விட்டாலும் விலகாதே! - Intro

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
"விட்டாலும் விலகாதே!"
கதையை திங்கள்(18Aug) அன்று தொடங்குகிறேன்.. இப்போது கதைக்கு சிறு முன்னுரை:

பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும், சுட்டித் தனம் நிறைந்த திவ்யா நம் கதையின் நாயகி.. அவளைச் சுற்றியே கதை சுழலும்.. தனது பதினைந்தாவது வயதில் தன் பிறப்பின் ரகசியத்தை அறிந்துக் கொள்ளும் திவ்யா உறவுகளை விட்டு விலக, உறவுகள் அவளை விலக விடாமல் தடுக்க முயற்சிக்கிறது. இயல்பிலேயே சுட்டித்தனம் நிறைந்தவள் தன்னைத் தானே தேற்றிக் கொள்வதற்காகவும் உறவுகளை விலக்குவதற்காகவும் மேலும் பல வம்புகளை செய்ததின் பலனாக ஆசிரியர்கள் அவளை கண்டாலே மனதினுள் அலறுகிறார்கள்.

இப்படிப் பட்ட திவ்யா மனதினுள் நுழைகிறான் ஹரீஷ்.. முதலில் அவளது காதலை மறுப்பவன் தன் காதலை அவளிடம் சொல்லும் போது அவள் இவனை விட்டு விலக நினைக்கிறாள்.. அதன் பிறகு ஹரீஷ் திவ்யாவை தன்னை மட்டுமன்றி உறவுகளிடம் இருந்தும் விலக விடாமல் எப்படி இணைக்கிறான் என்பதை பற்றிய கதை தான் “விட்டாலும் விலகாதே!!”

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
Last edited:
Welcome goms. எத்தனை முறை போட்டாலும் படிப்போம். கோம்ஸ்.
மிக்க மிக்க நன்றி ஸ்ரீமா:-)
திங்கள் முதல் திவ்யாவின் கலாட்டாக்கள் ஆரம்பம்..........
-கோம்ஸ்.
 
😍😍😍

ஹரீஷ், திவ்யாவை தன்னிடமிருந்தும், உறவுகள்கிட்ட இருந்தும் விலக விடாம இணைக்கிறான்... எனக்கு யாராவது இந்த @உதயா பிள்ளைக்கிட்ட இருந்து விலக உதவி பண்ணுவாங்களா? 🤔🤔🤷🤷
 
😍😍😍

ஹரீஷ், திவ்யாவை தன்னிடமிருந்தும், உறவுகள்கிட்ட இருந்தும் விலக விடாம இணைக்கிறான்... எனக்கு யாராவது இந்த @உதயா பிள்ளைக்கிட்ட இருந்து விலக உதவி பண்ணுவாங்களா? 🤔🤔🤷🤷
திவ்யா கிட்ட training போங்க சிஸ் 😜
 
😍😍😍

ஹரீஷ், திவ்யாவை தன்னிடமிருந்தும், உறவுகள்கிட்ட இருந்தும் விலக விடாம இணைக்கிறான்... எனக்கு யாராவது இந்த @உதயா பிள்ளைக்கிட்ட இருந்து விலக உதவி பண்ணுவாங்களா? 🤔🤔🤷🤷
 
Back
Top
Developed and maintained by – Akeshya