ஒரு கப் பாசிப்பருப்பு
ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
ஒன்றரை கப் சர்க்கரை
அரை கப் நெய்
கேசர் எல்லோ கலர்
ஏலக்காய் தூள் சிறிதளவு
தேவையான அளவு முந்திரி பருப்பு
செய்முறை
முதலில் குக்கரில் பாசிப்பருப்பை அரை ஸ்பூன் நெய் விட்டு லேசாய் வறுத்து லேசாய் சிவந்ததும் தண்ணீர் ஊற்றி மசிய வேக வைக்க வேண்டும்.
தண்ணீர் பருப்பு மூழ்கும் அளவிற்கு தான். வெந்த பருப்பு ஆறியதும் நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு அதில் முதலில் முந்திரியை வறுத்து தனியே எடுத்துவைத்துவிட்டு கோதுமை மாவை போட்டு வாசம் வரும் வரை மிதமான தீயில் கிளற வேண்டும்.
அதில் அரைத்து வைத்த பாசிப்பருப்பை சேர்த்து ஐந்து நிமிடம் போல நன்றாக கலந்து கிளற வேண்டும்.
பின் அதில் சர்க்கரையை சேர்த்து கரைந்ததும் கட்டியில்லாமல் கிளறிக்கொண்டே மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாய் சேர்க்கவேண்டும்
நன்றாக பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரவிருக்கும் நேரம் கேசர் எல்லோ கலரை சேர்த்து கிளற வேண்டும்.
இறக்கும் முன் ஏலக்காய் தூளை சேர்த்து அல்வா பதத்தில் வரவும் இறக்கவேண்டும்.
பதம் : கிளறி எடுக்கும் பொழுது துண்டு விழும் பதம்.
கலர் சேர்க்க விருப்பம் இல்லனா குங்குமப்பூ கூட சேர்க்கலாம்
இது தான் நான் செய்யற முறை. சில நேரம் பாசிப்பருப்பை அரைக்காம நல்லா ஸ்மாஷர்ல மசிச்சு விட்டும் செய்வேன். லேசா தெக்கை தெக்கையா அதுவும் ஒரு சுவையோட இருக்கும்.