சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 1
ஐந்து பல் உரிச்ச பூண்டு
மல்லி - ரெண்டு டேபிள் ஸ்பூன்
மிளகு - மூணு டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - பத்து
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
வறுக்க
மல்லி, மிளகு, வரமிளகாய் மூணையும் எண்ணை விடாம வறுத்து அரைக்கும் போது ஐந்து பல் பூண்டு சேர்த்து தண்ணி விடாம அரைச்சு பொடி செய்துக்கனும்.
ஒரு கடாயில் எண்ணை ஊற்றி ( நல்லெண்ணெய் தவிர எதுவானாலும். தேங்காய் எண்ணை நல்லா இருக்கும் ) பொடியா நறுக்கின வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நல்லா வதக்கனும்.
வெங்காயம் வதங்கினதும் அதில் சிக்கனை சேர்த்து கூடவே மஞ்சள் தூள், உப்பும் சேர்த்து நல்லா கிளறிக்கனும்.
சிக்கன் லேசா வதங்கி தண்ணி பிரியும் போது அரைச்சு வச்ச பொடியை சேர்த்து கால் க்ளாஸ் தண்ணி சேர்த்து கிளறி மூடி வைக்கனும்.
தண்ணி எல்லாம் வத்தி மசால் சிக்கனோட ஒட்டி சுருண்டு வரனும். மல்லிதழை, கறிவேப்பிலையை குட்டியா நறுக்கி தூவி விட்டா பெப்பர் சிக்கன் ரெடி
நான் இந்த வறுக்கற மசாலாவை மொத்தமா வறுத்து அரைச்சு ஏர் டைட் பாக்ஸ்ல போட்டு ப்ரிட்ஜ்ல வச்சுப்பேன். ரெண்டு மூணு மாசத்துக்கு வரும்.
எப்போ வேணாலும் டக்குன்னு செஞ்சிடலாம்.
இதே பொடி வச்சு இதே மெத்தட்ல காளான் செய்யலாம். சூப்பரா இருக்கும்
காலிஃப்ளவர் ட்ரை பண்ணேன். ஆனா அந்தளவுக்கு செட் ஆகல.
ஒருதடவை செஞ்சு பாருங்க