Narmadha mf
Well-known member
கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதைக்களம் சுவாரஸ்யத்துடன் நகர்ந்து மகிழ்ச்சியில் நிறைந்து மனதிற்கு நெகிழ்ச்சியை கொடுத்தது




.
மகிழ் கொற்றவன்: 

கனிவும், பணிவும், நேர்மையான குணமும் கொண்ட நல் மருத்துவன். உறவுகள் என்னும் பெயரில் சில அற்ப ஜென்மங்களின் சதியினால் தனிமையும், இயலாமையும் கொண்டு தவித்தவன். தந்தை அன்பிற்கும் தாயின் முழு அரவணைப்பிற்கும் ஏங்கிய மழலையாய் இவனின் எதிர்பார்ப்புகள் பொய்த்து போனது வலியை கொடுத்தது. வடிவழகி பாட்டியின் மூலம் தைரியத்துடன் வளர்க்கப்பட்டு தனக்கான பாதையை மேன்மையுடன் வடிவமைத்து அதில் பயணிக்கும் மருத்துவனின் உள்ளம் கொள்ளை அழகு. தான் பெறாத இன்பத்தையும், ஏக்கத்தையும், பாசத்தையும் நிவர்த்தி செய்ய அதிரடியாய் தன் வாழ்வில் நுழைந்த அதிர்ஷ்ட தேவதையின் வரவினால் மகிழ்ந்து கொண்டாடியவனின் மகிழ்ச்சி நெகிழ்ச்சியை கொடுத்தது. தக்க தருணத்தில் தன் தேவதையின் உயிர் மற்றும் மானத்தை காத்து அவளின் ஒவ்வொரு செயலுக்கும் தோள் கொடுத்து உறுதுணையாக இருந்து சிறந்த கணவனாகவும் ஜெலித்தான்.
லயனிகா ஸ்ரீ:

அழகும், அறிவும், துணிவும், மேன்மையும் நிறைந்த தேவதை.தன்னை சுற்றியுள்ள சூழ்ச்சி நிலையையும், ஆபத்தையும் கண்டு அஞ்சாமல் வீர மங்கையாய் பிரகாசித்து நல் உள்ளங்களின் பாதுகாப்பு மற்றும் உறுதுணையுடன் வெற்றி கனியை எங்கும் நிலை நாட்டும் இவளின் பாங்கு வெகு அழகு. தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய மருத்துவன் தன் வாழ்வின் நாயகன் என்று தெளிவு பெற்று அவனது துன்பத்தை போக்கி இன்பத்தை வழங்கி மனதை கொள்ளை கொண்டாள் 

.
தன்னவனை மட்டுமின்றி அவனது குடும்ப உறவுகள் நலத்தையும் விரும்பி அவர்களுக்காக இவள் செயல் படுத்திய விடயங்கள் அதி அற்புதம் 
.
மகிழ்கொற்றவன் மற்றும் லயனிகாஸ்ரீ இதே புரிதலுடன் பேரன்புடன் இனிமையான மதுரகீதத்துடன் செழித்து வாழ வாழ்த்துக்கள் 







.
தயாளன் :உண்மையில் என்ன சொல்ல மிகவும் சிறந்த மனிதன். தன் உயிரிலும் மேலான உடன் பிறவா தங்கை மற்றும் தோழிக்காக பாதுகாவலனாக நலம் விரும்பியாக பல கோணங்களில் மனதை கவர்ந்தார்.ஆரியன் உடனான பந்தம் நெகிழ்ச்சியை கொடுத்தது. 

மலர்கொடி :என்ன சொல்ல இவரது நிலை மனதை மிகவும் ரணப்படுத்தியது., இருப்பினும் லயனிகாவின் நல் போதனையின் படி படிப்படியாக தம்மை மீட்டு கொண்டு தனக்கான தெளிவான பாதையை நோக்கி முன்னேறியது நிம்மதியை கொடுத்தது.
வடிவழகி:போற்ற பட வேண்டிய தெய்வம். 





கோமதி நாதன் -தனலட்சுமி :கோமதிநாதன் :நிதர்சனம் உணர்ந்து செயல்படும் நல்மனிதர் 



.
தனலட்சுமி :சூழ்ச்சி வலையில் சிக்கி புத்தி மாறி உடன் பிறந்தவர்களை வதைத்தாலும் உண்மை நிலையை அறிந்து குற்ற உணர்வில் கதறி தம்மை முழுமையாக மாற்றிக் கொண்டது பெரும் நிம்மதியை கொடுத்தது.
தர்மலிங்கம்: இன்னும் சற்று தெளிவுடன் நடந்திருந்தால் அனர்த்தங்களை நிகழாமல் தடுத்திருக்க முடியும், என்ன செய்ய விதி பலன் அனுபவிக்க வேண்டிய கட்டாயம்.
கனிமொழி :நரி வலையில் சிக்கிய அபலைவைத்தியலிங்கம்: பிசாசுக்கு வாக்கப்பட்ட பாவப்பட்ட ஜீவன்.
பத்மாவதி, அபிராமி உண்மையில் உடன்பிறந்தவர்களுக்கு இவ்வளவு கொடும் பாவத்தை செய்து தாங்கள் மனித பிறவி அல்ல என்பதை நிரூபித்து உள்ளனர்




.
நவீனா, ரிதன்யா: உண்மையான நட்புகள்
@GomathyArun மென்மேலும் பல அழகிய படைப்புகளை வாசகர்களுக்கு வழங்கி சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்
Last edited:
