களாக்காயை கழுவி நைட்டே ரெண்டா கட் பண்ணி கல் உப்பு போட்டு ஊறவச்சிடனும்
களாக்காயோட விதை வேணும்னா வச்சுக்கலாம். இல்லைன்னா எடுத்திடலாம்.
இதை ரெண்டா நறுக்காம லேசா கீறிவிட்டு முழுசாவும் போடலாம்.
மறுநாள் ஊறகாய் செய்ய கடுகு, வெந்தயம் வறுத்து இடிச்சு வச்சுக்கனும்.
கடாய்ல நல்லெண்ணெய் விட்டு கடுகு, உழுந்து, கறிவேப்பிலை தாளிச்சு அதுல ஊறவச்ச காயை போட்டு பெருங்காயத்தூள் தூவி இடிச்ச கடுகு, வெந்தய பொடியை தூவி தண்ணியில்லாம வேகவிடனும் எண்ணெய்லயே.
உப்பு ஊறவைக்கும் போது போட்டதே இருக்கும். தேவைன்னா ரெண்டாவது சேர்த்துக்கலாம்.
நல்லா எண்ணெய்ல காய் சுருண்டு வரவும் அடுப்பை ஆஃப் பண்ணிட்டு அந்த சூட்டோட மிளகாய் தூள் தூவி கிளறிவிட்டு ஆறவும் கண்ணாடி பாட்டில்ல மாத்திடனும்.
ஊறுகாய் நல்லா ஊற ஊற அந்த டேஸ்ட் இருக்கே


