என்னால் முடியும் ஏன் உன்னால் முடியாத - 2

Crazy Queen

Active member
உன்னை நீயே
பலவீனமாக்காதே . .!

உன்னுள் உள்ள உயிர் ஆற்றலை இயக்கு. .!

உன்னுள் புதைந்திருக்கும்
திறமையைச் செயலாக்கு!

இது வெல்பவர்களின்
உலகம்.. !

இது வெல்பவர்களுக்கான
உலகம் !

இங்கே தோற்றவரைகளைக்
கண்டு கொள்வதில்லை !

இங்கே புலம்புவர்களை
யாரும் மதிப்பது இல்லை!

இங்கே அழுபவர்களை ஆறுதல்படுத்துவதில்லை !

உங்களுக்கு உதவிட
எவரும் வரப் போவதில்லை.!

மனிதரைகளை நம்பி
நேரத்தை வீணாக்காதே !

நீயே விழுந்தாய் . .
நீயே எழுந்திரு !

நீயே தோற்றாய் . . .
நீயே வெல் !

நீயே அவமானப்பட்டாய் . .
நீயே மரியாதை அடை !

இங்கே வாழ்க்கையை
வாழச் சொல்லிக் கொடுக்க யாரும் முன் வருவதுயில்லை.

அவர்கள் வாழ்வதற்கே
வழி தேடி அலைகிறார்கள்.

நீ திடம் கொள்..!
தீர்க்கமாய் இரு..!

உனக்குள் இருக்கும்
உன்னையே அறிந்து
தெளிந்து செயலாக்கு.

வாழ்க்கை உன் வசம்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya