்ணைய் தான் யூஸ் பண்ணனும்னு இல்லை. சமையல் எண்ணைய் எதுவானாலும் யூஸ் பண்ணிக்கலாம்.
ஆனா தேங்காய் எண்ணெய்க்கு ஒரு டேஸ்ட். நான் இதுக்கு அதான் யூஸ் பண்ணுவேன்.
நல்லெண்ணெய் இதோட டாமினேட் பண்ணிடும். அதை மட்டும் தவிர்த்திடலாம்.
இந்த மாதிரியான மழை நேரம், குளிருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப சூப்பரான சாப்பாடு.
கருவாடை எத்தனை விதமா கருவாடு குழம்பு, கூட்டு, பொரியல், தொக்கு வகை செஞ்சாலும் எதுவுமே உப்புச்சாறுக்கு பக்கத்துலையே வரமுடியாது