எனக்கு ரொம்ப பிடிச்ச ஆந்திரா ரெஸிபி
ரொய்யலு, ரொய்ப்புட்டுன்னு சொல்லுவாங்கலாம். நமக்கெதுக்கு?
டேஸ்ட்டா இருக்கா? அது போதாதா?
ஒரு ஆன்ட்டி எனக்கு செஞ்சு காமிச்சாங்க. அப்ப இருந்து என்னோட பேவ்ரெட் ஆகிருச்சு.
மத்யானம் லஞ்ச்க்கு மீனும் இறாலும் எடுத்துட்டு வந்தவங்க கூடவே எனக்கு பிடிக்குமேன்னு இறால் கருவாடும் வாங்கிட்டு வந்துட்டாங்க.
வேலை வைக்கிறதே வேலையா போச்சுன்னு நினச்சாலும் கையை வச்சுட்டு, பார்த்துட்டு செய்யாம இருக்கமுடியாதே
கையும் சும்மா இருக்காது. சமையலை முடிக்கும் போதே கையோட பாக்கெட்டை உடைச்சு தண்ணில ட்ரை ப்ராவ்னை போட்டுட்டேன்.
ஒரு அரைமணி நேரம் ஊறவிட்டாச்சு. மார்க்கெட்ல வாங்கினா மணல் இருக்கும்.
பாக்கெட்ல க்ளீன் பண்ணியே இருக்கறதால ரொம்ப சிரமம் இல்லை.
ரெண்டு மூணு அலசுல எடுத்திடலாம். மணலும் இருக்காது.
இப்ப ரொய்யலு செய்ய போலாம்
100 கிராம் பாக்கெட். இறால் ரொம்ப குட்டியா இருக்கும்.
ஒரு பெரிய பல்லாரி வெங்காயம்.
தக்காளி மீடியம் சைஸ் 2
ஒரு பெரிய எலுமிச்சை அளவு புளி திக்கா கரைச்சு எடுத்துக்கனும். புளிப்பு ரொம்ப முக்கியம்
காஷ்மீரி சில்லி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
ஒரு மாங்காய்
உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை தேவையான அளவு.
பாத்திரத்தை வைங்க. எண்ணெய் ஊத்தி வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து உப்பு போட்டு நல்லா வதக்கனும்
பொன்னிறமா மாறவும் தக்காளி சேர்த்து நல்லா மசிய வதக்கி அதோட மாங்காய், கழுவி வச்ச இறால் கருவாட்டை சேர்த்து பிரட்டிவிட்டு காஷ்மீரி சில்லி பவுடர், குழம்பு மிளகாய் பவுடர் சேர்த்து பிரட்டி தீயை குறைச்சிட்டு ரெண்டு நிமிஷம் மூடி வைக்கனும்.
அடுத்து புளியை ஊத்தி கொதிக்கவிட்டு தொக்கு பதத்துல வரவும் எண்ணெய் பிரிஞ்சு வரும். வாசமாவும் இருக்கும்.
சூடான சாதத்துல ரெண்டு ஸ்பூன் இந்த தொக்கை போட்டு சாப்ட்டா சும்மா அள்ளிரும்
ரொம்ப டைம் எடுக்காது. சட்டுன்னு செஞ்சிடலாம்.
காரம், புளிப்பு எல்லாம் அளவு கரெக்ட்டா இருக்கும்.